வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்ப டுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களைத் தெரிவதிலும், முன்னாள் உறுப்பினர்களுக்கு வாய்ப்ப ளிப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவதிலேயே நாட்களைக் கடத்தி வருவதாக அந்தக் கட்சிகளின் சிரேஷ்ட தலைவர்கள் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம், இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டு செயற்படுவதா லும், வேட்பாளர்களைத் தெரிவதிலுள்ள வெளிப்படைத் தன்மையற்ற போக்கினாலும், அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதிருப்தியடைந் துள்ளனர்.
வேட்புமனுக்களைத் தயாரிப்பதில் குறித்த தொகையிலும் பார்க்க கூடுதலானோரின் பெயர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதால், யாரை உள்வாங்குவது யாரை நீக்குவது என்பதைப் பற்றிய இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் திண்டாட்ட நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
தாம் வேட்பாளர் பட்டியலில் உள்ளட க்கப்பட்டுள்ளோமா? நீக்கப்பட்டுள்ளோமா? என்பது தெரியாமல் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பலர் குழம்பிப் போயுள்ளதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.
வேட்புமனுக்களின் விபரங்களை இறுதி நேரத்திலேயே வெளியிடவுள்ளதா கவும் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் விடுபடுவதாகவும் கூட்டமைப்பு தெரிவித்து வருகிறது. இதனால், நீக்கப்படுவோர் யார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு ஒவ்வோர் முன்னாள் உறுப்பினரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகி ன்றனர். இறுதி நேரத்தில் தமது பெயர் நீக்கப்பட்டமை தெரியவந்தால், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மாற்று நடவடிக்கையை மேற்கொள்வதில் ஏற்படும் சிக்கலையும் நெருக்கடியையும் தவிர்ப்பதற்காகவே இந்த முயற்சி என அவர்கள் தெரிவித்தனர். சிலர் தாம் நிச்சயமாக நீக்கப்படலாம் எனத் தீர்மானித்து வேறு கட்சிகளை நாடிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தீர்மானித்தே தாம் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்ததாக பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரான தங்கேஸ்வரி கதிர்காமநாதன் எமக்குத் தெரிவித்தார்.
இதேநேரம், தமிழ்த் தேசிய கூட்ட மைப்பில் அங்கம் வகிக்கும் அகில இல ங்கை தமிழ் காங்கிரஸ் முரண்பட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் கஜன் பொன்னம்பலம் முன்வைத்த யோசனைகளை கூட்டமைப்பு ஏற்க மறுத்ததை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான முறுகல், முரண்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் கூட்டமைப்பு இறுதி நேரம் வரை பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கத் தீர்மானித்துள்ளதுடன், மேற்கொள்ளும் முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவதைத் தவிர்க்கவும் தந்திரோபாய செயற்பாட்டை முன்னெடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
0 commentaires :
Post a Comment