தேசிய கல்வியியற் கல்லூரியில் 2009 ஆம் ஆண்டு பயிற்சிப் பெற்று வெளியேறியவர்களுக்கு இன்று முதலாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை இடம் பெறவிருந்த இறுதிப்பரீட்சைகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டிலுள்ள 17 தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இன்று முதலாம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை எழுத்துப்பரீட்சையும் 6 ஆம் திகதி ஏழாம் திகதிகளில் செயன்முறைப்பரீட்சைகளும் இடம் பெறவிருந்தன.
இவ்வாறானதொரு நிலையில் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் மற்றும் தேசிய கல்வியியற் கல்லூரிகளின் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கேற்ப மேற்படி பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை இந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வருகைத்தந்த பரீட்சார்த்திகள் நேற்று கல்லூரியிலிருந்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதாக பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி ஏ.சுந்தரலிங்கம் தெரிவித்தார்.
பண்டாரவளை கல்வியியற் கல்லூரியிலிருந்த வினாத்தாள் பொதிகளிலிருந்து ஒவ்வொரு வினாத்தாள்கள் இனந்தெரியாதோரால் எடுக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இவ்வாறு பரீட்சை பிற்போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது
0 commentaires :
Post a Comment