2/22/2010

ஐ.தே.க - ஜே.வி.பி நேரடி மோதல்



ஐ.தே.கவுக்கும், ஜே.வி.பிக்கும் இடை யிலான கருத்து முரண்பாடுகள் உக்கிர மடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. இரு சாராரும் இப்போது நேரடி மோத லில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தால் ஜே.வி.பிக்குத் தேசியப் பட்டியலில் மூன்று இடங்களை ஒதுக்கித்தர முடியும் என ஐ.தே.க தெரிவித்துள்ளதால் அந் தக் கட்சி மீது ஜே.வி.பி. கொதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“பொதுத் தேர்தலில் யானைச்சின்னத்திலேயே ஐ.தே.க போட்டியிடும். ஜே.வி.பி. விரும்பினால் யானைச்சின்னத்தில் இணைந்து போட்டியிடலாம். இல்லையேல் எமக்கு ஆதரவளித்தால் அவர்களுக்கு தேசியப்பட்டியலில் மூன்று ஆசனங்களை வழங்க முடியுமென்று ஐ.தே.க.வின் காலி மாவட்ட அமைப்பாளர் வஜிர அபேவர்தன கூறியிருக்கின்றார். இதனையடுத்து ஜே.வி.பி. அதன் அனைத்துக் கூட்டங்களிலும் ஐ.தே.க.யை கடுமையாகச் சாடி வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன.
“வேறு கட்சிகளின் ஆதரவுடன் பாராளுமன்ற த்துக்குச் செல்லும் அவசியம் கிடையாது. ஒவ்வொரு கட்சியினதும் தேசிய பட்டியலில் செல்ல வேண்டிய தேவையும் எமக்கு இல்லை” என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பகிரங்கமாகவே ஐ.தே.க.வை விமர்சித்து வருகிறார்.

0 commentaires :

Post a Comment