2/05/2010

பாரிய சவால்களுக்கு மத்தியில் இன்று மீண்டும் ஒரே இலங்கையர் என்ற அடிப்படையில் சுதந்திர தினத்தை கொண்டாடும் அரிய வாய்ப்பு எமக்கு கிட்டியது.

img_0027


இன்று இலங்கையின் 62வது சுதந்திர தினம் கொண்டாட்டம் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்ப ட்டது. இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திலும், மட்டக்களப்பு மாவட்டத் திலும் கொண்டாடப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் ஜோர்ச் பிள்ளை தலைமையில் மாநகர வளாகத்தில் நடைபெற்ற சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றிவைத்து உரையாற்றும்போது, பாரிய சவால்களுக்கு மத்தியில் இன்று மீண்டும் ஒரே இலங்கையர் என்ற அடிப்படையில் சுதந்திரதினத்தை கொண்டாடும் வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. எமது இலங்கை திருநாட்டை பொறுத்தவரையில் இன்று கொண்டாடப்படுகின்ற 62வது சுதந்திரதின கொண்டாட்டம் அனைத்து தமிழ் மக்களும் அனுஷ்டிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்பது எமக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களிலேயே இச்சுதந் திரதினம் கொண்டாடப்படுகின்றது.
எமது கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் குறிப்பாக தமிழ் மக்கள் தங்களது அரசியல் அபிலாசைகளை பெறுவதற்கான களமாக மாகாணசபை, மாநகரசபை, உள்ளுராடசி மன்றங்கள் செயற்படுகின்றது, ஆனால் இதனை நிர்வகிக்கின்ற மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எந்தளவு மக்களுக்கு அரசியல் அதிகாரங்கள் சென்றடைவதற்கு வழிவகுக்கின்றார்கள் என்றால் அது கேள்விக்குறியே. மேலும் தங் களின் சுயலாபம் கருதி மக்களுக்காக கிடைக்க இருக்கின்ற பலாபலன்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் எமது மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எமது அரசியல் பிரதிநிதிகள் ஈடுபட்டிரப்பது மிகவும் மன வேதனைக்குரிய விடயமாகவே நான் பார்க்கின்றேன் ஆனால் இன்றைய நாளானது நாம் அனைவருக்குமே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நாளாக நாம் அனைவரும் மாற்றியமைக்க வேண்டும். இன்றிலிருந்து நாம் கடந்த காலங்களிpல் விட்ட தவறுகளை மறந்து சமூக அரசியல் என்ற ஓர் பார்வையினூடாக எமது சமுகத்தை வழிநடத்த வேண்டிய ஓர் பொறுப்புள்ளவர்களாக மாறவேண்டும். எது எவ்வாறோ கடந்த காலங்களிலும் தேர்தல் காலங்களிலும் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு இன மத கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து சமுக அரசியலை மேம்படுத்துவதனூடாக எம் மக்கள் வேண்டி நிற்கின்ற அபிவிருத்தியுடன் கூடிய வளமான எதிர்காலத்தை அடைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் கிழக்குமாகாண சபை உறுப்பினர் எ.சி.கிருஸ்ணானந்தராஜா, மாநகர ஆணையாளர் சிவநாதன், மாநகர சபை உறுப்பினர்கள் ஊழியர்களுடன் மாநகர மேயர் சிவகீத்தா அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment