2/04/2010

கப்பம் பெறப்பட்டு கப்பல் விடுதலை


சோமாலியக் கடற்கொள்ளையர்களால் நவம்பர் மாதம் கடத்தப்பட்ட கப்பல் கப்பம் செலுத்தப்பட்ட பின்னர் கடந்த திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டது. மூன்று மில்லியன் டொலர் கப்பமாகச் செலுத்தப்பட்டது.

ஹெலிகொப்டர்கள் மூலம் கப்பம் செலுத்துவதற்கான ஆவணங்கள் கப்பலில் போடப்பட்டது. மாலுமிகள் அனைவரும் சுகமாக இருந்தனர்.

விடுவிக்கப்பட்ட கப்பலை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல கடற்படைக் கப்பல் வந்தது.

குவைத்திலிருந்து தென்னாபிரிக்காவின் தலைநகர் டேர்பனுக்குச் சென்று கொண்டிருந்த வேளை நவம்பர் மாதம் கடத்தப்பட்டது. சோமாலியாவின் கடல் எல்லையில் வைத்துக் கப்பல்கள் கடத்தப்படுவதுடன், கப்பத்தின் தொகையையும் கொள்ளையர்கள் அதிகரித்துள்ளனர்.


0 commentaires :

Post a Comment