மியன்மார் நாட்டின் எதிர்க்கட்சியான ஜனநாயக தேசிய லீக் கட்சி, தனது அலுவலகங்களை திறக்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. மியன்மார் நாட்டில் இராணுவ ஆட்சி நடக்கிறது. 1990ம் ஆண்டு ஜனநாயக முறையில் நடந்த தேர்தலில் ஜனநாயக தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங்சாங்சூகி அமோக வெற்றி பெற்றார். ஆனால் இவரை ஆட்சியில் அமரவிடாமல் இராணுவ அரசு வீட்டு சிறையில் அடைத்தது. கடந்த 20 ஆண்டுகளில் ஆங்சாங்சூகி 14 ஆண்டுகள் சிறையில் இருந்து வருகிறார். யாங் கூன் நகரில் ஏரியின் நடுவே உள்ள வீட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த ஆங் சாங் சூகியை அமெரிக்கர் ஜான் எட்டாவ் கடந்த ஆண்டு ரகசியமாக சந்தித்து பேசினார். பாதுகாப்பை மீறி அமெரிக்கருடன் பேசியதற்காக இருவர் மீதும் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சூகிக்கு முதலில் மூன்றாண்டு சிறை அறிவிக்கப்பட்டு பின்னர் 18 மாத சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் மியன்மாரில் பொது தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆங் சாங் சூகி போட்டியிடக்கூடாது என்பதற்காக இரா ணுவ அரசு அவசரமாக ஒரு சட்டத்தை அறிவித்துள்ளது. சிறை தண்டனை பெற்ற எந்த ஒரு நபரும் கட்சியில் இருக்க முடியாது. தேர்தலில் போடடி யிடவும் அனுமதியில்லை என தெரி வித்துள்ளது. இதன் மூலம் ஆங் சாங் சூகி தனது சொந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார். அதுமட்டுமல்லாது அவர் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு இல்லாத சூழல் உருவாக் கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு மே 30ம் திகதி ஆங் சாங் சூகி பேரணி நடத்திய போது ஆளுங்கட்சியின் சார்பில் சிலர் ஆங் சாங் சூகியின் கார் மீது தாக்குதல் நடத் தினர். இச்சம்பவத்தை தொடர்ந்து ஜன நாயக தேசிய லீக் கட்சியின் அனைத்து அலுவலகங்களையும் மூட அரசு உத்தர விட்டது. இந்த ஆண்டு தேர்தல் நடை பெறுவதால், எதிர்க்கட்சியான ஜனநாயக தேசிய லீக்கின் கட்சி அலுவலகங்களை திறக்க இராணுவ அரசு ஒப்புதல் அளித்துள்ளது இதன் படி நூறு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. சிறைத் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது. என்ற, மியன்மார் அரசின் அவசர சட்டத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அவசர சட்டம் ஜனநாயகத்தின் கேலிக்கூத்தாக உள்ளது. இதுபோன்ற கெடுபிடிகளால், அங்கு நடைபெற உள்ள தேர்தல் நம்ப தகுந்ததாக இருக்காது என்று நினைக்கிறோம், என அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஜெ. குரோலி தெரிவித்துள்ளார். |
3/13/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment