3/31/2010

தேனிசை பாயும் மட்டு வாவியின் மைந்தன்: சுவாமி விபுலானந்தர் ( ஞாபகார்த்த கவிதை) எஸ்.எம்.எம்.பஷீர்



தமிழ் முஸ்லிம் இன ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்த விபுலானந்தர் மருதமுனை புலவர்மணி ஆ.கா. சரிப்புடீன் போன்றோருடன் நெருங்கிய நட்பும் கொண்டிருந்தவர். விபுலானந்தர் போன்ற சிறந்த மனிதர்களின் பண்பியல்புகளை நினைவு கூறுவது இன்றைய இன ஐக்கியம் பேணவிழையும் சமூகங்களின் பார்வைக்கும் பயிற்சிக்கும் தேவையாகவுள்ளது. இக்கவிதையினை அவரின் 118 வது பிறந்ததினத்தை (27 பங்குனி ) முன்னிட்டு அவர் பற்றி நான் எழுதிய கவிதையொன்றினை இங்கு மீள்பதிவு செய்கிறேன்.
விபுலானந்தர்
“விபுலானந்தர்”
உன் பெயரில் கூட
மரியாதை
ஒட்டியிருக்கிறது
தனி மனித
தமிழ் சங்கம் நீ
மதுரைக்குப் பின்பு
சஞ்சீவி மலையை
தூக்கிவரவில்லை நீ
உன் முதுகில்
சங்கப் பலகையே ஏறி
அமர்ந்து கொண்டது.
நீ துறவியோ!
நான் மறுப்பேன்
தமிழ் கன்னியை
காந்தர்வம் செய்தவன் நீ;
இல்லையென்றால்
முத்தமிழுக்கு உன்னையே
காணிக்கையாக்கியவன் நீ
மட்டு வாவியில்
மகரயாழை
நீ இட்டு வைத்ததனால்
பூரணை நிலவில்
தேனிசை வந்து -காதில்
இன்றும் பாய்கிறது;
மடம் கொடுத்தே
தமிழ் நாக்கில்
இடம் பிடுங்கியவன் நீ
கிழக்கில் கதிரவனுக்கு
வர்ணம் தீட்டியவன்
வயல்களையும்
வரப்புகளையும்
உடைத்துக் கொண்டே
கல்விமடை திறக்க
வைத்தவன் நீ;
உன் கல்லறை
மலர் வரிகள்-உன்
இதயக்கமலத்தின்
இறுதி மரணசாசனம்!
எஸ். எம்.எம் பஷீர் எஸ்.எம் எம் நஸீர் எழுதிய “ஆவதறிவது”(2008) எனும் கவிதை தொகுதியிலிருந்து
»»  (மேலும்)

திருமலையில் TMVPஆதரவாளர் கடத்தப்பட்டுள்ளார்.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலும் த.ம.வி.பு கட்சி போட்டியிடுகின்றது. வெருகல் முருகன் ஆலயத்தின் குருக்கல் ஸ்ரீராம் அவர்கள் த.ம.வி.பு கட்சியின் சார்பில் கடந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டவர். தற்போது த.ம.வி.பு கட்சிக்கு தமது பூரண ஆதரவினை தெரிவித்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்.
நேற்று (29.03.2010) சுமார் 5.30 மணியளவில் பிரச்சாரப் பணிகளுக்காக செல்வதற்காக தாம் வெருகல் முருகன் அலயத்தில் நின்ற போது வெள்ளை நிற வேனில் வந்த இனம் தெரியாத நபர்கள் இவரை கட்த்தி சென்று கடுமையாக தாக்கி பின்னர் பிற்பகல் 11.30 மணியளவில் சேருநுவர பொலிசார் இவரை மீட்டு இருக்கின்றார்கள். இவரை கடத்தி செல்லும் போது த.ம.வி.புலிகள் கட்சிக்கு நீ வேலை செய்வதை நிறுத்த வேண்டும் என அச்சுறுத்தி அவரது தலை மற்றும் கால் கை ஆகிய பகுதிகளில் வெகுவாக தாக்கி உள்ளார்கள் இதனால் அவர் மிகவும் சுகவீனம் அடைந்திருக்கின்றார்.
இவரை கடத்தி சென்ற வெள்ளை வான் கும்பலில் ஒருவரை சேருநுவர பொலீசார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடத்தி செல்லப்பட்டவரது தேசிய அடையாள அட்டை கையடக்க தொலைபேசி, பெருமளவு பணம் அவரது இறப்பர் சீல் மற்றும் அவரிடம் இருந்து வெறும் வெள்ளைக் காதித்தில் 20க்கு மேற்பட்ட கையொப்பங்கள் பெறப்பட்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீராம் குருக்கலை கடத்திய வாகனத்தின் விபரம்.
வாகன இலக்கம் :-Nறு253-1702
நிறம்   :- வெள்ளை
வாகன வகை  :- டொல்பின் ரக வான்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆதரவாளர்களுக்கு தொடர்ச்சியான தாக்குதல்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் த.ம.வி.பு கட்சி தனித்து களமிறங்கி இருப்பதனால் இது போன்ற பல சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி பிரதேசத்தில் த.ம.வி.புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. எனவே த.ம.வி.புலிகள் அரசியல் பிரவேசத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்கும் கயவர்களுக்கும் சரியான பாடம் புகட்ட மக்களே முன்வாருங்கள்.


»»  (மேலும்)

3/30/2010

கொக்குவில் மக்களால் துரத்தியடிக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.

zimind-cartoon-130608கிழக்கில் இடம்பெற்ற வன்னிப் புலிகளின் படுகொலைகளுக்கு சூத்திரதாரிகளாக இருந்து செயற்பட்ட ரெலோ பிரசன்னா எனும் நபர் மட்டக்களப்பில் போட்டியிடுகின்றார். இன்று ஏற்பட்டுள்ள அமைதிநிலையையும் ஜனநாயக இடைவெளியையும் பயன்படுத்தி புலிகளது விசுவாசிகள் கூட்டமைப்பின் ஊடாக ஜனநாயக வேசமிட்டு உலாவர ஆரமிபித்துள்ளனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டிடியிடும் பிரசன்னா கடந்த காலங்களில் பொட்டம்மானின் நேரடி உளவாளியாக இருந்து செயற்பட்டவர். ராஜன் சத்திய மூர்த்தி, கிங்ஸ்லி ராஜநாயகம் போன்ற கிழக்கின் தலைமைகளை கொன்றொழிக்க சூத்திரதாரியாக செயற்பட்டவர் இவரே. அது மட்டுமல்ல பலபயன்படுத்தி மட்டக்களப்பில் கால் பதித்துள்ளார். அதன் காராணமாக நேற்று இவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமைப்பினரின் பிரச்சார ஒழுங்குகளை கொக்குவில், திராய்மடு போன்ற மட்டக்களப்பு நகரையண்டிய கிராமத்து மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக கிளர்ந்தெழுந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு பாதிவழியிலேயே பிரசன்னா தனது காரைத் திருப்பிக் கொண்டு ஓடியதாக உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றது. பொதுமக்களை வன்னிப் புலிகள் கொன்றொழிக்கவும் காரணமான பிரசன்னா கடந்த காலங்களில் மட்டக்ளப்பு மக்களால் துரத்தி அடிக்கப்பட்டவர். இன்று தேர்தலைப் பயன்படுத்தி மட்டக்களப்பில் கால் பதித்துள்ளார். அதன் காராணமாக நேற்று இவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமைப்பினரின் பிரச்சார ஒழுங்குகளை கொக்குவில், திராய்மடு போன்ற மட்டக்களப்பு நகரையண்டிய கிராமத்து மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக கிளர்ந்தெழுந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு பாதிவழியிலேயே பிரசன்னா தனது காரைத் திருப்பிக் கொண்டு ஓடியதாக உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றது.

»»  (மேலும்)

த. ம. வி. புலிகள் கொக்குவில் பிள்ளையார் ஆலயத்திற்கு நிதி உதவி,முதலமைச்சருக்கு மிகப் பெரிய வரவேற்பு ஏற்பாடு.

img_5277நேற்று பிரச்சாரப் பணிகளுக்காக சென்றிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் தமது கிராமம் தொடர்பான பிரச்சினைகளை எடுத்துக் கூறிய மடடக்களப்பு கொக்குவில் கிராம மக்கள் தமது ஊர் வீதிகள் செப்பனிட வேண்டும் அத்தோடு அழிவடைந்துள்ள ஆலயங்களை புனர் நிர்மானம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கிணங்க உடனடியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன் 30 000ருபாய் பணத்தை கொடுத்து பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெறுகின்ற பௌர்ணமி பூஜையிஜனை செய்யும்படி கேட்டிருந்தார். அப்பூஜை இன்று மாலை 4.00மணிக்க இடம்பெற இருக்கிறது. இப் பூஜை வழிபாட்டில் கடசியின் தலைவரும் கிழக்கு மாகாண மதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை கலந்து கொள்ளும்படி மக்கள் கேட்டுக் கொண்டார்கள்.  இதனடிப்படையில் இன்று கொக்குவில் மக்களால் முதலமைச்சருக்கு மிகப் பெரிய வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

img_5258
img_5259



»»  (மேலும்)

வீட்டுக்கு வீடு செல்லும் கிழக்கு மாகாண முதலமைச்சர்.

மட்டக்களப்பு மாவட்டம் பிரச்சாரத்தின் உச்சத்திற்கே சென்று கொண்டிருக்கின்றது. நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் பலமுனைப் போட்டி தமிழ் கட்சிகளிடையே மட்டக்களப்பு மாவட்டத்திலே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. புளித்துப் போன தேசியம் பேசும் தமிழ் கட்சி, 1960ம் ஆண்டு வந்த வீட்டுச் சின்னத்தில் மீண்டும் 60 ஆண்டுகளுக்கு பின்னர் மக்களை ஏமாற்ற வந்திருக்கின்றார்கள் அடுத்து உதய சூரியன் என்று கொண்டு இவ்வளவு காலமும் அஸ்த்தமனமாயிருந்த தமிழர் விடுதலை கூட்டணி தமிழ் மக்களை உசுப்பேற்ற முன்வந்திருக்கின்றது. அது தவிர இதர பல கட்சிகள் சுயேற்சைக் குழுக்கள் என ஓராயிரம் கட்சிகள் பலப்பரீட்சை என்று கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றனர்.

ஆனால் இன்று கிழக்கு மாகாணத்திலே தனிப்பெரும் கட்சியாக உதயமாகி இருக்கின்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனது கன்னி பாராளுமன்ற பிரவேசத்தை முன்னெடுத்திருக்கின்றது. கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலே தமது பணியினை நிறைவேற்றி வருகின்றது. அதிலும் குறிப்பாக த.ம.வி.பு கட்சியின் தாயகப்பகுதியான மட்டக்களப்பு மாவட்டத்திலே த.ம.வி.புலிகள் கட்சி பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றது. எவ்வளவோ சவால்களுக்கு மத்தியில் தனித்து களமிறங்கி இருக்கின்றது. மக்களாகிய உங்களினது அணையினை கோரி கிழக்கு மாகாண சபைபையின் பலத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்று அதனூடாக மாகாண சபையையும் கிழக்கு மாகாணத்தையும் வலப்படுத்த முனைகின்றது.
img_5154
img_5160
img_5175
img_5156
img_5161
»»  (மேலும்)

3/29/2010

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் உத்தியோக பூர்வமாக வெளியீடு.

தமிழ் சமூகத்தின் புரட்சி மிக்க அபிவிருத்திக்கான விஞ்ஞாபனம் என சமூகத் தலைவர்கள் பாராட்டு.
copy-of-img_4806தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஏப்ரல் 8ம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகின்ற நிலையில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை உத்தியோக பூர்வமாக வெளியிட்டது கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மதகுருமார்கள் சமூகப் பெரியார்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். தமிழ் சமுகத்தின் புரட்சிமிக்க எதிர்கால அபிவிருத்திக்கான விஞ்ஞாபனமாக இவ் விஞ்ஞாபனம் காணப்படுவதாக சமூக தலைவர்களின் பாராட்டை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர் மீது தாக்குதல்

img_49271மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர் வைத்திலிங்கம் -  யோகராணி (யோகா) என்பவரின் வீட்டிற்கு பாரிய சேதம் ஏற்படுத்தப்பட்டதோடு தனக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சு.னு.ளு வீதீ, சத்தாண்டி-4ல் அமைந்திருக்கும் தனது இல்லத்தின் மீது நேற்ரிரவு (26.03.2010) இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் ஏற்படுத்தப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.
       கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவியும், சமூகசேவை புரிபவருமான யோகா அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர் மட்டுமல்லாது, பிரச்சாரப்பணிகளிலும் மும்முரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்ற ஓருவருமாவார். இது தெடர்பாக அவர் இன்று ஏறாவூர் பொலிசில் முறைப்பாடு செய்ய சென்றும் , மீண்டும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சம் காரணமாக அவர் திரும்பி வந்துள்ளார்.
இவரது வீட்டிற்கு இன்றுகாலை கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சென்று குறித்த சம்பவம் தொடர்பாக கலந்துரையாடியதோடு சேதமடைந்த வீட்டின் பகுதியினையும் பார்வையிட்டார்.
குறிப்பு:- சித்தாண்டி பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர் க.சத்தியவரதன் அவர்கள் போட்டியிடுகின்றார். இவரும் இவரது குழுவினர்களின் தலைவருமான செந்தில் என்பவரும் ஏற்கனவே தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். இச் சம்பவத்திற்கும் செந்தில் என அளைக்கப்படும் மாணிக்கன் செந்தில்நாதன் அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என அவ்வூர் மக்கள் தெரிவித்தனர்.
»»  (மேலும்)

படுவான் கரை பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேர்தல் பிரச்சாரம்,

img_4992எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தனது பிரச்சாரங்களை துரிதமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. நேற்று படுவான் கரை பிரதேசத்தின் பதுளை வீதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்களின்போது தமது கட்சியின் வெற்றிக்காக கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் ஜீவரங்கன் ஆகியோர் மக்கள் மத்தியில் உரையாற்றுவதை படங்களில் காணலாம்.
img_4972
»»  (மேலும்)

ஏழைகளின் குடிசையில் உணவு அருந்தும் கிழக்கு மாகாண முதலமைச்சர்.


கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வறிய பிரதேசங்களுக்கு சென்று அங்கு வாழும் மக்களின் குறைகளை கேட்டு அறிந்து. அவர்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருவது இயல்பு. அதே போன்று நேற்றும் தனது பயணத்தின் போதும் களுவன்கேணி பிரதேசத்திற்கு சென்ற முதல்வருக்கு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்கள் குறைகளை நேரில் கண்டு தீர்க்கும் முதல்வருக்கு உணவளித்து முதல்வரின் களைப்பை தீர்த்தமை குறிப்பிடத்தக்கது.
img_4885
img_4880
»»  (மேலும்)

3/26/2010

கட்சிபேதமின்றி சகலரும் பங்கேற்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் ஏப். 22ம் திகதி கூடும் புதிய பாராளுமன்றத்தில் தேர்தல் மறுசீரமைப்புக்கும் முன்னுரிமை

தேர்தலின் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி கூடும் பாராளுமன்றத்தில் தேர்தல் மறுசீரமைப்புக்கும், கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களிப்பு செய்யக்கூடிய விதத்தில் அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தினுள் எதிர்க் கட்சியினரை வேறுபடுத்தி வைக்காமல் நாட்டின் நன்மைக்காக, அபிவிருத்திக்காக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்கும் அவர்களது பங்களிப்பை நேரடியாக பெற்றுக் கொள்ளவும், அவர்கள் தாமாகவே முன்வந்து பங்களிப்பை செய்யக்கூடிய விதத்தில் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படும்.
குறிப்பாக இவ்வாறான நடவடிக்கைக்கு அரசியலமைப்பில் தடைகள் உள்ளதா என்பது பற்றி ஆராயவும், அவற்றை களையவும் முன்னுரிமை வழங்கப்படும்.
நடைபெறவுள்ள தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டுக்கு அதிக வாக்குகளை பெறுவது மட்டுமல்லாமல் பலம்மிக்க பாராளுமன்றத்தையும் உருவாக்குவது உறுதியாகியுள்ளது.
நாட்டின் நலனுக்காகவும் பொது நோக்கத்திற்காகவும் அனைத்து தரப்பினரையும் நேரடியாக பங்களிப்பு செய்ய வைப்பதே ஜனாதிபதியின் நோக்கமாகும். இந்த நடைமுறை டொனமூர் ஆட்சி முறையின் கீழ் இருந்தது. அத்துடன் நாட்டின் நலனுக்காக தன்னோடு இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
எவரையும் ஒதுக்கி வைப்பது அவரது நோக்கமல்ல. அதற்கான தேவை இன்று உணரப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் முறையில் மாற்றம் தேவை என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதற்கென அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்ட தேர்தல் மறுசீரமைப்புக்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவும் அடித்தளமொன்றை அமைத்துள்ளது.
தற்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையின் காரணமாக கட்சிகளுக்கிடையே முறுகல்கள், மோதல்கள் ஏற்படுவதற்கு பதிலாக கட்சிக்குள்ளேயே பிளவுகளும், மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.
அதேவேளை ஊழல் இடம்பெறுவதற்கும் இந்த விகிதாசார தேர்தல் முறையே அடிப்படையாக அமைந்துள்ளது. மேலும் பலமுள்ளவர்களுக்கு மட்டுமே சந்தர்ப்பங்கள் கிடைக்கவும், பலமற்றோர் பாதிக்கப்படுவதற்கும் இந்த தேர்தல் முறை வழிவகுக்குகின்றது.
சில தொகுதிகளுக்கு உறுப்பினர்கள் இல்லாமலும், சில தொகுதிகளுக்கு இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதையும் விகிதாசார தேர்தல் முறையில் காணலாம். இவை நீக்கப்பட வேண்டும் என்பதில் அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் உள்ளனர். இதனை நீக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை யுடன் கூடிய பலம் மிக்க அரசு தேவைப்படுகிறது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


»»  (மேலும்)

தபால் மூல வாக்குகளை பெறுவதில் அதிக அக்கறை காட்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.

img_4569
  கடந்த கால தேர்தல்கள் போல் அல்லாது கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியே அதிக தபால் மூல வாக்குகளை பெற வேண்டும் என தமது கட்சி பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று (24.03.2010) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான  பிரதீப் மாஸ்டர், பிரசாந்தன், கட்சியின் செயலாளர், மேலும் கட்டசியின் முக்கியஸ்தர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற ஒவ்வொரு திணைக்களங்களுக்கும் சென்று தமது பிரச்சார பணிகளை மேற்கொண்டார்கள். குறிப்பாக மஞ்சந்தொடுவாயில் அமைந்திருக்கின்ற தொழில் நுட்பக்கல்லூரி, தாழங்குடாவில் கல்வியல் கல்லூரி, மற்றும் சரீரம், ஆரையம்பதி பிரதேச செயலகம், தபால் அலுவலகம், பிரதேசசபை, மட் சிவாநந்தா வித்தியாலயம், மட்டு வலயகல்வி அலுவலகம், மட்டக்களப்பு பிரதேச செயலகம், வாழைச்சேனை  வலயக்கல்வி அலுவலகம், வாழைச்Nனை பிரதேச செயலகம், வாழைச்சேனை பிரதேசசபை, ஆகிய பல இடங்களுக்குச் சென்று பிரச்சார பணிகள் மேற்கொண்டதாக அறிய முடிகின்று.
        
 இப் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எமது கட்சி முதன் முதலாக இன்று தேர்தலிலே களம் இறங்கி இருக்கின்றது. இதற்கு அதிகாரிகள், மற்றும் அரச உத்தியோகஸ்தர்கள் ஆகிய உங்களின் பங்களிப்.பு மிகவும் அவசியமானதாகும். ஒரு சமூகத்தின் முதுகெலும்பு கல்வி கற்றவக்களே எனவே கல்வியாளர்களினால் சமூகத்தை மாற்றியமைக்க முடியும். எனவே நீங்கள் எமது கட்சிக்கு பூரண ஆதரவினை வழங்குவதன் மூலம் ஏனைய மக்களின் ஆதரவு எங்களுக்கு இயல்பாகவே கிடைத்துவிடும். எனவே எமது மக்களை நம்பி எவ்வளவு சவால்களுக்கு மத்தியில் தனித்து எமது கட்சி களம்  இறங்கி இருக்கின்றது. அதனை ஆதரிக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவனினது கடமையாக இருக்கவேண்டும். எனறும் அவர் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.
img_4661
img_4731
»»  (மேலும்)

கிழக்கின் அபிவிருத்திற்கும் இயல்பு நிலைக்கும் த.ம.வி.பு. வரவே வழிவகுத்தது..(வேட்பாளர். பாலகிருஸ்ணன்.)

வீராப்புப் பேசிப் பேசி எமது தமிழ் மக்களின் அரசியல் இருப்பிடத்தையே கேள்விக்குறியாக்கிய தமிழ்த் தலைவர்கள் மீண்டும் எம்மக்கள் முன்னிலையில் வாக்குக் கேட்டு படையெடுத்திருக்கின்றார்கள். இவர்களுக்கு எமது மட்டக்களப்பு தமிழ் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். எத்தனையோ தமிழ் கட்சிகள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று உருவாகிய போதும் இன்று கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஓரளவு அபிவிருத்திற்கும், இயல்பு நிலைக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வரவே வழிவகுத்துது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அ.பாலகிருஸ்ணன் குறிப்பிட்டார்..
       களுவன்கேணி நாகதம்பிரான் ஆலய முன்றலிலே கிராம மக்கள் மற்றும் கிராமிய பொது அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த மேற்படி பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து பேசுகையில் கிழக்கு மாகாணத்திலே தமிழ் பேசும் மக்களுக்காகவே உதயமாகியிருக்கின்ற ஒரே ஒரு கட்சி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிதான். இக் கட்சியினை நாம் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்  குறிப்பாக எமது கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்ட போது அம் மக்களுக்கு முகவரி கொடுத்த இக்கட்சியினை மக்கள் ஏற்று அதற்கு கடந்த உள்ளுராட்சி, மற்றும் மாகாண சபைத்தேர்தலில் ஆணை வழங்கி இருந்தீர்கள். எனவே ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு மாத்திரமின்றி கிழக்கு தமிழ் மக்களுக்குமான ஓர் வரலாற்றுத் திருப்புமுனையாகும். எனவே எமது கட்சிதான் எம்மக்களின் உரிமைகளையும் அபிவிருத்திகளையம் பற்றிப் பேசும், தற்போது மாகாணசபைகளினூடாகவும் பேசிக்கொண்டிருக்கின்றது. எனவே எங்களது கட்சியின் சின்னமான படகு சின்னத்திற்கு வாக்களிப்பதோடு எனது இலக்கமான 2ம் இலக்கத்திற்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பி வைக்கமாறு தனது உரையில் கேட்டுக்கொண்டார்..
»»  (மேலும்)

3/24/2010

சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தேர்தல் விஞ்ஞாபனம்

''சின்னத்தில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை''

வரும் பாராளுமன்றத் தேர்தலில் சயேட்சையாக போட்டியிடும் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தேர்தல் விஞ்ஞாபனம்.
அன்பார்ந்த மக்களே
தமிழ் மக்கள் மத்தியில் வாழும்  உரிமைகுறைந்த எமது மக் களின் சமூக சமத்துவத்துக்காகவும் ஏனைய நலன்களைப் பேணுவதற்காகவும் தீவிர அக்கறையுடன் செயற்பட்டுவந்த ஒரு தாபனம் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை. இந்தச் சபையின் மதிப்புக்குரிய பெருந்தலைவராக இருந்து அரும்பணியாற்றியவர் திரு. எம்.சி. சுப்பிரமணியம் அவர்கள். அன்னாரின் பாராளுமன்ற நியமன உறுப்பினர் பதவி, உரிமை குறைந்த எமது மக்களின் பிரச்சனகளை  அரசு மட்டத்தில் எடுத்துச் செல்வதற்கும், அதற்கான பரிகாரத்தைக் காண்பதற்கும் வெகுவாய்ப்பாக அமைந்திருந்தது.
கடந்த 30 ஆண்டுகால அரசியல் நிலைமைகள் காரணமாக அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் கட்டமைப்புகள் யாவும் சிதைந்து மகாசபை வலுவிழந்து போயிற்று என்பது யாவரும் அறிந்த உண்மை. இன்று உருவாகியிருக்கும் புதிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு  எமது மகாசபை மீண்டும் புத்துயிர் பெற்று  சமூகப் பணியில் ஈடுபடுவதற்கு முன்வந்திருக்கின்றது. எங்கள் மகாசபைத் தலைவர்  திரு. எம்.சி. சுப்பிரமணியம் அவர்கள் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி,அவர் ஆற்றி சமூகப்பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வந்திருக்கின்றது என்பதனைக் கவனத்தில் கொண்டு, அன்னார் காட்டிய வழியை பின்பற்றி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். அத்தீர்மானத்துக்கமையவே அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின்  சார்பில் சுயேட்சைக் குழுவாக இப்பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். ஒடுக்கப்பட்ட சமூகத்தினரான எமது மக்களும், எமது மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைவரும் ஆதரித்து ‘கெலிகொப்ரர்’ சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழு (03) க்கு வாக்ககளிக்குமாறு  வேண்டுகின்றோம். எமது எதிர்காலச் செயற்திட்டங்களில் முக்கியமான சிலவற்றை எமது வாக்காளப் பெருமக்கள் கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.
  • எமது மக்களுக்கு இதுவரை சமத்துவம் அளிக்கப்படாது இருந்து வரும் கோயில்கள், தேனீர்கடைகள், பொதுக்கிணறுகள், வேலைத்தலங்கள், ஏனைய பொதுஇடங்கள் என்பவற்றில் சமத்துவம் பெறுதல்
  • குடியிருப்பதற்குச் சொந்த நிலமில்லாத மக்களுக்கு நிலத்தைப் பெற்றுக் கொடுத்தல்.
  • வீடு இல்லாத மக்களுக்கு வீட்டுவசதியை ஏற்படுத்துதல்.
  • விவசாய நிலங்களை உரிமையாக்குதல்.
  • சுரண்டலில் இருந்து விடுவித்து உழைப்புக்குரிய ஊதியத்தைப் பெறச்செய்தல்.
  • அடிமை, குடிமை முறையின் மிச்சசொச்சங்களை அழித்தொழித்தல்.
  • அடக்கி ஒடுக்குதலை முற்றாக நிராகரித்தல்.
  • அதிகார வர்க்கத்தினரால் பாதிக்கப்படும் மக்களுக்கு நீதியை நிலைநாட்டி நிவாரணம் வழங்குதல்.
  • கல்விபெற வசதியற்ற மக்களுக்கு அவ்வசதியைப் பெற்றுக்கொடுத்தல்.
  • உயர்பதவிகளைப் பெறுவதற்கு தடையாக இடம்பெறும் முட்டுக்கட்டைகளைத் தகர்த்தல்.
  • நவீன தொழில்நுட்பக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பினைத் தேடிக் கொடுத்தல்.
  • வீதிகள், மின்விளக்குகள் என்பவற்றை எமது மக்கள் வாழும் பகுதிகளுக்குப் பெற்றுக்கொடுத்தல்.
  • தொழில்சார் நெருக்கடிகளுக்குப் பரிகாரம் காணுதல்.
  • படித்த வேலைவாய்ப்பற்றிருக்கும் இளைய தலைமுறையினருக்கு அவ்வசிதிகளைச் செய்தல்.
  • தாய்மொழியின் வளர்ச்சியிலும், அதுசார்ந்த விடயங்களில் அக்கறை செலுத்துதல்.
  • கலை, இலக்கியங்கள் குறிப்பாக நாட்டார் சார்ந்த கலைகளைத் தொடர்ந்து பேணுதல், வளர்த்தல்.
  • எமது மக்கள சக்தியை ஒன்றுதிரட்டி  பலத்துடன் மேலும் முன்னேறுதல்.
வேட்பாளர்கள்.
  1. திரு. பறனார்ந்து யோசப்அன்ரனி
  2. திரு.செல்லப்பா சதானந்தன்
  3. திரு.நடராசா தமிழ்அழகன்
  4. திருமதி. உருத்திராதேவி சண்முகநாதன்
  5. திரு.கந்தன் இராசரத்தினம்
  6. திரு.காத்தி அதிகாரம்
  7. திரு. மாணிக்கம் பொன்னுத்துரை
  8. திரு.தம்பியான் கந்தையா
  9. திரு. வயிரவன் மோகநாதன்
  10. திரு. பிலிப் ஜோண்கபாஸ்
  11. திரு. குணசிங்கம் கோபிநாத்
  12. திரு. சுப்பிரமணியம் மகேந்திரராஜா

''சின்னத்தில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை''←       Χ

நீங்கள் தான் நாங்கள்
எங்கள் வெற்றிதான் உங்கள் வெற்றி
உங்கள் வாக்குகளை எங்களுக்கு அளியுங்கள்
சுயேட்சைக் குழு 03
அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை
பலாலி வீதி யாழ்ப்பாணம்.
»»  (மேலும்)

அதிகாரமிக்க மாகாண சபைக்கான ஆணையைக் கோருகின்றோம்.

»»  (மேலும்)

பிரான்ஸ் உள்ளூராட்சித் தேர்தலில் ஜனாதிபதி சாகோஸின் கட்சி தோல்வி

பிரான்ஸில் நடந்த பிராந்திய (உள்ளூராட்சி) தேர்தலில் ஜனாதிபதி நிக்கலஸ்சர் கோஸியின் கட்சியான யு. எம். பி. தோல்வியடைந்தது. எதிர்க்கட்சியான சோஷலிஸ்ட் கட்சி 56 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியது. அண்மையில் பிரான்ஸின் 22 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல் நடந்தது. இதில் 21 உள்ளூராட்சி மன்றங்களை எதிர்க்கட்சி கைப்பற்றியது.
தேர்தல் வெற்றி குறித்து எதிர்க்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- பிரான்ஸ் மக்கள் ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் நிராகரித்துள்ளனர். ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சியைக் கைப்பற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியை அவசர மாகச் சந்திக்கவுள்ளதாகக் கூறிய அந்நாட்டின் பிரதமர் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராயவுள்ளதாகத் தெரிவித்தார். ஜனாதிபதி சர்வகோஸிவிரைவில் அமைச்சரவையில் மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளதாகவும் பிரதமர் பதவி விலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகள் தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோஸி முன்னெடுத்த வேலைத் திட்டங்களையும், பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கப் போதுமான நடவடிக்கை எடுக்காததையும் மக்கள் கடுமையாக கண்டித்தே வாக்களித்துள்ளதாக அவதானிகள் கூறினர்.
 
»»  (மேலும்)

ஓட்டமாவடியில் ஆங்கிலேயர் நிர்மாணித்த பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் திறந்துவைப்பு

கிழக்கு உதயம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மஹிந்த சிந்தனைக்கமைவாக ஜனாதிபதி ராஜபக்ஷவின் வழிகாட்டலிலும், ஆலோசனைக்கமைவாகவும் முன்னாள் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் வேண்டு கோளுக்கமைவாகவும் மட்டு. - கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடிப் பாலம் நவீன முறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு அழகுறக் காட்சி தருகின்றது.
கிழக்கின் பல்வேறு துறைகளும் இன்றைய காலகட்டத்தில் துரித விருத்தி கண்டு வருகின்ற நிலையில் கல்குடாத் தொகுதியிலும் பல அபிவிருத்தித் திட்டங் கள் முன்னெப்போதுமில்லாதவாறாக செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமீர்அலி விளையாட்டரங்கும் நவீன விளையாட்டரங்காக அமையப்பெற்று ஓட்டமாவடி நகருக்கு அழகு சேர்க்கின்றது.
இவ்விரு அபிவிருத்திப் பணிகளும் ஐ.ம. சு.மு அரசின் காலத்திலேயே தொடக்கி வைக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு இவை மக்களிடம் ஒப்படைக்கப்படும் நிகழ்வு ஓட்டமாவடியில் நடைபெறுவதானது ஒரு வரலாற்று நிகழ்வாகும். அதிலும் விஷேடமாக இந்நிகழ்வில் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு சிறப்பிப்பதானது இவ் அபிவிருத்திப் பணிகளுக்கு மேலும் மெருகூட்டுகின்றது எனலாம்.
கிழக்கில் சுனாமிப் பேரலைத் தாக்கத்தினால் அழிவுற்ற கல்லாற்றுப் பாலம், ஒந்தாச்சிமடப் பாலம் ஆகியன துரிதமாக புனரமைப்புச் செய்யப்பட்டு பொதுமக்கள் பாவனைக்கு விடப்பட்டமை கிழக்கு அபிவிருத்தியில் ஒரு மைல்கல்லா கும். அதே போலவே கிழக்கின் நுழை வாயிலாகக் கருதப்படும் ஓட்டமாவடிப் பாலம் பிரித்தானியரால் 1922ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட கனரக பாலமாகும்.
50 வருட உத்தரவாதம் வழங்கப்பட்டு பாவனையிலிருந்த இப்பாலம் புகையிரதப் பாதை, தரை வழிப்போக்குவரத்து எனப் பாவனைக்குட்படுத்தப்பட்டமையால் 90 களின் பின்பு இப்பாலம் மிகுந்த தேசத்துக்குட்பட்டுக் காணப்படுகிறது.
அத்தோடு தேசிய கடதாசி தொழிற்சாலை, விவசாயப் பெரு நிலங்கள், கால்நடைப் பண்ணைகள், மட்டு - கொழும்பு பிர தானவீதி என இப்பாலத்தின் பயன்கள் பலவுள்ளன. அண்மைக் காலமாக இப்பாலம் மிகுந்த சேதமுற்றதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் பாவனைக்குட்படுத்தி வந்தனர். இதனை யிட்டு மட்டு. - மாவட்ட மக்கள் பிரதி நிதியான எம். எஸ். எஸ். அமீர்அலி முனைப்புடன் கருமமாற்றியதன் பயனாக கடந்த 2007 நவம்பர் 17ந் திகதி இப்பாலத்துக்கு சமாந்தரமாக புதிய பாலத்தை தனியே தரை வழிக்கென நிர்மாணிக்க அடிக்கல் நடப்பட்டது. இந்நிகழ்வு ஓட்டமாவடிப் பிரதேசத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இப்பாலத்துக்கான நிதியுதவியாக இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக் கமைவாக 400 மில்லியன் ரூபாவை ஸ்பெயின் நாட்டு அரசாங்கம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.இப்பால நிர்மாணத்துக்கேதுவாக மட்டு. - கெழும்பு பிரதான வீதியும் இரு வழிப்பாதையாக கார்ப்பற் இடப்பட்டு மெருகூட்டப் பட்டுள்ளது.
இதன் மூலம் 250 மீற்றர் நீளமான புதிய இரும்புப் பாலம் தனியே தரை வழிப் போக்குவரத்துக்கென இன்று ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்படுகிறது. பழைய பாலம் தனியே புகையிரதப் போக்குவரத்துக்காகப் பாவிக்கப்படும்.
ஓட்டமாவடிப் பிரதேசத்தில் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படவுள்ள அமீர்அலி விளையாட்டு அரங்கும் பாரியதொரு அபிவிருத்தித் திட்டமாகும். இப்பொது மைதான இட அமைவு முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹும் எம்.பி. முகைதீன் அப்துல் காதரினால் இனங்காணப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
இம்மைதானம் தற்போதைய மக்கள் பிரதிநிதி எம். எஸ். எஸ். அமீர் அலியின் முயற்சியினால் விளை யாட்டுத்துறை அமைச்சின் பல கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமீர்அலி விளையாட்டரங்கு எனப் பெயரிடப்பட்டு நவீனத்துவமிக்கதாக உருவாக்கப்பட்டுள்ளது. கல்குடா விளையாட்டுத்துறையில் இது ஒரு மைல்கல்.
சுமார் 3000 பார்வையாளர் அமரக்கூடியதாக மூன்று பிரமாண்டமான அரங்களுடன் இரவு- பகல் விளையாட்டு நிகழ்ச்சிகளை நடாத்தக்கூடிய வகையிலான மின்னொளி மைதானமாக இது வடிவமைக்கப்பட் டுள்ளமை சிறப்பம்சமாகும். இதன் மூலம் இப்பிரதேச விளயாட்டுத்துறை விருத்திக்கும் தற்போதைய அரசு பாரிய பங்காற்றியுள்ளது எனக் கூறமுடியும்.
 

»»  (மேலும்)

விருப்பு வாக்கு வேட்டை சூடுபிடிக்கின் றது.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக் கின்றது. விருப்பு வாக்கு வேட்டை சூடுபிடிக்கின் றது. விருப்பு வாக்கு முறையினால் தேர்தல் போட்டி கட்சிகளுக்கிடையில் அல்லாமல் கட்சிகளுக்கு உள்ளேயே நடைபெறும் நிலை விரும்பத்தகாத வகையில் உருவாகியிருக்கின்றது. ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் இந்த நிலை பெரிதாகக் காணப்படாத போதிலும் காலப்போக்கில் ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி க்கு உள்ளேயான போட்டி உக்கிரமடைந்து வருகின்றது.
விருப்பு வாக்கு நடைமுறையில் இருப்பதால் இன்றைய தேர்தல் முறை ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகின்றது என்பதை யாரும் நிராகரிக்க முடியாது. பெருந்தொகை யாகப் பணம் செலவழித்து வேட்பாளர்கள் போஸ்டர்கள் ஒட்டுகின்றார்கள். எங்கு பார்த்தாலும் வேட்பாளர்களின் கட் அவுட்டுகளும் போஸ்டர்களுமே கண்ணில் படுகின் றன. அவற்றை அகற்றுமாறு தேர்தல் ஆணையாளர் விடுத்த பணிப்புரையைச் சரியான முறையில் நிறைவேற் றுவதில் சிரமங்கள் இருப்பது போல் தெரிகின்றது.
தங்கள் இலக்கங்களை வாக்காளர்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு இதனிலும் பார்க்கக் காரியவலுவான வழி வேறு எதுவும் இல்லை என்கின்றனர் வேட்பாளர்கள். இன்றைய தேர்தல் முறையின் சீர்கேட்டுக்கு விருப்பு வாக்கு முறை காரணமாக இருப்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ள லாம்.
விருப்பு வாக்கு முறையின் கீழ் ஒரு வாக்காளர் தனது பிரதிநிதியைத் தெரிவு செய்வதில்லை. மூன்று வேட்பாளர் களுக்குத் தனது வாக்குகளை அளிக்கின்றார். இவர்களில் தனது பிரதிநிதி யார் என்பதில் இந்த வாக்காளருக்குத் தெளிவு இல்லை.
விருப்பு வாக்கின் மூலம் மாவட்டமொன்றில் தெரிவு செய்ய ப்படும் பிரதிநிதிகள் அந்த மாவட்டத்துக்கான பிரதி நிதிகளாக இருப்பார்களேயொழிய தனித்தனித் தொகுதி களுக்கான பிரதிநிதிகளாக இருக்கமாட்டார்கள். வாக்காளர் களுக்கும் பிரதிநிதிக்குமிடையே நெருக்கமான உறவு நிலவுவது இதில் சாத்தியமில்லை.
தொகுதிவாரி முறைத் தேர்தல் வேட்பாளர்களுக்கும் வாக்கா ளர்களுக்கும் நன்மையானது. வேட்பாளர் பெருந் தொகைப் பணத்தைச் செலவிட வேண்டியதில்லை. கட் அவுட்டுகளும் போஸ்டர்களும் இல்லாமலேயே அவர் தன்னை அறிமுகப்படுத்த முடியும். அதேபோல் வாக்காள ரும் வேட்பாளரை நன்கு அறிந்து கொள்வார். இரு வருக்குமிடையே வலுவான உறவு நிலவ முடியும். ஒரு தொகுதியின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுபவர் அத்தொகுதியின் அபிவிருத்தியில் கூடுதலான கவனம் செலுத்துவார் என்பதால் தொகுதிகள் சம அளவில் அபிவிருத்தி அடைவதற்கும் வாய்ப்பு உண்டு.
»»  (மேலும்)

3/23/2010

திருமலை மாவட்ட தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைமை வேட்பாளராக பெண்ணியவதியும் சமுக சேவகியுமான யூடி தேவதாஸன் அவர்கள்

கடந்த நவம்பர்  மாதம் எமது தளத்தில் வெளியான    உரையாடல்

 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் செயற்குழு உறுப்பினரும், பெண்ணியவாதியுமான யூடி தேவதாஸன் அவர்களுடனான பேட்டி.

 

பேட்டிகண்டவர்: கு.சாமித்தம்பி-மட்டக்களப்பு


கேள்வி:
உங்களது ஆரம்பகால அரசியல் சமூக பொதுவாழ்வு பற்றிக் கூறமுடியுமா?



பதில்:
ஆம்! நான் எனது உயர்கல்வியைத் தொடர்ந்து ஒரு ஆங்கில ஆசிரியையாக எனது பொதுவாழ்வை ஆரம்பித்தேன். அது தொழிலாக இருந்தபோதிலும் அதனை ஒரு சமூகத் தொண்டாகவே கருதிச் செயற்பட்டிருந்தேன். அவ்வேளைகளில் அகோர யுத்தம் நடந்துகொண்டிருந்த வேளையில் எங்களது பிரதேசமான திருகோணமலையும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுக்கிடந்தது. இராணுவக் கெடுபிடிகள் ஒருபுறம், புலிகளது நெருக்குவாரம் மறுபுறமுமாக பொதுமக்கள் மிகப்பெரிய துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. நான் ஒரு ஆசிரியையாக இருந்தமையால் எனக்கும் பொதுமக்களுக்குமான உறவுகளில் கூடிய நெருக்கம் இருந்தது. அவர்களது துயரங்களை அறிந்துகொள்ளவும், அவற்றை காதுகொடுத்துக் கேட்கவும், ஆறுதல் சொல்லவும் வாய்ப்புகள் ஏற்பட்டது. ஆனால் அவர்களது துயரங்களில் பங்கெடுப்பதற்கு அப்பால் அவற்றைத் தீர்த்துவைக்க என்னால் முடியவில்லை. இது என்னை சமூகவாழ்வுமீதான கரிசனை நோக்கித் தள்ளியது. நான் எனது ஆசிரியப் பணியுடன் “care” (கெயர்) போன்ற சர்வதேசத் தொண்டுநிறுவனங்களில் இணைந்து அல்லலுறும் மக்களுக்கு சில உதவிகளை செய்வதில் ஈடுபட்டேன். அந்த வேலைத்திட்டங்கள் எனக்கு மிக திருப்தி அளித்தன. ஆனாலும் எனது ஆசிரியப்பணியில் இருந்துகொண்டு சமூக நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவது பாரிய நேரகால சிக்கலுக்குள் என்னை மாட்டிவிட்டது.
அந்தநிலையில் 2000 ஆம் அண்டு நான் எனது ஆசிரியைத் தொழிலில் இருந்து முழுமையாக விடுபட்டு தொண்டுநிறுவனங்களின் முழுநேரச் செயற்பாட்டாளியாக மாறினேன். எனினும் அதிலும் எனக்கு நடைமுறை சார்ந்து பலதடைகளும், முட்டுக்கட்டைகளும் ஏற்படவே செய்தது. மக்களின் ஏழ்மைகளையும், போர்கால கஸ்ரங்களையும் போக்குவது என்ப தற்கப்பால் பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளையும் வன்முறைகளையும் தீர்ப்பது பற்றியம் போர்ச்சூழல் ஏற்படுத்துகின்ற வாழ்வியல் சவால்கள் மற்றும் குழந்தைப் போராளிகள் பற்றியெல்லாம் நாம் கருத்தில் கொள்ளவேண்டியிருந்தது. இவற்றிக்கு எம்மால் முழுமையான தீர்வுகளைக் காணமுடியவில்லை. அதாவது சர்வதேச தொண்டுநிறுவனங்களின் தீர்மானங்களையும் வேலைத்திட்டங்களையும் அமூல்படுத்தும் நிலையில் மட்டுமே நாம் இருந்தோம்;. நாங்கள் விரும்புகின்ற எமது மக்களுக்க தேவையான வேலைத்திட்டங்களை வகுத்துக்கொள்வதற்கும், எமது பிரதேச, சூழலுக்கேற்றவாறு தீர்மானங்களை எடுத்துச் செயற்படவும் நிறுவனங்களின் நிர்வாக, ஒழுங்க கட்டமைப்புகள் இடமளிக்கவில்லை. காரணம் சர்வதேச மட்ட கொள்கை வகுப்பாளர்களுக்கும், உள்ளுர்மட்ட பிரத்தியேக சூழலுக்குமிடையில் பாரிய இடைவெளிகள் இருந்தன. எனவே எமது நாட்டின் தேசிய, உள்ளுர் மட்டம் சார்ந்த அறிவுடனும் அனுபவங்களுடனும் ஓர் உள்@ர் தொண்டுநிறுவனத்தை உருவாக்க வேண்டியம் அவசியத்தை நாம் உணர்ந்தோம். அதன் அடிப்படையில் பெண்கள், சிறுவர்கள் பராமரிப்பு நிறுவனம் (WACCO) எனும் ஒரு அமைப்பினை 2002 இல் நாம் உருவாக்கினோம். அந்த அமைப்பின் ஊடாக நாம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு கூடிய சேவையை ஆற்றமுடிந்தது. பெண்களுக்கெதிராக இழைக்கப்படும் வன்முறைகளையிட்டு பொதுஜன திரளின் கவனத்தை ஈர்க்க பல வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்தோம். குழந்தைகளை படையணிகளில் சேர்ப்பதற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்பாடுகளிலும் எம்மால் முடிந்தவரை ஈடுபட்டோம். அதற்கு புலிகளது இராணுவவாத அணுகுமுறைகள் முட்டுக்கட்டைகள் போட்டன. அதேபோல் அப்பாவி மக்களின் கைதுகள், சித்திரவதைகளுக்க எதிரான எமது மனிதாபிமானப் பணிகள் அரச இயந்திரத்தின் பிரதிநிதிகளையும் கோபத்துக்கு உள்ளாக்கியது. திருகோணமலையில் அரச அதிபரில் இருந்து பல அரச அதிகாரிகளுக்க எமது வேலைத்திட்டங்கள் உவப்பானதாக இருக்கவில்லை. இவர்களில் அதிகமானோர் ஆண்களாகவும், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தமையும் அதற்கொரு காரணமாகும். அவர்கள் எமது நிறுவனத்தை தடைசெய்துவிட பலவிதமான சூழ்ச்சிகளில் ஈடுபட்டனர். எமது அமைப்பினை வாயாடிப் பெண்கள் கூட்டம் என்று மட்டம்தட்டி விடுகின்ற போக்கின் இறுதிவெளிப்பாடாக இச்சூழ்ச்சிகள் அமைந்திருந்தன. நிர்வாக, அரசியல் மட்டங்களில் எமக்கு ஏற்பட்ட இந்த எதிர்ப்புகளில் இருந்தும் தடைமுயற்ச்சிகளில் இருந்தும் தப்பிக்கவும் எமது வேலைத்திட்டங்களைத் தொடரவும் நாம் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களை நாடவேண்டியிருந்தது. எமது பிரச்சனைகளை காதுகொடுத்துக் கேட்கக்கூட பல தமிழ் தலைமைகள் தயாராக இருக்கவில்லை. ஒரு தமிழ் கட்சியின் தலைவரான அமைச்சர் ஒருவர் எமது நிறுவனத்தின் மீது விதிக்கப்பட இருந்து தடையை நிறுத்தித் தருவதற்கு கைமாறாக எமது அமைப்புக்கும், எனக்கும் மக்களிடமிருந்த செல்வாக்கை தனது கட்சிக்காக விலைபேச முயன்றார்.
ஒரு பெண்கள் அமைப்பு எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள அதிகாரப் புள்ளிகளில் பெண்கள் இல்லாத குறையை அப்போது நாங்கள் பலமாக உணர்ந்தோம். எனினும் கடைசி முயற்சியாக நம்பிக்கையுடனும், நம்பிக்கையின்மையுடனும் ஒருவரைச் சந்தித்தேன். அவர்தான் இன்றைய எமது கௌரவ முதலமைச்சர் பிள்ளையான் அவர்கள். அப்போது அவர் அப்படித்தான் அழைக்கப்பட்டார். முதலில் எமது நிலைமைகளை பொறுமையுடன் விளங்கிக்கொண்டார். உண்மையில் அவ்வேளைகளில் அவரது பெயர் பற்றி பரப்பப்பட்டிருந்த பொய்மைகள் எமைவிட்டு அகன்று போனது. எமது அமைப்பு எதிர்கொண்ட பிரச்சனைகளை முடிந்தளவு தூரம் புரிந்துகொள்ள அவர் முயன்றார். அன்று அவருக்கு அரசியலில் அதிகாரம் இல்லாத நிலையிலும் மேலிடங்களில் அவருக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி எமது அமைப்பினை தொடர்ந்து இயங்க வழிசெய்தார். எந்தவித அரசியல், பதவி பற்றிய எதிர்பார்ப்புகளும் இல்லாத ஒரு காலகட்டத்தில் அவர் எமது சமூகத்தின் மீது காட்டிய அக்கறை அவர்மீதான அளவுகடந்த மரியாதையை எமக்கு ஏற்படுத்தியது. ரி.எம்.வி.பி. கட்சியாக காலப்போக்கில் அவர்கள் பரிணமித்தபோது எம்போன்றவர்கள் பலர் அக்கட்சியை நம்பிக்கையுடன் நெருங்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன. கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலின்போது நானும் பலபெண்களும் சந்திரகாந்தன் என்கின்ற அந்த பிள்ளையான் முதலமைச்சராக வேண்டும் என்று பகிரங்கமாக இறங்கி வேலைசெய்தோம்.

கேள்வி:
இவை தவிர நீங்கள் ரி.எம்.வி.பி. இல் முக்கிய செயற்பாட்டாளராக மாறுவதற்கு வேறு ஏதும் காரணங்கள் உண்டா?

பதில்:
நிச்சயமாக! முதலில் புலிகளது அட்டகாசம் கிழக்கில் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்று நாம் விரும்பினோம். எமது சமூகத்தின் ஏழ்மை நிலையை, குடிகாரத் தகப்பன்மாரின் பொறுப்பற்ற தன்மைகளை, விதவைத்தாய்மாரின் இயலாமையை பயன்படுத்தி எமது சிறுவர் சிறுமியரை கட்டாயமாக தமது படையணிகளில் இணைத்துக்கொண்டனர் புலிகள். ஆனால் இப்படியெல்லாம் யாழ்ப்பாணத்தில் அவர்களால் செய்யமுடிந்ததா? இல்லையே! இந்த நிலைமை மாறவேண்டும் என நாம் உள்@ர விரும்பினோம். அந்த மாற்றத்தை ஏற்படுத்த முயன்ற ரி.எம்.வி.பி. யை நாம் பலமாக ஆதரித்தோம்.
இதுமட்டுமல்ல இந்த இக்கட்டுகளுக்கு மத்தியில் சிறுவர்களின் பாதுகாப்புக் குறித்தும், கல்வி வளர்ச்சி குறித்தும் எமது பிரதேச ஆசிரியர்களாய் இருந்த நாம் கொண்டிருந்த அக்கறைகளை தட்டிக்கழித்த, பரிகசித்த எமது பள்ளிக்குழந்தைகளைப் பார்த்து “இதுகளெல்லாம் எங்கே தேறப்போகுதுகள்?” என்று சாபமிட்ட யாழ்ப்பாணத்து வாத்திமார்களை நான் நேரடியாக காணநேர்ந்தமையெல்லாம் பழங்கதையல்ல. திருமலையில் மட்டுமல்ல கொழும்பிலும் நான் பணியாற்றிய பாடசாலைகளில் கூட இந்த மேலாதிக்க மனோபாவத்தை நிர்வாக மட்டத்தில் நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவைகளெல்லாம் கிழக்கின் தனித்துவம் குறித்த எமது உணர்வுகளை மெது மெதுவாக தூண்டிவிட்டன. இப்படி பல்வேறு காரணங்கள் எமக்கான ஒரு கட்சியின் தேவையை, தலைமையின் தேவையை, தனிவழியின் தேவையை எமக்கு உணர்த்தின. எமது எதிர்பார்ப்புகளுக்கும் உள்@ர இருந்த அரசியல் அபிலாசைகளுக்கும் ரி.எம்.வி.பி. செயல்வடிவம் கொடுக்க முனைந்தபோது நாமும் அதில் முக்கிய பங்காளர்களாக எம்மை மாற்றிக்கொண்டோம்.

கேள்வி:
உங்களின் சமூக அரசியல் ஈடுபாடு கூடியளவில் பெண்களின் பிரச்சனைகளில் இருந்து முகிழ்ந்ததாக புரிந்துகொள்ள முடிகிறது. இன்றைய நிலையில் கிழக்குமாகாணப் பெண்கள் எதிர்கொள்ளும் உடனடிப்பிரச்சனைகள் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?


பதில்:

வீரம் விளை நிலம் கிழக்கு! என்று கூறிக் கூறியே புலிகள் எமது மாகாணத்தை விதவைகளின் விளைநிலமாக்கிவிட்டு சென்றிருக்கிறார்கள். சுமார் 46 000 (நாற்பத்தி ஆறாயிரம்) விதவைகளை தாங்கிநிற்க நிற்பந்திக்கப் பட்டிருக்கிறது எமது மண். அதில் 12 000 பேர் மூன்று குழந்தைகளைக் கொண்ட (30 வயதுக்குக் குறைந்த) இளம் விதவைகளாகும். அதுமட்டுமல்ல வன்னி முகாம்களில் இருந்து வருகின்ற எமது பிரதேச அகதிகள் மத்தியிலும் குறிப்பாக திருகோணமலை அகதிகளில் பெரும்பான்மையானோர் விதவைகளாகவே காணப்படுகின்றனர். இவர்களது வாழ்வாதாரம் பற்றிய பாரிய பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. இவர்களுக்கான மறுவாழ்வை மட்டுமல்ல, ஆத்ம பலத்தையும் மீளக்கட்டியெழுப்புவது என்பது எமது சமூகத்தைப் பொறுத்தவரையில் பெரும் சவாலானதொன்று. அதேபோல முன்னாள் பெண்போராளிகளின் இயல்பு வாழ்வும், சமூக இணைவும் பல சிக்கல்கள் நிறைந்தவை. இயக்கம் 2004 இல் பிளவு பட்டபோது மூன்று மாவட்டங்களிலும் இருந்த போராளிகள் சுமார் எட்டாயிரத்தி ஐநூறு (8500) எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் பெண் போராளிகள் சுமார் ஐயாயிரம் (5000) வரை இருக்கலாம். அவர்களில் கொல்லப்பட்டோரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றோருமாக 500 பேர் வரை கழித்துப் பார்த்தாலும் 4500 முன்னாள் பெண்போராளிகள் எம்மத்தியில் வாழ்கின்றனர். அவர்களது பாடசாலைப் படிப்புகள் புலிகளது அக்கிரமங்களினால் சீர்குலைக்கப்பட்டுவிட்டன. இப்படியாக பல பிரச்சனைகள் இன்று எம்மைநோக்கி வியாபித்து எழுந்து நிற்கின்றன. இவையெல்லாம் யுத்தத்தின் நேரடி விளைவுகாளக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாகும். இவற்றுக்கும் மேலாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எமது சமூகத்தின் சகல பரப்பிலும் நிறைந்து காணப்படுகின்றன.


கேள்வி: இவற்றுக்கெல்லாம் என்ன தீர்வு? மாகாணசபை ஆட்சிமுறைய+டாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நடவடிக்கைகள் என்ன?

பதில்:
பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரங்களை உயர்த்த சுயதொழில் வாய்ப்புகளுக்குரிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சிகளின் முடிவில் அவர்களது துறைசார்ந்து தொழில்கள் தொடங்குவதற்குரிய உதவிகள் செய்யப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை சர்வதேச தொண்டு நிறுவனங்களாலும், ஒரு சில மாகாண சபையினாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
என்னைப் பொறுத்தவரை இத்தகைய முயற்சிகள் போதுமானவை இல்லை என்றே கருதுகின்றேன். கோழிவளர்ப்பு, ஆடுமாடு வளர்ப்பு, தையல் மெசின் என்று வழமையான பாணியிலேயே இவைகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் ஊடான பலாபலன்கள் எதிர்பார்ப்பது போல் அமைவதும் இல்லை. இத்தகைய முயற்சிகளுக்கு அப்பால் எமது கிழக்கு மாகாணசபை பல புதிய திட்டங்களை முன்னெடுக்க முயன்றாலும் அவற்றை அமூல்படுத்துவதற்கு அதிகாரம் பற்றிய எல்லைகள் குறுக்கே நிற்கின்றன.
எனவேதான் இந்த உடனடி அல்லது தற்காலிக வேலைத்திட்டங்களைத் தாண்டி நாம் எதிர்காலம் குறித்து கடுமையாக சிந்திக்கவேண்டியுள்ளது. பெண்களின் கூடியளவிலான அரசியல் ஈடுபாடும், அதிகார மையங்களை முடிந்தவரை பெண்கள் கைப்பற்றுதலுமே இவற்றுக்கெல்லாம் தீர்வு என்பது எனது கருத்தாகும். அதனூடாகவே சட்டவாக்கத்துறையிலும், கொள்கை வகுப்புத்துறையிலும் பெண்கள் தமது செல்வாக்கைச் செலுத்த முடியும்.


கேள்வி:
நீங்கள் சொல்லுவது சரியாக இருக்கலாம். ஆனால் இவற்றுக்கெல்லாம் பெண்கள் முன்வரவேண்டுமே! இன்றைய கிழக்குமாகாண சூழலில் அதற்கான வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன?


பதில்:
பெண்கள் முன்வருகின்றார்களா என்று கேள்வி எழுப்பிக்கொண்டிருப்பதை விட விடயங்களை சாதகமாகவும், நம்பிக்கையுடனும் அணுகுவதே சாலச் சிறந்தது என நான் கருதுகின்றேன். இன்று கிழக்கில் ஏற்பட்டுள்ள அமைதிநிலை பயப்பீதிகொண்ட நீண்டகால சூழலை மாற்றி அமைத்திருக்கின்றது. இன்று ஏற்பட்டிருக்கின்ற அமைதிநிலை காரணமாக படித்த இளம் பெண்களிடத்தில் அரசியலில் தாமும் பங்கெடுக்கவேண்டும் என்கின்ற வாஞ்சை அதிகம் தென்படுகின்றது. இவர்களை அணிதிரட்டுவதும், அரசியல் அறிவ+ட்டுவதும் அவசியமானது. நாம் படித்த இளம்பெண்களை நமது கட்சி நோக்கி பாரியளவில் அணிதிரட்டி வருகின்றோம். எமது கட்சி உறுப்புரிமைகளை பெற்றுக்கொள்வதிலும் எமது அரசியல் பாசறைகளில் பங்கு கொள்வதிலும் ஆண்களுக்கு சம அளவில் சில வேளைகளில் அதிகமாகவும் பெண்களே காணப்படுகின்றனர். இந்த விடயங்களில் எமது கட்சியானது கூடிய கவனம் செலுத்துகின்றது. அரசியல் தலைமைத்துவம் நோக்கி கூடியளவு பெண்களை வளர்த்தெடுக்க நாம் முயன்று வருகின்றோம்.

»»  (மேலும்)

3/22/2010

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பாராளுமன்றத்தேர்தல் விஞ்ஞாபனம்- 2010

பாராளுமன்றப்  பொதுத்தேர்தல் - 2010
tmvp-symbol1
 அதிகாரமிக்க மாகாணசபையை கட்டியெழுப்புவோம்.
மாகாண சபையைப் பலப்படுத்தி,  13 ஆவது திருத்தச்சட்ட அரசியல்  அதிகாரத்தை முழுமையாக  அமுல்படுத்துவதற்காகவும்  அழிவடைந்த  தேசத்தை  மீளக்கட்டியெழுப்புவதற்குமான  மக்கள்  ஆணையைக்  கோரல். 
சித்திரைமாதம்  08  ஆம்  திகதி  நடைபெறவுள்ள  பாராளுமன்றத்  தேர்தலில்  தமிழ் மக்கள்  விடுதலைப் புலிகள்;   கட்சியானது   தனது  கட்சி;  சின்னமான படகுச்  சின்னத்தில்  தனித்துக்  களமிறங்கியுள்ளது. தமிழ்பேசும்  மக்களின்  ;  குறுகியகால, நீண்டகால நோக்கிலான  அபிவிருத்தி,  அரசியல்  அபிலாசைகளின்  நிமி;த்தம் இன்றைய   காலத்தின்  தேவையினை  உணர்ந்து  தூரநோக்குப்  பார்வையுடன்  இம்முடிவு   மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இத்தீர்க்கமான  முடிவானது  தேர்தல்  கால  குறுந்தீர்மானம்   அல்லாமல்  கிழக்கு  மாகாணத்தின்;  தனித்துவம், அதன்  இருப்பு, ஒட்டுமொத்த  தமிழ்பேசும்  மக்களின்  அரசியல்  அபிலாசைகளை   உள்ளடக்கிய  அரசியல்  தீர்வு, நீண்டகால நோக்கிலான  தொடர்ச்சியான  அபிவிருத்தி  போன்றவற்றின்பால்  அதிக  கரிசனை  கொள்;வதற்காக  மேற்கொள்ளப்பட்டதொரு  தீர்மானமாக  உள்ளது. ஒரு  பொறுப்புமிக்க மக்கள்  கட்சி  என்ற நிலையிலிருந்து  சற்றும்  பிசகாமல்  கடந்த  கால  அரசியல் மற்றும் ஆயுதப்  போராட்டத் தலைமைகளின்  தவறுகளிலிருந்து  கிடைக்கப் பெற்ற  அனுபவங்களையும் கருத்திற்கொண்டே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   கட்சியின்  அனைத்துமட்ட  உறுப்பினர்கள், தமிழ்பேசும்  மக்களின்  அபிலாசைகளில்  அக்கறை  கொண்டவர்கள், புத்திஜீவிகள், புலம்பெயர்வாழ்  சகோதரர்கள், சர்வதேச சமூகம்  போன்றவர்களிடமிருந்து  பெறப்பட்ட  ஆலோசனைகளின்  அடிப்படையிலும்  தனித்துக்  களமிறங்கும் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.  எமது பரந்துபட்ட மக்களின் அரசியல் அபிலாசைகளின் பிரதிபலிப்புகளிலிருந்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக உறுதித்தன்மை   இன்னும் வலுவாக  இருக்கின்றது. 
தனித்துப் போட்டியிடும் இத் தேர்தல்;  பயணத்தினூடாக  தமிழ்பேசும்  சமூகத்தின்  சார்பாக எமது கட்சியானது  அடைய  எத்தனிக்கும்  தொலைநோக்குத்  திட்டத்தினை விரிவாக தெளிவுபடுத்தும்  எண்ணப்பாங்கில்  இவ்; ஆவணம்  வரையப்படுகின்றது.
சுதந்திர  இலங்கையின் ஆறு தசாப்தங்களுக்கு  மேற்பட்ட  வரலாற்றில் இந்நாட்டின் சிறுபான்மைச் சமூகமான  தமிழ்பேசும் சமூகமானது  தனக்குரிய  அரசியல்  உரிமைகளுக்காக பல்வேறுபட்ட  போராட்ட  யுக்திகளை  மேற்கொள்ள  உந்தப்பட்டது. முதல் மூன்று தசாப்தங்களில் அரசியல்  ரீதியான  போராட்டமும், அடுத்த  மூன்று தசாப்தங்;கள்  ஆயுதப்;  போராட்டமும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எந்தவொரு வழிமுறையும்;  உரிய  இலக்கினை  எய்தாமல் தோல்வி கண்டுள்ளன.  இப்போராட்டங்களுக்காக தமிழ்  சமூகமானது  மீளப்பெறமுடியாத  பெரும்  விலைகளை செலுத்த நேரிட்டது.  அத்தோடு;  தொடர்ச்சியாக  உயிரிழப்புக்கள், அகதிவாழ்க்கை, இளைஞர்கள், சிறுவர்களின்   எதிர்காலங்களை  வீணாக்கியமை, ஒட்டுமொத்த சமூகத்தின்  சமூக  உட்கட்டமைப்புகள்  சீர்குலைந்தமை போன்ற  பாரிய  இழப்புக்களை உரிய  இலக்கினை  எய்தாமல் முடிவுறுத்தப்பட்டது. இப்போராட்டங்களின் காரணமாக  அபிவிருத்தியின்மை, பாதுகாப்பின்மை, அச்சமான  வாழ்வு என்பன  பலமடங்கு   அதிகரித்து  மிகவும்  நலிவடைந்தொரு சமூகமாகவும்,  அரசியல் ரீதியில் உறுதியான  தலைமைகள்  இல்லாத ஒரு சமூகமாகவும்  மாறியுள்ளது.
அரசியல்  ரீதியான  போராட்டம்  எமது சமூகத்துக்கு ஏற்படுத்திய  தாக்கங்களை  விட  ஆயுத ரீதியிலான போராட்டம் மிகப்பெரும்  எதிர்மறையான  விளைவுகளையும் ஏற்படுத்தி சமூக  இருப்பினையும்   ஆட்டம் காணச்  செய்துள்ளது. ஆயுதப்போராட்டமானது  தோல்வியில்  முடிவுறுத்தப்பட்டபோதும்,  அதனால்  சமூகத்துக்கேற்பட்ட தாக்கம்,  பின்னடைவுகள் என்பனவற்றிலிருந்து  மீண்டெழுவதற்கு  தமிழ் சமூகமானது அர்ப்பணிப்பு, தியாகம், தூரநோக்குப்பார்வை, தனித்துவம்காக்கும் ஒரு  உறுதியான  அரசியல்  தலைமையின்  பின்னால்  தனது  பயணத்தை  தொடர்வது  இன்றைய  காலத்தின்  தேவையாக  உள்ளது.
50மூ க்கு 50மூ, சமஷ்டி, தனிநாடு ,உள்ளக  சுயாட்சி  என்று  காலத்துக்குக்  காலம்  தமிழ்  மக்களின்  உரிமைப் பிரச்சினைக்கான  இறுதி  இலக்கின்  வடிவம்  மாற்றப்பட்டு,  அதற்கான  மாறுபட்ட  போராட்டங்களும்  முன்னெடுக்கப்பட்டு  இறுதியில்  இவை  எதுவுமே  கிடைக்கப்பெறாமல்  பேரினவாத  சக்திகளினாலும், தமிழ் அரசியல்  தலைமைகளின் தவறான அணுகுமுறைகளினாலும்;  தமிழ் பேசும் சமூகமானது அரசியல் அநாதைகளாக மாறநேர்ந்துள்ளது .இவ்வாறான  இழப்புக்கள், அழிவுகள், வலிகள், ஏமாற்றங்கள்  போன்றவற்றிலிருந்து கிடைக்கப்பெற்ற  கசப்பான  அனுபவங்களை கருத்திற் கொண்டு நாம் முன்னேறவேண்டியுள்ளது.  மிகமுக்கியமான  வரலாற்றுத்  தருணங்களில்  அறிவு  ரீதியான அரசியல் தீர்மானங்களை  மேற்கொள்ளாமல்,  உணர்ச்சி வயமான தீர்மானங்கள்  மேற்கொள்ளப்பட்டன.இந்த தவறான வழிகாட்டல்கள் இனிமேலும் தொடரக் கூடாது என்பதையிட்டு நாம் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும்.
 
எனவேதான்  தமிழ் மக்கள்  விடுதலைப்புலிகள்  கட்சியானது இன்றைய  காலத்தின் தேவையை  உணர்ந்து  யதார்த்தப+ர்வமானதும், நடைமுறையிற்  சாத்தியமானதுமான அரசியல் தீர்வு பற்றி தெளிவான பார்வையைக் கொண்டுள்ளது.
வரலாற்றில் எப்போதும்  இல்லாத சவால்கள்  நிறைந்த  இக்காலத்தில்  இன்றைய அரசியல்  சூழ்நிலையில்  அரசியல்  யாப்பினூடாக வரையப்பட்டு  தமிழ்மக்களுக்கு  கிடைக்கப்பெற்றிருக்கும்  குறைந்தபட்ச உரிமை மாகாண சபை  முறைமையாகும். இம்மாகாணசபை  முறைமையை தொடர்ந்து பேணிப்பாதுகாப்பதும் ஜனநாயக வழிமுறைகள் ஊடாக அதனை  வலுப்படுத்துவதும் அவசியமானதொன்றாகும். 13  ஆவது  அரசியல் திருத்தத்தினூடாக வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச அதிகாரங்கள் மட்டுமே தமிழ்  மக்களின்  நிறைவான இறுதியான  அரசியல்  உரிமை அல்ல. என்றபோதிலும்  இத்தனை வருட  போராட்டங்களுக்குப்பின்  கிடைக்கப்பெற்றிருக்கும்  இவ்அரசியல்  அடிப்படை  உரிமையினைத்  தளமாகக்  கொண்டு,  அதனைப்பயன்படுத்தி  அதனூடாக  தமிழ்பேசும்  மக்களின்  ப+ரணப்படுத்தப்பட்ட  அரசியல்  அபிலாசைகளையும்  அபிவிருத்திகளையும்  எய்தமுடியும் என்ற,  தீர்மானத்திற்கு நாம் வந்துள்ளோம். அதனடிப்படையில் அதிகாரமிக்க மாகாணசபைக்கான மக்கள்  ஆணையைக்  கோருமுகமாகவே  தமிழ்மக்கள்  விடுதலைப்புலிகள்  கட்சி  இப்பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்கியுள்ளது.
60 வருடகால  அரசியல்,  ஆயுத ரீதியான  போராட்டம் ஏற்படுத்திய  பாரிய  திருப்பங்களைக் கடந்த  நிலையில், அனைத்து இழப்புகளுக்கும் ஈடாக   தமிழ்பேசும்  மக்களுக்கு   கிடைத்துள்ள  யாப்புரீதியாக  உறுதிப்படுத்தப்பட்டுள்ள  தீர்வு  மாகாணசபை முறைமை மட்டுமேயாகும். 1987 ஆம்  ஆண்டு  இந்திய  அரசின்  தலைமையில்  ஏற்படுத்தப்பட்ட  மாகாண   சபைமுறைமைக்கு  20  வருடங்கள்  கடந்து  விட்டபோதிலும்  இப்போது  இரண்டு  வருடங்களாகத்தான்  கிழக்கு  மாகாண  மக்களினால்  இம்மாகாண  சபை  அனுபவிக்கப்பட்டு  வருகின்றது. ஆனாலும்  அதிகளவு  எதிர்பார்ப்புக்களும்,  ஏக்கங்;களும் உள்ள சமூகத்தின்  தேவைகளை  முழுமையாக  நடைமுறைப்படுத்த முடியாத துரதிர்ஷ்டவசமான  சூழ்நிலையில்தான் மாகாணசபை நிர்வாகம் இயங்கிக்  கொண்டிருக்கின்றது. கிழக்கு  மாகாணத்தில்  ஏற்படுத்தப்பட்ட  மாகாணசபை விரைவில்  வடமாகாணத்திலும்  ஏற்படுத்தப்படவேண்டும். இம்மாகாணசபைகளுக்கென  கொண்டுவரப்பட்ட  13  ஆவது  சட்டத்திருத்தத்தினூடான அரசியலதிகாரங்கள்  முழுமையாக  அமுல்படுத்தப்படவேண்டும். இதனூடாக கிழக்கு, வடக்கு  போன்ற மாகாணங்கள்  தமிழ்பேசும்   மக்களின் உறுதியான  அரசியல்  தீர்வுக்கும், அபிவிருத்திக்குமாக  கரம்  கோர்த்து  செயற்பட  வேண்டும். இவ்  இலக்கினை  எய்தவேண்டுமானால்  மாகாணசபையின் அதிகாரங்களை வழங்கக்கோரும் கட்சியின்  பிரதிநிதித்துவம்  பாராளுமன்றத்திலும்  உறுதிப்படுத்தப்படவேண்டும்.
கடந்த  கால தமிழ்  சமூகத்தின்  அரசியல்  வரலாற்றில்  கசப்பான அனுபவங்கள் எமக்குக்  கற்றுத்தரும்  முக்கிய பாடம்  யாதெனில்,  கிடைத்த  சந்தர்ப்பங்களைத்  தவறவிட்டமையும், காலத்தின்  தேவையுணர்ந்து  செயற்படாமையும், நடைமுறையிற்  சாத்தியமான  அரசியல்  இலக்குகளை  வகுக்காமையுமாகும். ஆயுதப்போராட்டம் தோல்வியில்  முடிவுற்றபோதிலும்,  அரசியல்  ரீதியில்  பலவீனமாகஉள்ள  நிலையிலும், தேசிய, சர்வதேச,  அரசியல்  எதிர்பார்ப்புகளுக்கேற்ப நம்பிக்கையினைக்  கட்டியெழுப்பவேண்டிய  பாரியபணி பொறுப்புமிக்க  அரசியற் கட்சிக்குண்டு. 
எமது மக்களின் விருப்புவெறுப்பிற்கேற்ப மக்கள்  பொறுப்பினை  உணர்ந்து  செயற்படுகின்ற  தமிழ்  மக்கள்  விடுதலைப்புலிகள்  கட்சியானது,  மாகாணத்தை அடிப்படை  அலகாகக்  கொண்ட அதிகாரப்பகிர்வுக்கான அரசியல்    நகர்வுகளை  ஏலவே ஆரம்பித்து,  அதன் ஒரு  முக்கிய  திருப்பமாக  இப்பாராளுமன்றப்  பொதுத்தேர்தலை  எதிர்  கொள்கின்றது.
அந்தவகையில் கிழக்கு  மாகாணசபையில்  பொறுப்புமிக்க  ஆளுங்கட்சியாக  இருக்கின்ற தமிழ்மக்கள்  விடுதலைப்புலிகள்  கட்சியானது,  மாகாணசபையினை  அரசியல்  அதிகாரங்களுடாகப்  பலப்படுத்தி,  அதிலிருந்து  தமிழ்பேசும்  சமூகத்தின் முழுமை பெற்ற    அரசியல்  உரிமைகளையும், அபிவிருத்திகளையும்  பெற்றுக்  கொள்வதற்காகவும்  தனித்துவமான  தனது  அடையாளத்தை  தொடர்ந்தும்  பேணவும்  மக்கள்  ஆணையைக் கேட்கின்றது.          
 
கடந்த  காலங்களில் அரசியல்  ரீதியான,  காலத்தின்  தேவைக்கேற்ப  அரசாங்கத்துடன்  இணைந்து  தேர்தலை  சந்தித்த  தமிழ்;மக்கள்  விடுதலைப்புலிகள்  கட்சியானது  இன்றைய  காலத்தின்  தேவையுணர்ந்து  தனித்து போட்டியிடுகின்றது. புதிதாகப்  பொறுப்பேற்கும்  அரசாங்கத்திடமிருந்து கிழக்கு மாகாணசபைக்குரிய முழுமையான  அதிகாரங்களைப்  பெற்றுக்  கொள்வதற்கான வலுவானதொரு பேரம் பேசும் சக்தியாக தன்னை இனம் காட்டமுனைகிறது.     தமிழ்  சமூகத்தின் பலமான அரசியல் அடையாளமாக  விளங்குகின்ற  இக்கட்சியின்  தனித்துவம் தொடர்ந்தும்  பேணப்படுவதற்காகவும் அதிகாரமிக்க மாகாணசபையினைக் கட்டியெழுப்பவும் இப்பாராளுமன்றத் தேர்தலினூடாக  மக்கள்  ஆணையை  கோருகின்றோம். இந்த ஆணையினை வழங்கவேண்டியது எமது  பிரஜைகள் ஒவ்வொரவரதும் வரலாற்றுக் கடமையாகும்.







சமுதாய  பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்
நடைபெறவுள்ள  பொதுத்தேர்தலின் எமது மக்களின்   சமூக  பொருளாதார கல்வி கலாசார மற்றும் சமூக மேம்பாட்டு விடயங்கள் அனைத்திலும் அபிவிருத்தி காணவேண்டும் என்கின்ற இலக்கை  மையமாகக்  கொண்டு  தமிழ்  மக்கள்  விடுதலைப்புலிகள்  கட்சியானது  பொதுத்தேர்தலுக்கு  முகம்  கொடுத்துள்ளது.

பாரம்பரிய கலை கலாசார  பண்பாடுகளையும் தொன்மைமிக்க  வரலாற்றையும்  கொண்ட  எமது  சமூகம்  இன்று  தனது  வரலாற்று  அடையாளங்களைத்  தொலைத்த  நிலையில்  காணப்படுகின்றமை  வேதனைக்குரிய  விடயமாகும். இந்த நிலைமையிலிருந்து  மீண்டெழுவதற்கு நாம் கல்வித்துறையில் மிகப்பெரிய பாய்ச்சல் ஒன்றை ஏற்படுத்த வேண்டியது அவசியமானதாகும். தமிழ்  மக்கள்  விடுதலைப்புலிகள்  கட்சியானது கடந்த மாகாணசபைத் தேர்தலில கலவித்துறையையும் அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னிறுத்தி களமிறஙகியது.
. ;
நடந்து  முடிந்த யுத்தமானது  எமது  சமூகத்தின்  கல்விவளத்தைப்  பெருமளவில்  சூறையாடியுள்ளது. பௌதீக  வளங்கள்    அழிவடைந்துள்ள  நிலையிலும்  அச்சமான  சூழ்நிலையிலும்.  கல்வியைத்  தொடர்வதில் எமது  சமூகம்  பல  சவால்களை  எதிர்  கொண்டது. ஆனால்  மாகாணசபை  பொறுப்பேற்கப்பட்டதன்  பின்பு  முதலமைச்சர்  கல்வித்துறையின்பால்  காட்டிய  அதீத ஈடுபாடு  காரணமாக இன்று  கிழக்கு  மாகாணத்தின் கல்வித்துறையில்  அபரிதமான  முன்னேற்றம் காணப்படுகின்றது. பல  சவால்களுக்கு  மத்தியிலே  இந்த  வளர்ச்சி எய்தப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள பாராளுமன்றப்  பொதுத்தேர்தலில் தமிழ்  மக்கள்  விடுதலைப்புலிகள்  கட்சியினது பிரதிநிதித்துவங்கள் உறுதிப்படுத்தப்படும்  பட்சத்தில் இன்னும் அதிகளவிலான  அபிவிருத்திகளை கல்வித்துறையிலே  எய்தமுடியும்.
இதே போன்று கிழக்கு மாகாணத்திலுள்ள  இன்னொரு  பிரதான  சவால் கணவனை  இழந்த  பெண்களும், பெண்  தலைமைக் குடும்பங்களுமாகும். யுத்தம்  இயற்கை அனர்த்தம் என்பன  காரணமாக  சுமார்  32000 க்கு  மேற்பட்ட  கணவனை  இழந்த  பெண்கள்  கிழக்கு  மாகாணத்தில்  உள்ளனர். இவர்களுக்கான  அடிப்படை  வாழ்வாதார  வசதிகளை  ஏற்படுத்திக்  கொடுப்பதை  ஒரு முக்கிய இலக்காகக்  கொண்டு  கிழக்கு  மாகாணசபையும்  தமிழ்  மக்கள்  விடுதலைப்புலிகள்  கட்சியும்  செயலாற்றி  வருகின்றது.
அவ்வகையில் எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து எமது மக்களினதும் பிரதேசத்தினதும் மேம்பாட்டுக்கான பல அபிவிருத்திக்கான முன்னெடுப்புக்கள் செயற்படுத்தப்படவுள்ளன.

;பெண்கள்;:
பாராளுமன்றப்  பொதுத்தேர்தலின்  பின்பு  மாகாணசபை   ஊடாக  கணவனை  இழந்த  பெண்களுக்கான   விசேட வாழ்வாதார மற்றும் கொடுப்பனவுத்  திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
வறுமை கோட்டின்கீழ் வாழ்வோர்;
• வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும்  குடும்பங்களுகn;கன  வழங்கப்படும் ஊக்கத்தொகையான (பிச்சைச்  சம்பளம்) ரூபா 100 இனை  ரூபா  1000  ஆக  உயர்த்துவதற்கு  நடவடிக்கை  எடுக்கப்படும்.
முதியோர், மற்றும் விசேட தேவைக்குட்பட்டோர்.
• முதியோர் உள ஆற்றுப்படுத்தல் நிலயங்களை பிரதேசங்கள் தோறும் ஆரம்பிக்கபபடும்.
• விசேட தேவைக்குட்பட்டோருக்கான அரச கொடுப்பனவுகளை உருவாக்குவதற்கும் அதிகரிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளல்.
• முதியோர் பராமரிப்புக்கான மாற்றுத் திட்டங்களை முதியோர் சங்கங்களினூடாக கண்டறிதலும் நடைமுறைப்படுத்தலும்.
ஆரம்பக்கல்வி:
• கிராமப்புறங்களில்  பெருமளவில் காணப்படும்  பாடசாலை மாணவர்களின் இடைவிலகலுக்கான  காரணங்களை கண்டறிந்து அவர்களை  மீளவும்  பாடசாலைக் கல்வியைத்  தொடர்வதற்கான    நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும்.;.
சிறுவர் பாதுகாப்பு:
• பராயமடையாத  சிறுவர்களை  வேலைக்கமர்த்துதலுக்கெதிராக கடும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அவை முற்றாக தடைசெய்யப்படும். அத்தோடு அவர்களது  கல்விநடவடிக்கைகள்  தொடர வாய்ப்புக்கள்  ஏற்படுத்தப்படும்.
பட்டதாரிகள்:
• வேலையற்ற  பட்டதாரிகளுக்குப்  பொருத்தமான  வேலை  வாய்ப்புக்கள்  வழங்க துரித  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும்.
இளைஞர் யுவதிகள்:
• படித்த இளைஞர்  யுவதிகளுக்கு  பொருத்தமான  வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்திக்  கொடுக்கப்பதுடன், அவர்களுக்கு  சில  விசேட  துறைகளில்  பயிற்சிகளை  வழங்குவதனூடாக இவர்களது  தொழிநுட்ப  அறிவை  மேம்படுத்தலும் சுயதொழிலுக்கான  வழிகாட்டலும் நடைமுறைப்படுத்தப்படும்.
கிராமிய அபிவிருத்தி:
• கிராமப்புறங்கள்  மற்றும்  அபிவிருத்தி குன்றிய  எல்லைக்கிராமங்கள் போன்றவற்றில் வாழும் மக்களுக்கு ; அடிப்படை உட்கட்டமைப்பு  வசதிகளை  முழுமையாக நிறைவேற்ற ஆவன செய்யப்படும்.
கிராமியப் பொருளாதாரம்:
• கிராமிய  ரீதியில்  அப்பிரதேசத்துக்கென  தனித்துவமானதும் மற்றும்  அப்பிரதேசங்;களில் விளையக்கூடியதுமான பயிர்ச்செய்கைகளை  இனங்கண்டு அவற்றை ஊக்குவித்தலும் அவ்வுற்பத்தியில் அப்பிரதேசத்தினை  தன்னிறைவடையச்செய்தலுக்குமான திட்டங்கள் அமுல்படுத்தப்படும்.
புனர்வாழ்வு:
• உயர்பாதுகாப்பு  வலயத்துள் தள்ளப்பட்ட பயிர்செய்கைக்  காணிகள்  மற்றும்  தனியார்  உடைமைகளை  மக்களுக்கு  மீளவும்  கையளிப்புச்  செய்வதற்கு ஏற்பான பிரேரணைகளைப் பாராளுமன்றத்தில் முன்வைத்து, நிவாரணம் பெறவும் அவற்றினை எமது மக்கள் மீளக் கையேற்கவும்  நடவடிக்கை  எடுத்தல்.
கல்விமேம்பாடு:
• கிராமப்புற மற்றும்  நகர்ப்புற  பாடசாலைகளின்  அடிப்படைத்தேவைகள் பூர்த்திசெய்யப்படும். உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
மீன்பிடி:
• மீன்பிடித்தடைகள்  நீக்குவதற்கு  உச்சபட்ச நடவடிக்கைகள்  எடுப்பதோடு, கடல் மற்றும் நன்னீர் மீன்பிடி துறைகளை நவீனமயப்படுத்தவும் சந்தைப்படுத்தல் வாய்ப்புக்களை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விவசாயம்:
• விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவற்pல் முன்னணி மாகாணமாக திகழும் வகையில் பிரமாண்டமான விவசாயப்பண்ணைகள் நவீPனமுறையில் உருவாக்கப்படும்.
சுகாதாரம்:
• கிராமிய  வைத்தியசாலைகளைப் புனரமைத்தலும் தரமுயர்த்தலும்,
கலைகலாசாரம்:
• எமது பாரம்பரிய கலைகலாசாரங்களை பேணுவதும், நவீன உலகின் புதிய கலை கலாசாரங்களை எமது சமூக யதார்த்தத்திற்கேற்ப உள்வாங்கவும் நடவடிக்கை எடுத்தல். இதற்காக உலக கலாசார மையம் ஒன்று கிழக்கு மாகாணத்தின் மையமான மட்டக்களப்பில் நிறுவப்படும்.
• முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் 100 அடி உயர முழுஉருவச்சிலை ஒன்றை மீன்பாடும் மட்டக்களப்பு வாவியில் நிறுவுதல்.
• முதுமையுற்ற கலைஞர்களுக்கு மாதாந்த ஓய்வூதிய திட்டம் ஒன்று உருவாக்கப்படும்.
நகர்ப்புறத்தொழிலாளர்கள்:
• தனியார் பேருந்துக்கள், ஆட்டோக்கள், தெருவோர வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும்  மற்றும் கூலித்தொழிலாளர்களுக்குமான ஓய்வூதியத்திட்டம் ஒன்றை உருவாக்குதல்.

பண்பாடு:
• இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வரலாற்று பொக்கிசங்களை சேகரித்து, ஆவணப்படுத்த கிழக்கு மாகாணத்தில் ஒரு நூதனசாலையை அமைத்தல்.
கைதிகள் விடுதலை:
• பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் விடுதலை தொடர்பாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
விளையாட்டுத்துறை:
• பாடசாலை விளையாட்டுக்கழகங்கள், இளைஞர் கழகங்கள் ஊடாக விளையாட்டுத்துறையினை நிதி நிர்வாக ரீதியாக விருத்தி செய்து புதிய யுத்திகளுடாக தேசிய சர்வதேச மட்டங்களிலான பங்குபற்றலுக்கும் வெற்றியீட்டலுக்குமான வழி சமைத்தல்.
உல்லாசத்துறை:
• உள்நாட்டு, சர்வதேச உல்லாச பயணிகளை கவரும் அளவிற்கு அடையாளம் காணப்பட்ட உல்லாச பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
வர்த்தகத்துறை:
• சிறிய, நடுத்தர வர்த்தக துறையை ஆரம்பிப்பதற்கும், விருத்தி செய்வதற்குமான மானியம் மற்றும் இலகு கடன் வசதிகளை ஏற்படுத்தப்படும்.
»»  (மேலும்)

ஊடகம் இனிமேல் பூடகமில்லை!

(பாகம் ஐந்து)
எஸ்.எம்.எம்.பஷீர்
anasஇளைய அப்துல்லாஹ் என்பவர் பிரித்தானியாவில் உள்ள "தீபம்" தொலைக்காட்சியல் பணிபுரிபவர். இவர் எழுத்தாளராக கவிஞராகவிருப்பினும் ஊடகவியலாளர் என்றவகையில் புலிகளின் புளுகுப்பிரச்சார "தீபத்துக்கு" இவரும் எண்ணையை ஊற்றினார். தானும் புலிகளால் விரட்டப்பட்ட ஒரு " முஸ்லிம்" என்று கூறி முஸ்லிம்களுக்குள் அனுதாபம் தேடியவர் , பின்னர் ஏன் புலிகளின் பிரச்சாரத்துக்கு துணை போனார். ஆனால் இவர் புலிகளை எதிர்த்தவரோ அல்லது புலிகளுக்கு எதிராக குரல் கொடுத்தவரோ அல்ல , மாறாக புலிகளை வடமாகாண முஸ்லிம் வெளியேற்றத்துக்காக மட்டும் தனது எழுத்தில் "கண்டித்தவர்". ஆனால் வடபுல முஸ்லிம்களிடம் இவர் பற்றிய பின்னணி பற்றி உசாவினால் யாருக்கும் அவரை பெரிதாக தெரிந்திருக்கவில்லை. தனது நூலொன்றின் அறிமுகத்தில் "இலங்கை முஸ்லிம்களுடைய அடையாளத்தை பலர் விளங்குவதில்லை. அவர்கள் தமிழ் பேசுவதால் தமிழர்களல்ல...இஸ்லாமியர். அவர்களின் அடையாளம் தனித்துவமானது. அவர்கள் தனி இனம்." என்று எழுதியர் இவர்தானா என்று சந்தேகப்படுமளவுக்கு பின்னர் புலிபபரணி பாடியதாக கூறப்படுகிறது.         
இவர் வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றம் குறித்து ஒலிப்பேழை வெளியிட்டுள்ளார் என்றும் அது குறித்து எழுதியுள்ளார் என்பதுதான் இலங்கையில் அறியப்பட்ட விடயம் , பின்னர் இங்கிலாந்து வந்து சிலகாலம் இங்கு தீபம் தொலைக்காட்சியில்  செய்தி  வாசிப்பவராக பணியாற்றிவிட்டு இலங்கை சென்று (! ) மீண்டும் இலண்டன் வந்து தீபத்தில் பணியாற்ற "வாய்ப்பு" பெற்றவர். வடபுலத்தில் முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்பிலக்கியங்களும் வட மாகான மக்களின் வெளியேற்றத்துடன் சிலகாலம் மௌனித்திருந்ததுடன், பின்னர் அது குறித்த எழுத்துக்களின் தீவிரம் முனைப்புப்பெற்ற கால இடைவெளியில் இளைய அப்துல்லாஹ் தன்னை வடபுல வெளியேற்றப்பட்ட முஸ்லிம் எழுத்தாளராக நிலைநிறுத்திக்கொள்ள முயன்றார். ஆயினும் இவர் உண்மையில் ஒரு தமிழர் என்றும் பின்னர் இஸ்லாம் மதத்தை தழுவியவர் என்பதும் அறிந்ததே. இவர் எப்போது ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்வியும் முக்கியத்துவமானது.
ஏனெனில் இவர் ஒட்டிசுட்டானில் புளியங்குளத்தில் பிறந்தவர். அதேவேளை இவர் எண்பதுகளில் மாத்தளையில் வாழ்ந்தபோது சிறு கதைகளை "கனக ஸ்ரீஸ்கந்தராஜா" என்ற புனை பெயரில் எழுதியதாக அவரே தனது நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். இப்பெயர் முருகக்கடவுளின் பெயரான கந்தன் எனும் பெயரையும் உள்ளடக்கியுள்ளது.உண்மையில் அப்போது அவர் முஸ்லிமாக இருந்திருந்தால் அவ்வாறான பெயரை தனது புனைபெயராக தேர்ந்தெடுக்க காராணமில்லை. எனவே 1995 களில் அவர் முஸ்லிமாக இருந்தாரா என்ற கேள்வி எழுகிறது. அனஸ் ஓட்டிசுட்டானை சேர்ந்தவர் எனவும் அவருடைய பெயர் ஸ்ரீ பால முருகன் எனவும், ஒட்டிசுட்டானில் ராணுவம் சுற்றி வளைத்தபோது; ஆமியிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள  ஒரு முஸ்லிம்வீட்டுக்குள் ஸ்ரீபாலமுருகன் ஓடியதாகவும், இலங்கை இராணுவம்  அவரை துரத்திசென்றபோது , அவ்வீட்டு பெண் குளித்துகொண்டிருந்த  நிலையை பார்த்து, இரரணுவம்  திரும்பி சென்று விட்டதாகவும், அதன்பின் பால முருகன் காப்பாற்றப் பட்டதாகவும், அதனால், தன்னை காப்பாற்றிய அப்பெண்ணை திருமணம் செய்ததாகவும், இன்று, அவர்களது குடும்பமும் இஸ்லாம்மதம் மாறிவிட்டதாகவும்  அப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம் இவர் தேர்ந்தெடுத்த அப்துல்லாஹ் என்ற பெயர், ஒருவேளை அந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவில் நாத்திகராகவிருந்த பிரபல எழுத்தாளர் நீரோட்டம் , தென்றல் பத்திரிகை ஆசிரியர் அடியார் இஸ்லாம் மத்தத்தை   தழுவி தனது பெயரை "அப்துல்லாஹ் அடியார்" என்று மாற்றிக்கொண்டு முஸ்லிம்களுக்குள் பிரபல்யமாக அறியப்பட்டார்.   எனவே ஒருவேளை அவரது இளையவர் என்ற பொருள்பட ( Junior Abdullah    ) தனது புனை பெயரை தேர்ந்திருக்கலாம். ஆனால் இவரது முஸ்லிம் பெயர் எம்.என்.எம்.அனஸ்.   அனாசின் சிறுவயது ஆசை முன்னாள் காலஞ்சென்ற பிரபல தமிழ் ஒலிபரப்பாளர் கே. எஸ். ராஜா எனும் கனகரத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா என்பவர் போல் வருவதாகும் , அந்த வகையில் தனது புனை புனை பெயராக அவரின் ( கே. எஸ். ராஜா  ) பெயரையே தேர்ந்தேடுத்திருக்கலாம். அல்லது தனது உண்மையான பெயரான ஸ்ரீ பாலமுருகன் எனும் முருகனின் ( தமிழ்  கடவுளின் ) பெயரை ஒத்த பெயரை ( முருகனின் ) இன்னுமொரு பெயருடன் வரிந்து கொண்டிருக்கலாம.  எது எப்படி இருப்பினும் யார் இந்த அப்துல்லா என்பதை விட இவரது ஊடக புலிகளுடனான சல்லாபங்கள் எமது கேள்விக்கு உரியவை.இவர் புலிகளின் குரலாக , சிங்கள இனவாதத்தினை கக்குகின்ற ஊடகவியலாளராக தனது தொழில் மற்றும் இலண்டன் புலம் பெயர் வாழ்க்கைக்காக ஒரு கூலிக்கு மாரடிக்கும் ஊடகவியலாளராக செயட்பட்டாரா ?        
இந்த இளைய அப்துல்லாஹ்வின் முஸ்லிம் சமூகத்துக்கான எழுத்துக்கள் குறித்து அவரின் நூலொன்றுக்கு முகவுரை எழுதியுள்ள மிகச்சிறந்த முஸ்லிம் எழுத்தாளர் , சமூக செயற்பாட்டாளர் நண்பர் ஓட்டமாவடி அரபாத் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.             
"தமிழ் மக்களின் வாழ்வை பகைப்புலனாகக்கொண்டு கதைகள் எழுதுய அளவிற்கு முஸ்லிம் மக்களின் வழ்வவலங்களை இளைய அப்துல்லா போதியளவு வெளிப்படுத்தவில்லை என்பதே எனது கவனிப்பு. மனிதனின் மனச்சாட்சியுள்ள குரலாக படைப்பாளி இருக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை. எனினும் தான் வாழும் சமூகத்தின் பெருமூச்சையும் துயரங்களையும் ஆக்க இலக்கியத்தின் ஊடாக அவன் பதிவு செய்வது அந்த சமூகத்திற்கு நன்றி செய்யும் நன்றிக்கடன் . அக்கடன் இளைய அப்துல்லாவை பொறுத்தவரை ஒரு "நிலுவை"யாகவே நிற்கிறது." இவ்விமர்சனமே விளக்கம் தேவையில்லாமால் அனசை விளக்கி  நிற்கிறது.
அதேல்லாம் விட இவரது "புலிஷ்துதி" எல்லை மீறி பாதிக்கப்பட்ட தமிழ் அப்பாவி மக்களைக்கூட கண்டுகொள்ளாத அளவு அவரது கண்களை மறைத்து இதயத்தை இறுக்கி விட்டது என்பதற்கு இன்னுமொரு சாட்சி புலிகளின் இறுத்திக்கால நிகழ்வுகளில் போது ஈழவன் எனும் ஒரு தீபம் நேயர் எழுதிய கருத்து.               
" ஊடகவியலாளர் திரு.அனஸ் முகமட் எனும் இளைய அப்துல்லாஹ் கூட தீபம் சார்பாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாரே தவிர விடுதலைப் புலிகளினால் ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் பற்றி குரல் கொடுக்கத் தவறி விட்டாரே !  (ஈழவன்)
அக்கருத்துக்கு இளைய அப்துல்லாஹ் எனப்படும் அனஸ் எனப்படும் ஊடகவியலாளர் என்ன எழுதினார் என்பதை நோட்டமிடுவோருக்கு தெளிவாகப்புரியும் இவர்  முட்டாள்களின் கூடாரத்திலிருந்துகொண்டு கூலிக்கு மாரடிக்கும் ஒரு பேர்வழி என்பது.    இதுவரை காலமும் புலிகளின் சார்பாக குரல் கொடுத்துவிட்டு இப்போது தான் முட்டாள்களின் கூடாரத்தில் இருக்கிறேன் என்று ஏற்றுக்கொள்வது புலிகள் பயம் இனி இல்லை என்பதை காட்டுகிறதா அல்லது புலிகளுக்காக வேலை செய்வதை தவிர்க்கமுடியவில்லை என்ற பச்சாதாபமா!. ஊடகத்தில் கூலிக்காக நிறையப்பேர் மாரடிக்கிறார்கள்  
" ஈழவன் என்னைப்பற்றிய புரிதலோடு இருக்கிறீர்கள். என்னை எவ்வாறாகவாவது ஊடகத்தில் இருந்து தூக்கவே பலர் விரும்புகிறார்கள் அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் செய்கிறார்கள். உங்களுக்கு எங்கே தெரியும்? நீங்கள் புலி என்கிறீர்கள். புலி என்னை துரோகி என்கிறது குடும்பத்தை இங்கு வைத்துக்கொண்டு வேக் பேமிற்றில் இருந்து பாருங்கள் அந்த வலி தெரியும் உங்களுக்கு. முட்டாள்களின் கூடாரத்தில் இருந்துகொண்டிருக்கிறேன் ஈழவன்.”
சரி அதுபோகட்டும் என்றால் தீபம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித்தயாரிப்பளராக பணியாற்றிய முன்னாள் புலிகளை விமர்சிக்கும் , நன்கு அறியப்பட்ட இலக்கிய விமர்சகர் ஒருதடவை என்னிடம் புலித்தலைவன் பிரபாகரனின் ஆளுமை கட்டுக்கோப்பு பற்றி வியந்து கூறியபோது நான் அறிந்த அவரா இவர் ! என்று குழம்பி எனது கருத்தை என்றும்போல் உறுதியாக தர்க்கரீதியாக சொல்லவேண்டி ஏற்பட்டது. தமிழ் தேசியம் என்று வந்தால் சில வேளைகளில்     யார் எந்தப்பக்கம் என்று ஒன்றுமே புரியலே!
(குறிப்பு: நான் ஊடகவியலாளன் அல்ல மற்றும் எனது தொழிலும் அதுவல்ல, எனது எழுத்தும் ஊடக பங்குபற்றல்களும்  ஊதியத்திற்காகவோ செய்யப்படுபவை அல்ல எனது கட்டுரைகளுக்கு தொலைபெசிமூலமும் மின்னஞ்ஞல் மூலமும் ஆதரவினை தெரிவித்துவரும் அனைவருக்கும் எனது நன்றிகள்,  மின்னல் ரங்காவினது இயக்கம் ஒரு அரசியல் கட்சியாக உத்தியோக பூர்வ  அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது அக்கட்சி சிங்களத்தில் "புரவசி பெரமுன* (குடிசன முன்னணி )  என்ற பெயரில் ஜெயரத்தினம் ரங்காவை கட்சிச் செயலாளராக கொண்டு பதிவு  செய்யப்பட்டுள்ளது. )
தொடரும் .. ..
»»  (மேலும்)

தபால் மூல வாக்களிப்பின் போது 3000 கண்காணிப்பாளர்கள் கடமையில்



 
  எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது மூவாயிரம் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

25 ஆம் 26 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது. இம்முறை 4 இலட்சத்து 15 ஆயிரத்து 430 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் முன்னைய தேர்தல்களின் போது வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற்ற மத்திய நிலையங்கள் மற்றும் அரசியல் நெருக்கடி காணப்படக்கூடிய இடங்களில் விசேட பிரதிநிதிகளை நேரில் அனுப்பவும் நடமாடும் கண்காணிப்புச் சேவையினை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுயாதீன தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவிப்பதாக அரச தகவல் திணைக்க்ளம் செய்தி வெளியிட்டுள்ளது.
»»  (மேலும்)

சுகாதாரப் பராமரிப்பு மசோதா; அமெரிக்க காங்கிரஸில் வாக்கெடுப்பு 216 வாக்குகள் தேவைப்படும் நிலையில் ஜனநாயக் கட்சி கடும் முயற்சி

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சுகாதாரப் பராமரிப்புத் திட்டம் காங்கிரஸில் (பாராளுமன்றம்) வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ள நிலையில் ஜனநாயக குடியரசுக் கட்சியின் ஆதரவுகளைப் பெறும் முயற்சியில் ஒபாமா ஈடுபட்டுள்ளார்.
நேற்று (ஞாயிறு) மாலை இத்திட்டம் (காங்கிரஸில்) வாக்களிப்புக்கு விடப்படவிரு ந்தது. கடந்த நான்கு தசாப்தங்களில் சுகாதாரப் பராமரிப்புக்கு செலவிடப்பட்ட 2.5 ரில்லியன் டொலர் தொகையிலும் பார்க்க கூடுதலான தொகையை இம்முறை ஒதுக்கீடு செய்யவே இந்த வாக்களிப்பு இடம்பெற ஏற்பாடாகியது.
216 வாக்குகள் இத்திட்டத்தை அங்கீகரிக்கத் தேவைப்படு கின்ற நிலையில் ஜனநாயக, குடியரசுக்கட்சி உறுப்பினர்கள் சந்திப்புகளை மேற்கொண்ட னர். சாதகமான நிலைப்பாட்டுக்கு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளதாக இரண்டு கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் கூறினர்.
எவ்வாறா யினும் இச் சட்டத்தை அமுலாக்க குடியரசுக்கட்சியினர் 07 பேரை ஜனநாயக கட்சியினர் இணங்கச் செய்துள்ளனர். இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதெனச் சிலர் தெரிவித்துள்ளனர். குடியரசுக் கட்சியின் சிலர் (புஷ்ஷின் கட்சி) இம் மசோதாவை தோற்கடிக்க வேண்டுமெனப் பகிரங்கமாகக் கூறியுள்ளனர். நேற்று வாக்களிப்பு நடந்ததா, இல்லையா என இச் செய்தி எழுதும்வரைத் தெரியவில்லை.
 

»»  (மேலும்)

மேற்குலகின் சதி முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிப்பு:

ஈரானுக்கு எதிரான அனைத்து சதி முயற்சிகளையும் முறியடித்துள்ளதுடன், எதிரிகளை தோற்கடித்துள்ளதாக புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சென்ற சனிக்கிழமை ஈரான் மக்கள் புதுவருடத்தைக் கொண்டாடினர். இப்புது வருடத்தை முன்னிட்டு ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத், ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கொமய்னி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையிலே எதிரிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ஈரானில் கடந்த வருடம் ஜூன் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. இதில் மீண்டும் அஹ்மெதி நெஜாதே வெற்றிபெற்றார்.
இத் தேர்தல் முடிவுகளை குழப்பும் நோக்குடன் அமெரிக்காவும், பிரிட்டனும் ஈரானின் எதிர்க் கட்சிகளைத் தூண்டின. இதனால் பெரும் ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள் இடம்பெற்றன. பலர் மரணமடைந்தனர். ஏராளமானோர் கைதாகினர். இந்நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்தி ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கு நாடுகள் முயற்சித்தன. இச்சதி முயற்சிகளை ஈரான் வெற்றிகரமாகக் கையாண்டது.
இதனைக் குறிக்கும் முகமாகவே அஹ்மெதி நெஜாத், அயதுல்லா அலி கொமய்னி ஆகியோர் மேற்கண்டவாறு அறிக்கைகளை வெளியிட்டனர். ஈரான் முன்னாள் மன்னர் ஷா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு 1977ம் ஆண்டு இஸ்லாமிய ஆட்சியேற்படுத்தப்பட்ட பின்னர் ஈரானின் மீது எதிரிகள் சந்தர்ப்பமொன்றை எதிர்பார்த்துள்ளனர்.
அவை சென்ற ஜனாதிபதித் தேர்தலில் அரங்கேற்றப்பட்டன. எதிரிகளின் (மேற்குலகின்) கைப்பொம்மைகளாக எவர் செயற்பட்டாலும் அவர்களின் கைகள் துண்டிக்கப்படுமென ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் எச்சரிக்கை விடுத்தார்.
 
»»  (மேலும்)

சகல வேட்பாளர்களுக்கும் விசேட அடையாள அட்டைகள் தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு

சகல வேட்பாளர்களுக்கும் விசேட அடையாள அட்டை வழங்குவதற்கு தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலதிக தேர்தல் ஆணை யாளர் டபிள்யு. பி. சுமணசிரி தெரிவித்தார். தேர்தலில் 7696 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.
இவர்களுக்கு அந்தந்த பிரதேச மாவட்ட செயலகங்களினூடாக விசேட அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதோடு, சகல வேட்பாளர்களின் விபரங்களும் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வேட்பாளர்களுக்கு வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்குச் செல்வதற்காகவும் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காகவும் வசதியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
இதேவேளை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆராயும் முக்கிய கூட்டமொன்று நேற்று முன்தினம் (20) தேர்தல் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள், உதவித் தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
»»  (மேலும்)

3/20/2010

யுவானின் பெறுமதியை அரசியலாக்க வேண்டாம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை


தனது நாணயமான யுவானின் பெறுமானம் தொடர்பில் கசப்புணர்வுக்கு உள்ளாகியிருக்கும் சீனா, அது குறித்த விவகாரத்தை மேலும் அரசியலாக்க வேண்டாம் என்று அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
காரணமற்ற போர்களில் பணத்தை விரயம் செய்வதன் மூலம் அமெரிக்காவே தனது நாணய மதிப்பை வேண்டுமென்றே தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டிருக்கின்றது என்றும், சீனாவிடம் அந்தப் போக்கு கிடையாது என்றும், சீன அரசாங்க ஊடகங்கள் கடுமையான சொற்களைக் கொண்ட விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.
ஒபாமா அரசாங்கம் வணிக கட்டுப்பாடுகளை திணிக்கக் கூடாது என்று பல்தேசிய நிறுவனங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று சீன வணிக அமைச்சு கோரியுள்ளது.
சீனா வேண்டுமென்றே தனது நாணயத்தின் மதிப்பை செயற்கையாக குறைத்து வைத்திருப்பதற்காக அதனை தண்டிக்க வேண்டும் என்று அமெரிக்க செனட்டர்கள் விரும்புகிறார்கள். அமெரிக்காவின் வணிக சமநின்மைக்கு இதுவே காரணம் என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்
»»  (மேலும்)

யாழ். குடாவில் 600 ஏக்கரில் தென்னை பயிர்ச் செய்கை

யாழ். குடாநாட்டில் தெங்குச் செய்கையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 600 ஏக்கரில் தென்னை பயிரிடப்படவுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் பளையில் ஆரம்பமாகுமென அமைச்சர் தி. மு. ஜயரட்ன தெரிவித்தார்.
வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, யாழ்ப்பாண குடாநாட்டில் மூன்று இலட்சம் தென்னங் கன்றுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இந்த வருட இறுதிக்குள் இந்த 3 இலட்சம் தென்னங்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டுவிடும்.
இது தொடர்பான ஆரம்ப வைபவம் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ளது.
அமைச்சர் தி. மு. ஜயரட்ன இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.
இதேவேளை யாழ் குடாநாட்டிலுள்ள தெங்கு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை மீண்டும் அதிகார சபைக்குக் கையளிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறவுள்ளது.
தென்னங்கன்றுகள் விநியோகத்தின் போது இடம்பெயர்ந்த 850 குடும்பங்களுக்கு மூவாயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தி. மு. ஜயரட்ன மேலும் கூறினார்.
யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் அமைச்சர் வெற்றிலைக்கேணிப் பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட வுள்ளார்.
தென்னந்தோட்ட உரிமையாளர்களையும் சந்தித்துப் பேசவுள்ள அமைச்சர், தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் ஆராய்வார்.
இதற்கிடையில், யாழ்ப்பாணத்திலும் அச்சுவேலியிலும் தென்னை நாற்று மேடைகள் அமைக்கப்படவிருக்கின்றன. இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
 
»»  (மேலும்)

3/19/2010

ரி. எம். வி. பியின் கரம் ஓங்குகிறது.

img_2814
இலங்கைத் திருநாட்டின் 2010ம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாடு பூராகவும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் நடந்த தேர்தல்கள் போலல்லாது மிகவும் போட்டியானதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஓர் தேர்தலாகவே இது அமையப் போகின்றது. மூன்றில் இரண்டு அதிகப் பெரும்பான்மை எடுத்து அரசியலமைப்பினை மாற்றியமைப்போம் என ஆளுந்தரப்பினரும், நாங்கள் மீண்டும் மக்களுக்கு ஓர் சந்தர்ப்பத்தை வழங்கி அதனூடாக புதியதோர் மாற்றத்தினை எற்படுத்தி ஆட்சியையே மாற்றி அமைப்போம் என எதிர்த் தரப்பும், மீண்டும் தமிழ்த் தேசியம் மாற்று உருவத்தில் ஒஸ்லோ பிரகடணம் எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மாகாண சபைக்கான முழு அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் மேலும் பல தமிழ் கட்சிகளும் சிறுபான்மை அரசியல் தலைவர்களும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளுடனும் கூட்டுச் சேர்ந்தும் பலப் பரீட்சையில் இறங்கியுள்ளார்கள்.
இதில் சிறபான்மை மக்களாகிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் தலைமைகளின் தீர்க்க தரிசனமான முடிவுகள் இங்கு மிகவும் முக்கியத்துவமானது. அதனடிப்படையில் குறிப்பாக கிழக்கு, வடக்கில் தமிழ் கட்சிகள் என எடுத்துப்பார்ப்போமானால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அவ்விரண்டுக்குமே ஆசனங்களைப் பெறும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது. இரு கட்சிகளுக்குமான பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை விட கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கே அதிகப்படியான ஆசனங்களைப் பெறும் வாய்ப்புக்கள் தென்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
திருகோணமலை மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரச்சாரம் மிகவும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளை அக் கட்சிக்கான ஆதரவும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கடந்த மூன்று நாட்களாக திருகோணமலையின் மூதூர், சம்பூர், ஈச்சிலம்பற்று, வெருகல், இலங்கைத்துறை முகத்துவாரம், சேனையூர், கட்டைபறிச்சான், பட்டித்திடல், திரியாய், புல்மோட்டை, நிலாவெளி, சலப்பையாறு, கோபாலபுரம், இறால்குழி, சூரச்சேனை, கந்தளாய், தம்பலகாமம், அது போன்ற பல இடங்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேதுரை சந்திரகாந்தன் நேரில் சென்று அப் பிரதேச மக்களின் குறைகளைக் கேட்டறிந்து சில உடனடித் தீர்வுகளை வழங்குவதோடு தனது கட்சியின் நிலைப்பாடு குறித்;தும் விளக்கமளித்து கட்சிக்கான ஆதரவினைத் தேடி வருகின்றார். நிச்சயமாக மட்டக்களப்பு , அம்பாரை மாவட்டங்களில் த. ம. வி. பு .கட்சிக்கு இருக்கின்ற ஆதரவினைப் போல் திருகோணமலையிலும் அதிக ஆதரவு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கே இருப்பது திட்;டவட்டமான உண்மையாகும்.
img_4007
»»  (மேலும்)

அன்பார்ந்த புலம் பெயர் வாழ் தமிழ் பேசும் உறவுகளே!

அன்பார்ந்த புலம் பெயர் வாழ் தமிழ் பேசும் உறவுகளே!boat-copy2 எதிர்வருகின்ற ஏப்ரல் மாதம் 08ம் திகதி இடம்பெற உள்ள பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளாகிய நாம் தனித்து களமிறங்கியுள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல இலங்கையில் பல பாகங்களிலும் எமது கட்சி இத்தேர்தலின் ஊடாக தன்னை விரிவு படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து குறுகிய கால இடைவெளிக்குள்ளேயே மக்களின் இயல்பு வாழ்வையும் ஜனநாயகச் சூழலையும் மீளக்கட்டியமைப்பதில் நாம் வகித்த பங்கு அளப்பரியது என்பது உலகு அறிந்த உண்மையாகும். இதற்கு எமது கட்சியும் கட்சி உறுப்பினர்களும் தலைமைப்பீடமும் கொண்டிருந்த ஜனநாயகத்தின் மீதான பற்றுறுதியும் அர்ப்பணிப்புகளுமே அடிப்படைக் காரணங்களாகும்.
கிழக்கு மாகாண சபையை உருவாக்குவதிலும் அதனை திறன்பட இயங்கச் செய்வததிலும் நாம் மும்முரமாக செயற்பட்டோம். கடந்த 30வருட போராட்டங்களில் விளைவுகளாக அழிவுகள் மட்டுமே எஞ்சி நிற்கின்ற இன்றைய நிலையில் எமது மக்களுக்காக கிடைத்துள்ள மிகக் குறைந்த பட்ச தீர்வாக “மாகாணசபை முறைமை” மட்டுமே எஞ்சியுள்ளது. இன்று அரசியலில் பலவீனமானதொரு நிலையில் தமிழ்தலைமைகள் காணப்படகின்றதன் காரணமாக மாகாண சபையை தாண்டிய எந்த ஒரு தீர்வுத் திட்டங்களையும் எமது மக்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் மிக அரிதாகவே உள்ளன. எனவே இன்றுள்ள மாகாண சபையை காப்பாற்றி கொள்வதும் அதனை பலப்படுத்துவதும் ஒன்றே எம்முன்னுள் உள்ள ஒரே தெரிவாகும் அதனடிப்படையில் கடந்த காலங்களில் மாகாண சபையின் உருவாக்கத்திற்காக எமது கட்சியானது அரசுடன் இணைந்து ஒரு கௌரவமான பங்காளியாக செயற்பட்டு வந்திருக்கின்றது. ஆனாலும் கிழக்கு மாகாண சபைக்குரிய அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் நாம் ஒருபோதும் பின்நிற்கவில்லை அதற்காக பல தடவைகளில் மத்திய அரசுடன் நாம் கடுமையாக முரன்பட்டுக்கொண்ட தருணங்களும் இருந்தன என்பது நீங்கள் அறிந்ததே,
இன்றைய நிலையில் நாம் எதிர்கொண்டுள்ள பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சியானது தனித்து போட்டியிடும் முடிவு கூட மத்திய அரசுக்கு உவப்பானது அல்ல என்பதையும் நீங்கள் அறிவீர்கள். கடந்த  காலங்களில் அரசியல்  ரீதியான,  காலத்தின்  தேவைக்கேற்ப  அரசாங்கத்துடன்  இணைந்து  தேர்தலை  சந்தித்த  தமிழ்;மக்கள்  விடுதலைப்புலிகள்  கட்சியானது  இன்றைய  காலத்தின்  தேவையுணர்ந்து  தனித்து போட்டியிடுகின்றது. புதிதாகப்  பொறுப்பேற்கும்  அரசாங்கத்திடமிருந்து கிழக்கு மாகாணசபைக்குரிய முழுமையான  அதிகாரங்களைப்  பெற்றுக்  கொள்வதற்கான வலுவானதொரு பேரம் பேசும் சக்தியாக தன்னை இனம் காட்டமுனைகிறது. தமிழ்  சமூகத்தின் பலமான அரசியல் அடையாளமாக  விளங்குகின்ற  இக்கட்சியின்  தனித்துவம் தொடர்ந்தும்  பேணப்படுவதற்காகவும் அதிகாரமிக்க மாகாணசபையினைக் கட்டியெழுப்பவும் இப்பாராளுமன்றத் தேர்தலினூடாக  மக்கள்  ஆணையை  கோருகின்றோம். இந்த ஆணையினை வழங்கவேண்டியது எமது  பிரஜைகள் ஒவ்வொரவரதும் வரலாற்றுக் கடமையாகும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 20 கட்சிகளும் சுமார் 20 சுயேற்சைக்குழுக்களுமாக நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கின்ற இந்த தேர்தலை நாம் மன மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கின்றோம். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள ஜனநாயகத்தின் மலர்ச்சிபற்றி நாம் பெருமைப்படுகின்றோம்.
ஆனபோதிலும் அதிகாரம் மிக்க கிழக்கு மாகாண சபையை கட்டியெழுப்ப தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளாகிய நாங்கள் மட்டுமே தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றோம் என்பதனை நிங்கள் அனைவரம் கவனத்தில் கௌ;ள வேண்டும். இத்தேர்தலில் பழம்பெரும் கட்சிகளுக்கும் தேசிய கட்சிகளுக்கும் மத்தியில் வளர்ந்துவரும் கட்சியாகிய நாம் மிகப்பெரிய போட்டியை சந்தித்துள்ளோம். பல்வேறு கட்சிகளாலும் பல கோடி ரூபாய்கள் தேர்தலுக்காக கொட்டி இறைக்கப்படுகின்ற நிலையில் எமது கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல எமது கட்சியின் நிதி வளம் பெரும் தடையாக இருக்கின்றது.
எனவே கடந்த காலங்களில் உரிமைக்குரலின் பெயரி;ல் நீங்கள் அளித்து வந்த நிதி ஆதரவு யுத்தத்திற்காகவும் அழிவிற்காகவும் மட்டுமே பயன்பட்டது. ஆனால் உண்மையில் எமது மக்களின் அதிகாரங்களை வென்றெடுக்க இன்று நாங்கள் எழுப்பும் குரலுக்கு உங்களது பங்களிப்பு வழங்கப்படுமானால் அது எமது மக்களுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும். எனவே எமது புலம் பெயர்வாழ் மக்களே உங்களிடம் எமது கட்சியானது தேர்தல் நிதிக்காக உங்கள் பங்களிப்பை கோருகின்றது.
அதிகாரம் மிக்க கிழக்கு மாகாண சபைக்கான ஆணையை கோரும் எமது போராட்டத்தில் புலம்பெயர் மக்களாகிய நீங்களும் இணைந்த கொள்ளுங்கள். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கரங்களை பலப்படுத்துவதில் பங்காளர்களாகுங்கள் என தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கின்றோம்.
   
இவ்வண்ணம்,
     செயலாளர்,
     தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்.
தொடர்புகளுக்கு,
ஜெ.தீபன்.
நன்கொடை இணைப்பாளர்,
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி,
கை.தொலைபேசி இல:-0094778794705
»»  (மேலும்)