2/15/2010

சிறுபான்மைத் தமிழர் மகாசபைக்குள் நுழைய T.N.A முயற்சி


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான  ஏற்பாடுகள் முன்பராக நடக்கத்தொடங்கிவிட்டது. பல்வேறு கட்சிகளும் தமது அரசியல் வேலைகளை செய்வதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.  கடந்த காலங்களில் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் போன்றஅமைப்புகள் எமது சமூகத்தில் நிலவிவரும் சாதியத்திற்கு எதிரான  சமூக விடுதலைப் போராட்டங்களை  மேற்கொண்டு வந்தது.

அப்போராட்ட காலத்தில் அவ் அமைப்புகளுக்கு எதிராகவும் சாதிய சமூகத்தை பேணுகின்ற கட்சியாகவும் செயல்பட்டது தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் என்பதை நாம் அறிவோம். இவ்விரு யாழ் மேலாதிக்க மனம்படைத்த கட்சிகளின் சிந்தனையைக்  கடைந்தெடுத்த ‘நுரை’ தான் இன்றைய TNA என்பதில் யாரும் சந்தேகம் கொள்ள முடியாது.

இன்றைய யாழ்ப்பாண சனத்தொகையில் அதிகப் பெரும்பான்மையாக உள்ள சமூகம் தலித்துக்கள் தான். அதே நேரம்   ‘தமிழ்  தேசிய வேள்விக்கு’ பலிகொடுக்கப்பட்ட  பெரும்பான்மை இனமும் தலித்துக்கள்தான்.

இந்த TNA பிசாசுகள் பிரபாகரனுக்கு முன்னால் மண்டியிட்டு  சலாம்போட்டு பெற்ற பதவியை, வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மைத் தமிழர் மகாசபைக்குள்ளால்  நுழைந்து   பாதுகாக்க முற்றப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

யுத்தத்திற்கு பின்பு கடந்த 2009 டிசம்பெர் மாதம்  சிறுபான்மைத்தமிழர் மகாசபை தனது மீழ் அங்குராப்பணத்தை நடத்தியது. அதில்  கடந்தகால சமூகப்போராளிகள் பலரும் கலந்து கொண்டனர்.  அச்சந்திப்பில் எமது தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசனும் பங்குபற்றியிருந்தார்.

இன்று இரண்டாவது தடவையாக சிறுபான்மைத் தமிழர் மகாசபை கூடியது . வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் நிலைப்பாடுகள் பற்றித் தீர்மானிப்பதற்காகவே இன்று  அச்சந்திப்பு நிகழ்ந்தது. இதில் கணிசமான பழைய போராளிகள் கலந்து கொண்டதோடு புதிய சந்ததியினரும் கலந்து கொண்டனர்.  சந்திப்பின் உரையாடலில் ஒரு சில உறுப்பினர்கள்   TNA கட்சியை ஆதரித்துச் செயல்படுவது பற்றிய தமது அபிப்பிராயத்தை தெரிவித்தனர்.

ஆனால் பெரும்பான்மையானவர்கள்  யாழ் மேலாதிக்கத்தின் கடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அவ்அபிப்பிராயத்தை கடுமையாக எதிர்த்தனர்.  அத்தோடு  நாம் தேர்தலில் பங்குகொள்வதாயின் எக்கட்சியையும் ஆதரிக்காது எமது சமூகத்திற்காக சுயேட்சையாக நின்று போடட்டியிடுவதுதான் எமது சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு சாதகமாக அமையும் என்றும் கூறினர். அதுவே இன்றை இச்சந்திப்பின் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.

—இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி-

0 commentaires :

Post a Comment