கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த நளினிமுருகன், ராபர்ட்பயால், ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் முதல் குற்றவாளியான விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் 2-வது குற்றவாளியாக விடுதலைபுலிகள் இயக்க தளபதி பொட்டு அம்மன் மற்றும் பெண் விடுதலைப்புலி அகிலா ஆகியோர் கைது செய்யப்படவில்லை.
இந்த வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறையும் சி.பி.ஐ.போலீசார் வழக்கு விவர அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்வார்கள்.
அதன்படி இந்த மாதம் 3-வது வாரத்தில் சி.பி.ஐ. போலீசார் அறிக்கையை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இலங்கையில் நடந்த போரில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அவரது மரண சான்றிதழை இலங்கை அரசு மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. இதன் அதிகாரபூர்வ தகவலை மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மத்திய அரசுக்கு கிடைத்த பிரபாகரனின் மரண சான்றிதழ் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ் டெல்லியில் இருந்து சென்னை சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதை சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மாலை அல்லது இந்த வாரத்துக்குள் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரபாகரனின் மரண சான்றிதழ் கிடைத்தாலும், அவர் இறந்ததற்கான உடல் அடையாளங்கள் தமிழக போலீசாரிடம் இருக்கும் அடையாளங்களுடன் ஒப்பிட்டு சென்னை தடய வில் ஆய்வு மையத்தில் சோதிக்கப்படும்.
மேலும் பொட்டு அம்மன் மற்றும் அகிலா ஆகியோரின் விவரங்களும் கிடைத்தால்தான் இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வரும்.
0 commentaires :
Post a Comment