3/17/2010

பிஜியில் சூறாவளி; 17 ஆயிரம் பேர் வெளியேற்றம்: அவசர காலநிலை பிரகடனம்

திங்கட்கிழமை பிஜியில் ஏற்பட்ட பாரிய சூறாவளியை அடுத்து அந் நாட்டு அரசாங்கம் அவசர காலச்சட் டத்தைப் பிரகடனம் செய்தது. சுமார் 17 ஆயிரம் பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். பெரு மளவான வீடுகள் இதில் சேதம டைந்தன. எத்தனை பேர்கள் உயிரிழ் ந்தார்கள் என்ற தகவலைச் சரியாகச் சொல்ல முடியாதுள்ளதென அரசாங் கம் அறிவித்தது. மணிக்கு 175 கி.மீற்றர் வேகத்தில் காற்று வீசியது.
பிஜியில் வீசிய கடும் சூறாவளி யில் ஒரு பெண் இறந்ததாக ஆரம் பத் தகவல் கிடைத்தது. எவ்வாறாயி னும் உயுரிழப்புக்கள் குறைவாகவுள் ளதை உணர முடிவதாக பொலி ஸார் கூறினர். பிஜியின் வடகிழக் குப் பகுதியில் இந்தச் சூறாவளி வீசியது. டொமஸ் என்றழைக்கப் படும் இச்சூறாவளியால் பிஜியின் கிழக்குப் பகுதியிலிருந்து கரையோ ரக் கிராமங்கள் மோசமாகப் பாதி க்கப்பட்டன.
வடகிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களை வெளியேறுமாறு அரசாங் கம் கேட்டுக்கொண்ட போதும் மின் சாரம் துண்டிக்கப்பட்டதால் இச் செய்தி அதிகமான மக்களைச் சென்ற டையவில்லை. மின்சாரம் தொலைத் தொடர்பு நீர்விநியோகம் என்பன துண்டிக்கப்பட்டன. வெளியேறிய மக் களைப் பாதுகாப்பான முறையில் பராமரிப்பதற்குத் தேவையான ஏற் பாடுகளை பிஜி அரசாங்கம் செய்து ள்ளது.
 

0 commentaires :

Post a Comment