ஆடைக் கைத்தொழில் துறை முக்கியஸ்தர்கள் கருத்து; புதிய உலக சந்தை வாய்ப்பை தேடுமாறும் வேண்டுகோள்
மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஜி. எஸ். பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்படலாம் என்று இலங்கையில் காணப்படும் பயப்பிராந்தி அவசியமற்றது. இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் புதிய உலக சந்தை வாய்ப்புகளை தேடிப்பெற வேண் டும். நேற்று முன்தினம் கொழும்பு ஹில்டன் ஹோட்டல் அரங்கில் இடம்பெற்ற சர்வதேச ஆடைத் தொழில் கண்காட்சி தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போது அங்கு உரையாற்றிய ஆடைக் கைத்தொழில் துறை முக்கி யஸ்தர்களினால் இக்கருத்து முன்வைக்கப் பட்டது.
செம்ஸ் குளோபல் நிறுவனத்தின் தலைவரும் குழும முகாமைத்துவ பணிப்பாளருமான மெஹ்ரூன் இஸ்லாம் இது தொடர்பாக தெரிவிக்கையில், ஜி. எஸ்.பி. பிளஸ் சலுகை சுனாமி அனர்த்தத் தின் பின்னர் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒன்றெனவும் இச்சலுகை இல்லா விட்டால் வேறு வழியே கிடையாது எனக் கருதுவது தவறான அணுகுமுறை எனவும் குறிப் பிட்டார்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, தென்னாபிரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் என நாம் முயற்சி செய்யாத பல ஆடை ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்புகள் உலகெங்கும் உள்ளன. இச் சந்தைகளில் ஊடுருவி புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் முன்வர வேண்டும். நமது ஆடை உற்பத்தித் தரம் உயர் மட்டத்தில் பேணப்படுவதாகவும், தரம் கொண்டதாகவும், உலக நாடுகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாகவும் இருக்குமானால் புதிய சந்தை வாய்ப்புகளை பெறுவதில் சிரமம் இருக்காது.
இவை மட்டுமன்றி, பெற்றுக் கொள்ளும் கட்ட ளை களை உரிய நேரத்தில் முடித்து சரியான தருணத்தில் அனுப்பி வைத்தல், வாக்குறு தியை காப்பாற்றுதல் என்பனவற்றிலும் ஆடை தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்று மதியாளர்கள் நம்பகமாக நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் ஜி. எஸ். பி. சலுகையை இழப்பது பற்றி கவலை கொள்ள வேண்டியிருக்காது. இலங்கை ஏற்றுமதியாளர்கள் முயற்சிகளை கைவிட்டு விடக்கூடாது.
இவ்வாறு இங்கு ஊடகவியலாளர் களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மெஹ்ரூன் இஸ்லாமும் ஏனைய பிரமுகர் களும் பதிலளிக்கையில் தெரிவித்தனர்.
ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை இலங்கை இழக்கலாம் என்ற கருத்து நிலவும் காலக் கட்டத்தில் சர்வதேச நாடுகள் கலந்து கொள்ளும் ஆடைத் தொழில் கண்காட்சி கொழும்பில் நடத்தப்படுவது எவ்வாறு சாத்தியமானது என்ற கேள்விக்கு பதிலளிக் கையில், ஆடைத் தொழில்துறையில் இலங்கை சாதகத்தன்மைகளுடன் இருப்ப தையே இது எடுத்துக்காட்டுவதாக இங்கு பதில் அளிக்கப்பட்டது.
கொழும்பு டீ.ஆர். விஜேவர்தன மாவ த்தையில் அமைந்துள்ள கண்காட்சிக் கூடத்தில் எதிர்வரும் மார்ச் 4ம் திகதி முதல் 6ம் திகதி வரை மூன்று பிரிவுகளாக இந்த இலங்கை ஆடை உற்பத்தித்துறை கண்காட்சி நடைபெறுகிறது. சுமார் இருபது நாடுகளில் இருந்து இருநூறு முதல் 500 சர்வதேச பார்வையாளர்களும் கொள்வனவாளர்களும் இந்த இலங்கை ஆடைத் தொழில்துறை கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
0 commentaires :
Post a Comment