3/17/2010

பொலிஸ் தரப்பைச் சேர்ந்த மூவர் திருமலையில் இடைநிறுத்தம் _

  ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகக் கூறப்படும் பொலிஸ் தரப்பைச் சேர்ந்த மூவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரே இவ்வாறு சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்களாவர்.

அண்மையில் தேடுதல் வேட்டையொன்றின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் குறிப்பிட்ட நபர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணைகள் பூர்த்தியடையும் வரை மேற்படிபொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் விசாரணைகளை நடத்த விசேட குழுவொன்றை பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.

தம் மீது உயிரிழந்த நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், பதிலுக்கு தாம் நடத்திய சமரில் அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்

0 commentaires :

Post a Comment