3/19/2010

அன்பார்ந்த புலம் பெயர் வாழ் தமிழ் பேசும் உறவுகளே!

அன்பார்ந்த புலம் பெயர் வாழ் தமிழ் பேசும் உறவுகளே!boat-copy2 எதிர்வருகின்ற ஏப்ரல் மாதம் 08ம் திகதி இடம்பெற உள்ள பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளாகிய நாம் தனித்து களமிறங்கியுள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல இலங்கையில் பல பாகங்களிலும் எமது கட்சி இத்தேர்தலின் ஊடாக தன்னை விரிவு படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து குறுகிய கால இடைவெளிக்குள்ளேயே மக்களின் இயல்பு வாழ்வையும் ஜனநாயகச் சூழலையும் மீளக்கட்டியமைப்பதில் நாம் வகித்த பங்கு அளப்பரியது என்பது உலகு அறிந்த உண்மையாகும். இதற்கு எமது கட்சியும் கட்சி உறுப்பினர்களும் தலைமைப்பீடமும் கொண்டிருந்த ஜனநாயகத்தின் மீதான பற்றுறுதியும் அர்ப்பணிப்புகளுமே அடிப்படைக் காரணங்களாகும்.
கிழக்கு மாகாண சபையை உருவாக்குவதிலும் அதனை திறன்பட இயங்கச் செய்வததிலும் நாம் மும்முரமாக செயற்பட்டோம். கடந்த 30வருட போராட்டங்களில் விளைவுகளாக அழிவுகள் மட்டுமே எஞ்சி நிற்கின்ற இன்றைய நிலையில் எமது மக்களுக்காக கிடைத்துள்ள மிகக் குறைந்த பட்ச தீர்வாக “மாகாணசபை முறைமை” மட்டுமே எஞ்சியுள்ளது. இன்று அரசியலில் பலவீனமானதொரு நிலையில் தமிழ்தலைமைகள் காணப்படகின்றதன் காரணமாக மாகாண சபையை தாண்டிய எந்த ஒரு தீர்வுத் திட்டங்களையும் எமது மக்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் மிக அரிதாகவே உள்ளன. எனவே இன்றுள்ள மாகாண சபையை காப்பாற்றி கொள்வதும் அதனை பலப்படுத்துவதும் ஒன்றே எம்முன்னுள் உள்ள ஒரே தெரிவாகும் அதனடிப்படையில் கடந்த காலங்களில் மாகாண சபையின் உருவாக்கத்திற்காக எமது கட்சியானது அரசுடன் இணைந்து ஒரு கௌரவமான பங்காளியாக செயற்பட்டு வந்திருக்கின்றது. ஆனாலும் கிழக்கு மாகாண சபைக்குரிய அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் நாம் ஒருபோதும் பின்நிற்கவில்லை அதற்காக பல தடவைகளில் மத்திய அரசுடன் நாம் கடுமையாக முரன்பட்டுக்கொண்ட தருணங்களும் இருந்தன என்பது நீங்கள் அறிந்ததே,
இன்றைய நிலையில் நாம் எதிர்கொண்டுள்ள பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சியானது தனித்து போட்டியிடும் முடிவு கூட மத்திய அரசுக்கு உவப்பானது அல்ல என்பதையும் நீங்கள் அறிவீர்கள். கடந்த  காலங்களில் அரசியல்  ரீதியான,  காலத்தின்  தேவைக்கேற்ப  அரசாங்கத்துடன்  இணைந்து  தேர்தலை  சந்தித்த  தமிழ்;மக்கள்  விடுதலைப்புலிகள்  கட்சியானது  இன்றைய  காலத்தின்  தேவையுணர்ந்து  தனித்து போட்டியிடுகின்றது. புதிதாகப்  பொறுப்பேற்கும்  அரசாங்கத்திடமிருந்து கிழக்கு மாகாணசபைக்குரிய முழுமையான  அதிகாரங்களைப்  பெற்றுக்  கொள்வதற்கான வலுவானதொரு பேரம் பேசும் சக்தியாக தன்னை இனம் காட்டமுனைகிறது. தமிழ்  சமூகத்தின் பலமான அரசியல் அடையாளமாக  விளங்குகின்ற  இக்கட்சியின்  தனித்துவம் தொடர்ந்தும்  பேணப்படுவதற்காகவும் அதிகாரமிக்க மாகாணசபையினைக் கட்டியெழுப்பவும் இப்பாராளுமன்றத் தேர்தலினூடாக  மக்கள்  ஆணையை  கோருகின்றோம். இந்த ஆணையினை வழங்கவேண்டியது எமது  பிரஜைகள் ஒவ்வொரவரதும் வரலாற்றுக் கடமையாகும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 20 கட்சிகளும் சுமார் 20 சுயேற்சைக்குழுக்களுமாக நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கின்ற இந்த தேர்தலை நாம் மன மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கின்றோம். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள ஜனநாயகத்தின் மலர்ச்சிபற்றி நாம் பெருமைப்படுகின்றோம்.
ஆனபோதிலும் அதிகாரம் மிக்க கிழக்கு மாகாண சபையை கட்டியெழுப்ப தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளாகிய நாங்கள் மட்டுமே தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றோம் என்பதனை நிங்கள் அனைவரம் கவனத்தில் கௌ;ள வேண்டும். இத்தேர்தலில் பழம்பெரும் கட்சிகளுக்கும் தேசிய கட்சிகளுக்கும் மத்தியில் வளர்ந்துவரும் கட்சியாகிய நாம் மிகப்பெரிய போட்டியை சந்தித்துள்ளோம். பல்வேறு கட்சிகளாலும் பல கோடி ரூபாய்கள் தேர்தலுக்காக கொட்டி இறைக்கப்படுகின்ற நிலையில் எமது கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல எமது கட்சியின் நிதி வளம் பெரும் தடையாக இருக்கின்றது.
எனவே கடந்த காலங்களில் உரிமைக்குரலின் பெயரி;ல் நீங்கள் அளித்து வந்த நிதி ஆதரவு யுத்தத்திற்காகவும் அழிவிற்காகவும் மட்டுமே பயன்பட்டது. ஆனால் உண்மையில் எமது மக்களின் அதிகாரங்களை வென்றெடுக்க இன்று நாங்கள் எழுப்பும் குரலுக்கு உங்களது பங்களிப்பு வழங்கப்படுமானால் அது எமது மக்களுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும். எனவே எமது புலம் பெயர்வாழ் மக்களே உங்களிடம் எமது கட்சியானது தேர்தல் நிதிக்காக உங்கள் பங்களிப்பை கோருகின்றது.
அதிகாரம் மிக்க கிழக்கு மாகாண சபைக்கான ஆணையை கோரும் எமது போராட்டத்தில் புலம்பெயர் மக்களாகிய நீங்களும் இணைந்த கொள்ளுங்கள். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கரங்களை பலப்படுத்துவதில் பங்காளர்களாகுங்கள் என தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கின்றோம்.
   
இவ்வண்ணம்,
     செயலாளர்,
     தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்.
தொடர்புகளுக்கு,
ஜெ.தீபன்.
நன்கொடை இணைப்பாளர்,
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி,
கை.தொலைபேசி இல:-0094778794705

0 commentaires :

Post a Comment