தமிழ் சமூகத்தின் புரட்சி மிக்க அபிவிருத்திக்கான விஞ்ஞாபனம் என சமூகத் தலைவர்கள் பாராட்டு.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஏப்ரல் 8ம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகின்ற நிலையில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை உத்தியோக பூர்வமாக வெளியிட்டது கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மதகுருமார்கள் சமூகப் பெரியார்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். தமிழ் சமுகத்தின் புரட்சிமிக்க எதிர்கால அபிவிருத்திக்கான விஞ்ஞாபனமாக இவ் விஞ்ஞாபனம் காணப்படுவதாக சமூக தலைவர்களின் பாராட்டை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment