கடந்த சில மாதங்களாக தொலைபேசியினூடாக மிரட்டல் விடுத்து பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட கும்பல் ஒன்று இன்று ஏறாவூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கிழக்கில் பலம்பொருந்திய அரசியல் கட்சியான த.ம.வி.பு கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அக்கட்சியின் அங்கத்தவர்கள் என்று கூறியே இவ் நாசகார வேலையில் ஈடுபட்டு வந்ததாக அறியமுடிகின்றது. பொலிஸ் விசாரணைகளின்போது இவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் இருக்கின்ற ஓர் அரசியல் கட்சி அங்கத்தவர்கள் என்றும் செங்கலடி வர்த்தகர் ஒருவரின் கொலையுடன் நெருங்கிய தொடர்பு பட்டவர்கள் எனவும் அறிய முடிகின்றது.
0 commentaires :
Post a Comment