பன்முகவெளி அரங்கு கனடாவில் முதல் முறையாக 23 ஜனவரி 2010 அன்று23 ஜனவரி 20105225 Finch Av East, wood said point, Scarborough,Ont,Canada .இல் நடைபெற்றது.
முழுநேர அரங்காக இடம்பெற்ற பன்முகவெளி பலவிதமான கருத்தாளர்களது பேச்சுக்களை உள்ளடக்கி அவற்றின் மீதான விவாதங்களுடன் நிகழ்ந்து முடிந்தது.
- பன்முகவெளி பற்றியும் அதன் அவசியம் தேவை பற்றியும் கற்சுறா பேசினார்.
இந்தப் பன்முக வெளி என்ற அரங்கை ஆரம்பித்ததற்கு எந்தவித பிரத்தியேக காரணமோ அல்லது எந்த அரசியற் பின்னணியோ இல்லை என்பதை திறந்த மனதுடன் முதலில் ஒப்புவிக்கிறேன். இங்கிருக்கின்ற நாம் அனைவருமே கடந்த காலத்தில் சமூகம் சார்ந்த அக்கறையுடன் பலவித தளங்களில் செயற்பட்டவர்கள். என்றும் இந்தப் பன்முகவெளியின் செயற்பாடு என்பது இந்த முரணையும் பகையுணர்வையும் நீக்கி ஒரு பரஸ்பரதளத்தில் திறந்த விவாதங்களை உருவாக்க வேண்டும் என்பதே.
இங்கே யாரும் யாரையும் வென்றெடுப்பதோ கட்சி கட்டுவதோ நோக்கமில்லை. அவரவர்க்கான தளத்தில் கருத்தோட்டத்தில் இருந்து உரையாடுவதும் புதிய தளங்களைத் தொடுவதுமே இதன் முக்கிய நோக்கம். கனடாவில் இதுவரை பலவித சஞ்சிகைகள் பத்திரிகைகள்- சமூகம் சார் அக்கறையுடன் -வெளிவந்திருக்கின்றன. அவை தொகுக்கப்படுவதும் அவற்றை விமர்சனத்துக்குட்படுத்துவதும் இதன்முக்கிய செயற்பாடாக இருக்க வேண்டும். முடிந்தளவு இந்தமுறை பார்வைக்கு வைத்திருக்கிறேன். இது தொடர்ச்சியாக நடைபெறவேண்டும் என்பது மிக முக்கியமானது என்று கற்சுறா குறிப்பிட்டார்.
Women of color எனும் அமைப்பில் தற்போது இணைந்து செயற்பட்டு வருகிறார். 2005இல் மனிதவுரிமைக்கும் சமாதானத்திற்கும் அபிவிருத்திக்குமான நோபல் பரிசுக்காக தெரிவுசெய்யப்பட்ட உலகின் முக்கியமான ஆயிரம் பெண்களில் ஒருவராக கணிக்கப்பட்டவர். இவர் பேசும் போது இலங்கையில் அனைத்து ஆயுதம் தாங்கிய அனைத்து அமைப்பினராலும் பெண்கள் எப்படி நெருக்குதலுக்குள்ளானார்கள் என்றும் முஸ்லீம் பெண்கள் எப்படி யாழில் இருந்து இடம்பெயரும்போது துன்புறுத்தப்பட்டார்கள் என்றும் பேசினார்.
புலிகளின் தவறுகள் போன்றவற்ரை நேர்முகமாக பார்ப்பதும் விமர்சிப்பதும் என்று பார்த்தால் ஒரு மூர்க்கமான தற்திறுத்தியாகத்தான் அமையும். இன்னமும் முக்கியமானது மேற்குறிப்பிட்ட பாரம்பரியம்தான். அதாவது யாழ்மையவாதமான இந்தப் பாரம்பரியம் தமிழ்க் கொங்கிரஸில் ஆரம்பித்து புலிகளின் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்ததாக யாரும் சந்தோசப்பட முடியாது. தொடர்ந்தும் வணங்காமண், வட்டுக்கோட்டை, நாடுகடந்ந்த தமிழீழம் என்று கோவணம் கூடத் தேவையில்லை என்று நிர்வாணமாக தனது அசிங்கத்தை வெளிப்படுத்துகிறது எங்கள் பிற்போக்கு தமிழ் தேசியம். என்பதைத் தெரிவித்தார்.
அடுத்து மதிய உணவுக்கான இடைவேளை வழங்கப்பட்டது. மதிய உணவைத் தொடர்ந்து, இரண்டாவது அமர்வு ஆரம்பமாகியது. அமர்விற்கு ராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார்.
சந்தோசம் ஆனால் யாருக்கும் தெரியாமல் என்று டன்ஸ்ரன் தமிழ்ச்சூழலில் ஒருபாலுறவுக்கான சிக்கல்கள் குறித்துப் பேச ஆரம்பித்தார். அவருடன் விஜய் அவர்களும் கலந்து கொண்டார். சபையோரை ஆறு குழுவாகப்பிரித்து அவர்களிடம் மூன்று கேள்விகளைக் கொடுத்துப் பதில் எழுதச் சொன்னார்கள். 1.Gay, Lesbien இவற்றிற்கான தமிழ்ச் சொற்கள் என்ன? 2. Gay, Lesbien குறித்து தமிழ்ச் சினிமா சித்தரிப்பது என்ன? 3. Gay, Lesbien இன் எதிர்காலம் என்ன? போன்றவை அந்தக் கேள்விகள். சபையோர் குறிப்பிட்ட பதில்களில் இருந்து தொடங்கியது அந்த நிகழ்வு ஒரு அரங்கப்பட்டறை போல் நடைபெற்றது.
சந்தோசம் ஆனால் யாருக்கும் தெரியாமல் என்று டன்ஸ்ரன் தமிழ்ச்சூழலில் ஒருபாலுறவுக்கான சிக்கல்கள் குறித்துப் பேச ஆரம்பித்தார். அவருடன் விஜய் அவர்களும் கலந்து கொண்டார். சபையோரை ஆறு குழுவாகப்பிரித்து அவர்களிடம் மூன்று கேள்விகளைக் கொடுத்துப் பதில் எழுதச் சொன்னார்கள். 1.Gay, Lesbien இவற்றிற்கான தமிழ்ச் சொற்கள் என்ன? 2. Gay, Lesbien குறித்து தமிழ்ச் சினிமா சித்தரிப்பது என்ன? 3. Gay, Lesbien இன் எதிர்காலம் என்ன? போன்றவை அந்தக் கேள்விகள். சபையோர் குறிப்பிட்ட பதில்களில் இருந்து தொடங்கியது அந்த நிகழ்வு ஒரு அரங்கப்பட்டறை போல் நடைபெற்றது.
வன்னி ஒரு விமர்சனப்பார்வை என்ற தலைப்பில் அகங்கிளறி பேசினார். அதனை அவர் மூன்று பிரிவுகளாகப்பிரித்துப் பேசினார். 1.வன்னியின் வரலாற்றுப் பார்வை. 2. பிரதேசவாதமும் வன்னியும். 3. விடுதலைப்புலிகளும் வன்னியும். என்பன அவை. வன்னியின் வரலாறு என்பது இதுவரை தகுந்தபடி பதிவுசெய்யப்படவில்லை. ஆய்வு செய்யப்படவில்லை. யாழ்ப்பாணத்து மேல் ஆதிக்கம் வன்னியை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஆதிக்கம் செலுத்திவந்ததையும். விடுதலைப்புலிகளது யுத்தம் வன்னி மக்களை எவ்வாறு தனக்குச்சாதகமாகப் பலிகொண்டது என்றும் பண்டாரவன்னியன் தொடக்கம் கார்த்திகைப் பூவை தேசியப்பபூ ஆக்கியது வரை அத்தனை கதையாடல்களையும் பலவித உதாரணங்களுடன் சொல்லிக் கட்டுடைத்தார். ஆவணப்படுத்தினார். சபை இறுகிய முகத்துடன் உறைந்து போயிருந்தது.
இறுதியாக
Brown Like me என்ற விவரணப்படம் காண்பிக்கப்பட்டது. assap நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இந்த விவரணப்படம், சவுத் ஏசியன் ஒருபாலுறவுக்காரர்களது நெருக்கடிகள் குறித்துப் பேசியது.
0 commentaires :
Post a Comment