பாராளுமன்றத் தேர்தலுக்காகக் கூட்டணி அமை ப்பதில் எதிரணிக் கட்சிகள் தீவிரமாக ஈடுபட் டிருக்கின்றன. இக்கட்சிகளுக்கிடையே கொள்கை உடன்பாடு எதுவும் இல்லை. கலாசார, பொருளாதார, சர் வதேச விடயங்களிலும் சமூக நோக்கிலும் ஒன்றுக்கொ ன்று முரண்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடு தலை முன்னணியும் இந்த உத்தேச கூட்டணியில் பிர தான கட்சிகளாக உள்ளன. பொதுவான வேலைத் திட் டம் பற்றிய அக்கறை இவர்களுக்கு இல்லை. பொதுவான சின்னம் பற்றியே பேச்சுவார்த்தை நடத்துகின்றார்கள். பாரா ளுமன்ற ஆசனங்களைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லாத கூட்டணி என்று இதைக் கூறலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கூட்டணியுடன் தன்னை இனங்காட்டுவது இக் கூட்டமைப்பின் உண்மையான நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்புகின்றது. தமிழ் மக்களின் ஆறு தசாப்த காலத் தலைமையின் தொட ர்ச்சியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகி யது. எனவே பிரதான நோக்கத்தைப் பொறுத்த வரை யில் ஆரம்ப காலத் தமிழ்த் தலைமைக்கும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்குமிடையே எவ்வித வேறுபாடும் இல்லை. தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை காண்பதே அந்த நோக்கம். ஆனால் முன்னைய தலை மைகளைப் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அந்த நோக்கத்துக்கு முன்னுரிமை அளித்துச் செயற்பட வில்லை. ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கூட்டமைப்பு மேற்கொண்ட சகல தீர்மானங்களும் இதை உறுதிப்படுத் துகின்றன. பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழான மாகாண சபையை ஏற்க முடியாது என்று தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புத் தலைவர்கள் கூறுகின்றார்கள். மாகாண சபை பாதகமானதென்றால், தமிழ் மக்கள் அனைவரும் மாகாண சபைத் தேர்தலில் பங்குபற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது எதற்காக என்பது பற்றிய விளக்கம் எதையும் இதுவரை இவர்கள் அளிக்கவில்லை. அதை விடுவோம். பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வையே கூட்ட மைப்பினர் எதிர்பார்க்கின்றார்களென்றால் அதற்குச் சாத கமான முறையிலேயே அவர்களின் அணுகுமுறை அமைய வேண்டும். பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வு அரசியலமைப்பு மாற்றத்துடன் சம்பந்தப்பட்டது. அரசிய லமைப்பில் மாற்றம் செய்வதன் மூலமே பதின்மூன்றா வது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வை நடை முறைப்படுத்த முடியும். அதற்குப் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை. பாராளுமன்றத் தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறக்கூடிய நிலை யிலுள்ள அரசியல் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்து வதன் மூலமே பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்க கூடுதலான அரசியல் தீர்வு சாத்தியமாகும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான இந்த அணுகுமுறையைப் பின்பற்றவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றிலிரண்டு பெரும் பான்மையைப் பெறக் கூடிய நிலையில் இருக்கின்றது. எதிரணிக் கூட்டணிக்குச் சாதாரண பெரும்பான்மையே சாத்தியமில்லை. ஆனால் எதிரணிக் கூட்டணியுடனேயே தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை இனங்காட்டுகின்றது. இனப்பிரச்சினையின் தீர்வுக்கான கோரிக்கையை முன்வை க்கும் போது அதை வென்றெடுப்பதற்குச் சாத்தியமான வழி முறையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். கோரிக்கையை முன்வைப்பதும் அதை வென்றெடுப்பதற்குச் சாத்தியம ற்ற நிலைப்பாட்டை மேற்கொள்வதும் இதுவரையிலான தமிழ்த் தலைமையின் பாரம்பரியமாக உள்ளது. இது மேலும் தொடர்வதை அனுமதிக்கக் கூடாது. ஒன்றில் தலைமை தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது மக்கள் தலைமையை மாற்ற வேண்டும். |
2/18/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment