வரும் பாராளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வதென்பதை கலந்தாலோசிக்கும் பட்சத்தில் நேற்று காலை சிறுபான்மைத் தமிழர் மகாசபை கூடியது. அச்சந்திப்பில் பழைய சிறுபான்மைத் தமிழர் மகாசபை போராளிகளுடன் மிக அதிகமான புதிய தலைமுறையினரும் கலந்து கொண்டனர். மிக நீண்டநேரமாக பல்வேறு தரப்பு நியாயங்களும் விவாதத்திற்குள்ளாக்கப்பட்டு இறுதியில் தாம் சுயேட்சையாகவே இத்தேர்தலை சந்திப்பதென பெரும்பான்மையினரின் விருப்பத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பதின்மூன்று சிறுபான்மைத் தமிழர் மகாசபை அங்கத்தவர்கள் சுயேட்சையாக வரும் தேர்தலில் போட்டியிட உள்ளார்கள். வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதாகவும் முடிவெடுக்கப்பட்டது.
0 commentaires :
Post a Comment