வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல்பெற்ற திருத்தவமான மன்னார் திருக்கேதீச்சர சிவாலயத்தில் மஹா சிவராத்திரி விழா நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் விழாவில் கலந்துகொண்டனர். இதனை முன்னிட்டு திருத்தலத்தில் சகல ஏற்பாடுகளும் செய் யப்பட்டிருந்ததென மன்னார் திருக்கேதீச்சர ஆலய பரிபாலன சபை தெரிவிக்கிறது. வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த போர் நடவடிக்கைகள் முடிவுற்ற பின்னர் முதன் முறையாக நடைபெறும் இவ் விழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். அனைத்து பிரதேசங்களிலும் இருந்து பக்த அடியார்கள் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு வருகைதர அரச தனியார் போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. புத்தளம், கொழும்பு ஆகிய இடங்களில் இருந்த பெருமளவான மக்கள் திருக்கேதீச்சர திருத்தலத்திற்கு வருகை தந்திருந்தனர். திருக்கேதீச்சர திருத்தலத்தில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் சுமார் 27 கோடி ரூபா செலவில் புனர மைப்பு மற்றும் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. மேற்படி அபிவிருத்தி வேலைகளில் அரசாங்கமும் சமூக சேவைகள் அமைச்சும், இந்து கலாச்சார திணைக்களமும் முழுமையாக ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சிவராத்திரி நிகழ்வுக ளுக்கென விசேடமாக இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த இசைக் கலைஞர்களின் இன்னிசை நிகழ்வுகளும் இடம்பெற்றன. நேற்று முன்தினம் மாலை (13.03.2010) ஆரம்பமான சிவராத்திரி நிகழ்வுகள் நான்கு ஜாம காலப் பூசையுடன் நேற்று காலை முடிவுற்றன. இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி உட்பட முக்கியஸ்தர்களும் சிவராத்திரி நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். |
3/15/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment