2/11/2010

பாலர் பாடசாலைக் கல்வி நியதிச் சட்டம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.


இன்று (09.02.2010) கூடிய கிழக்கு மாகாண சபை அமர்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திற்கான பாலர் பாடசாலைக் கல்வி நியதிச்சட்டம் ஆளுந்தரப்பு,எதிர்தரப்பு என்ற வேறுபாடின்றி ஏகமானதாக அங்கிகரிக்கப்பட்டது.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பின் பதின்முன்றாவது திருத்தத்தின் பயனாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கினங்க கிழக்கு மாகான எல்லைக்குள் ஏற்கனவே தாபிக்கப்பட்டு,செயற்படுத்தப்பட்டுவரும் மற்றும் புதிதாக தாபிகிகப்படும் பாலர் பாடசாலைகளைக் கண்கானிக்கும்,நிர்வகிக்கும்,ஒருங்கினைக்கும் மற்றும் வழிநடத்தும் காரியங்களுக்காக பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் ஒன்றைத் தாபித்தல்,பாடசாலைகளைப் பதிவு செய்தல்,ஆசிரியர்களைப் பதிவு செய்தல்,மாகாண பாலர் பாடசாலைக்கல்வி ஆலோசனைக் குழுவினைத் தாபித்தல்,மற்றும் பாலர் பாடசாலைக்கல்விக் கொள்கைத்த்திட்டம் தயாரிப்பது தொடர்பான கொள்கைத்திட்டக் குழுவினை தாபித்தல்,ஆகியன தொடர்பான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் அவற்றிற்கு இடைநேர் விளைவான ஏற்பாடுகளைச் செய்வதற்குமான ஒரு நியதிச்சட்டம் இதுவாகும்.

0 commentaires :

Post a Comment