2/21/2010

ஆப்கான் பிரச்சனையால் நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் தங்கியிருப்பது தொடர்பான சர்ச்சையில் நெதர்லாந்து அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் நேட்டோ அதிகாரிகள் ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் செயற்பாடு குறித்து உத்தரவாதம் கொடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் டச் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறவுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானியர்கள் நேட்டோவின் ஆதரவை தொடர்ந்து பெறுவார்கள் என நேட்டோவின் சார்பில் பேசவல்லவரான ஜேம்ஸ் அப்பாதுரை கூறியுள்ளார்.
தலிபான்களுக்கு எதிரான மிகப்பெரிய படை நடவடிக்கையில் நேட்டோவினர் ஈடுபட்டு வரும் இந்நிலையில் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையே, டச் படைகள் நிலைகொண்டுள்ள உருஸ்கான் மாகாணத்தின் ஆளுநர், டச் படைகள் வெளியேறினால் மீள்கட்டமைப்பு பணிகள் பின்னடைவை சந்திக்கும் என  தெரிவித்துள்ளார்.
சாலைகளை அமைப்பது, கட்டிடங்களை கட்டுவது, ஆப்கான் காவல்துறையினருக்கு பயிற்சி கொடுப்பது, பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போன்ற விஷயங்களில் டச் படையினர் முக்கிய பணியாற்றுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment