ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ. எஸ். பீ. பிளஸ் வரிச்சலுகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், நாட்டின் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்களும் ஊழியர்களும் பாதிக்கப்படாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
தொழிற்சாலை உரிமையாளர்களினதும் ஊழியர்களினதும் நலன்களை அரசாங்கம் கவனிக்குமென்றும் அமைச்சர் அழகப்பெரும குறிப்பிட்டார். எரிபொருள் விலையேற்றத் தின்போது எவ்வாறு மக்களின் நலன்கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டதோ ஜீ. எஸ். பி. பிளஸ் விடயத்தில் அரசாங்கம் பொறுப்பேற்று எந்தச் சவாலையும் எதிர்கொள்ளுமென்று அமைச்சர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் தகவல் அளித்த அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், வரிச்சலுகையை மீளப்பெற அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்து மென்றும் ஆனால், எவ்விதத்திலும் இறைமை விட்டுக்கொடுக்கப்பட மாட்டா தென்றும் குறிப்பிட்டார்.
0 commentaires :
Post a Comment