கடந்த கால தேர்தல்கள் போல் அல்லாது கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியே அதிக தபால் மூல வாக்குகளை பெற வேண்டும் என தமது கட்சி பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று (24.03.2010) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான பிரதீப் மாஸ்டர், பிரசாந்தன், கட்சியின் செயலாளர், மேலும் கட்டசியின் முக்கியஸ்தர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற ஒவ்வொரு திணைக்களங்களுக்கும் சென்று தமது பிரச்சார பணிகளை மேற்கொண்டார்கள். குறிப்பாக மஞ்சந்தொடுவாயில் அமைந்திருக்கின்ற தொழில் நுட்பக்கல்லூரி, தாழங்குடாவில் கல்வியல் கல்லூரி, மற்றும் சரீரம், ஆரையம்பதி பிரதேச செயலகம், தபால் அலுவலகம், பிரதேசசபை, மட் சிவாநந்தா வித்தியாலயம், மட்டு வலயகல்வி அலுவலகம், மட்டக்களப்பு பிரதேச செயலகம், வாழைச்சேனை வலயக்கல்வி அலுவலகம், வாழைச்Nனை பிரதேச செயலகம், வாழைச்சேனை பிரதேசசபை, ஆகிய பல இடங்களுக்குச் சென்று பிரச்சார பணிகள் மேற்கொண்டதாக அறிய முடிகின்று.
இப் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எமது கட்சி முதன் முதலாக இன்று தேர்தலிலே களம் இறங்கி இருக்கின்றது. இதற்கு அதிகாரிகள், மற்றும் அரச உத்தியோகஸ்தர்கள் ஆகிய உங்களின் பங்களிப்.பு மிகவும் அவசியமானதாகும். ஒரு சமூகத்தின் முதுகெலும்பு கல்வி கற்றவக்களே எனவே கல்வியாளர்களினால் சமூகத்தை மாற்றியமைக்க முடியும். எனவே நீங்கள் எமது கட்சிக்கு பூரண ஆதரவினை வழங்குவதன் மூலம் ஏனைய மக்களின் ஆதரவு எங்களுக்கு இயல்பாகவே கிடைத்துவிடும். எனவே எமது மக்களை நம்பி எவ்வளவு சவால்களுக்கு மத்தியில் தனித்து எமது கட்சி களம் இறங்கி இருக்கின்றது. அதனை ஆதரிக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவனினது கடமையாக இருக்கவேண்டும். எனறும் அவர் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.

0 commentaires :
Post a Comment