மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீதா பிரபாகரனை மேயர் பதவியிலிருந்நு உடனடியாக நீக்க வேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் வீரகேசரி வார வெளி யீட்டுக்குக் கருத்துத் தெரிவித்த இந்த அமைப் பின் ஊடகப் பேச்சாளர் அஸாத் மௌலானா மேலும் கூறுகையில்,இறுதியாக நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமது அமைப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் புடன் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வின் அடிப்படையிலேயே குறிப்பிட்ட தேர்தலில் எமது வேட்பாளர்களையும் நிறுத்தியது.
எமது கட்சியின் மூலம் நிறுத்தப்பட்ட வேட்பாளரான சிவகீதா பிரபாகரன் வெற்றி பெற்றதையடுத்தே அவரை மட்டக்களப்பு மாவட்ட மேயராக நியமிக்க வேண்டுமென நாம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உயர் பீடத்தைக் கேட்டிருந்தோம். அதற்கமை வாகவே அவருக்கு மேயர் பதவியும் வழங்கப் பட்டது. ஆனால், அவர் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தார். இதற்கு முன்னர் கூட எமது கட்சியின் ஆலோசனைகளைப் பெறாத நிலையிலேயே சில முடிவுகளையும் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இவரை எமது கட்சியில் தொடர்ந்தும் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை. இந்த விடயத்தில் எமது கட்சிக்கு தார் மிகப் பொறுப்புள்ளது. அதனை நிறைவேற் றவும் வேண்டியுள்ளது. இதன் முதல்கட்டமாக மட்டக்களப்பு மாநகர மேயர் பதவியிலிருந்து இவரை நீக்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக நாம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் எமது நியாயங்களை எடுத்துக் கூறியுள்ளதுடன் அவரை உடன டியாக மேயர் பதவியிலிருந்து நீக்குமாறும் கேட்டுள்ளோம்.
இதுதவிர, மட்டக்களப்பு மாநகரசபையால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேர ணையொன்றும் கொண்டு வரப்பட்டு அதிலும் கூட அவருக்கு எதிராக பெரும்பாலானோர் வாக்களித்துள்ளனர்'' என்றார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் களில் ஒருவரும் அமைச்சருமான விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) இது தொடர்பாக வீரகேசரி வாரவெளியீட்டுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
""உறுதியற்ற கொள்கையினையும் தனது மனச்சாட்சிக்கே மாறான அரசியல் விடயங்க ளிலும் ஈடுபடும் சிவகீதா பிரபாகரனை எவ்வாறு எமது கட்சியின் வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்துவது? கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வையையும் அவரது அரசாங்கத்தையும் பகிரங்க மேடைகளில் அவர் எவ்வாறு விமர் சித்தாரென்பது எமக்குத் தெரியும். இப்ப டிப்பட்ட ஒருவரை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்துமாறு நாம் யாரிடம் போய்க் கூறமுடியும். அது எங் களுக்கே ஒரு வெட்கம் கெட்ட செயலாக அமையலாம்.
இவரின் அண்மைக்கால அரசியல் போக் குகள் எமது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப் தியைத் தோற்றுவித்துள்ளது. நாங்கள் இது தொடர்பில் விரைவில் கூடி ஆராயவுள்ளோம். மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீதா பிரபாகரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், தான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் பின் அங்கத்தவர். அந்தக் கட்சியினால்தான் எனது விவகாரங்களைக் கையாள முடியும். என்னை மேயர் பதவியிலிருந்து நீங்குமாறோ அல்லது நான் நீக்கப்பட்டுள்ளதாகவோ கூட் டமைப்பின் செயலாளரான சுசில்பிரேம்ஜயந் தவிடமிருந்து எவ்வித அறிவித்தலும் எனக்குக் கிடைக் கவில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவதா இல்லையா என்று நானே தீர்மானிக்காத நிலையில் என்னைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தவிர்த்துக் கொள்வது பற்றி மற்றவர்கள் ஆலோசிப்பதில் எவ்வித பயனுமில்லையென்று'' அவர் குறிப்பிட்டார்.

0 commentaires :
Post a Comment