பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தமிழ் மக்கள் விடு தலைப் புலிகள் கட்சி வன்னி மற் றும் யாழ். மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை நேற்று தாக்கல் செய்தது. கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், கட்சியின் செயலாளர் கைலேஷ்வரராஜா, ஆஸாத் மெளலானா குழுவினர் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக அங்கு சென்றிருந்தனர். வன்னி மாவட்டத்திற்கான வேட்புமனுவில் கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஷ்வரராஜாவை முதன்மை வேட்பாளராகக் கொண்ட வேட்பு மனு வவுனியா தெரிவத்தாட்சி அலுவலர் பீ. எம். எஸ். சார்ள்ஸிடம் நேற்றுக்காலை 9.10 மணியளவில் கையளிக்கப்பட்டது. வவுனியாவிலிருந்து ஏ 9 பாதை யூடாக யாழ். நகர் சென்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயலாளர் யாழ். மாவட்டத்திற் கான வேட்பு மனுவையும் நேற்று பகல் 1.20 மணியளவில் தாக்கல் செய்தனர். கட்சியின் செயலாளர் கைலேஷ்வ ரராஜா வன்னி, யாழ். மாவட்டங்க ளுக்கான வேட்பு மனுக்களை தாக் கல் செய்தார். வடக்கில் தமிழ் மக்கள் விடு தலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுள் ஐந்து பெண்கள் அடங்குகின்றனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட வுள்ள வேட்பாளர்கள், கட்சியின் அதிஉயர் பீட உறுப்பினர்களும், இதன்போது சமுகமளித்திருந்தனர். |
2/24/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment