சரத் பொன்சேகாவை அவரது மனைவியும், சட்டத்தரணியும் எந்தவித சிரமமும் இன்றி பார்வையிடலாம். இதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு நேற்று வழங்கியுள்ளது என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
சரத் பொன்சேகா பாதுகாப்பாக இருப்பதாகவும் அவருக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகள் முழுமையாக வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். சரத் பொன்சேகாவின் கைது மற்றும் எதிர்காலத்தில் முன்னெ டுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்புக் கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது.
தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில் :- பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரி, முன்னாள் இராணுவத் தளபதி என்ற அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு கொடுக்கப்பட வேண்டிய சகல வசதிகளும், கெளரவமும் வழங்கப்பட்டுள்ளன. அவர் விரும்பிய ஒருவரை அவர் தனது சட்டத்தரணியாக தெரிவு செய்யவும் முடியும் என்றும் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment