சம்பந்தன் இப்போது கூட்டமைப்பின் சார்பில் பேசுகி ன்றபோதிலும் அவர் பாரம்பரியத் தமிழ்த் தலை மையின் ஒரு பிரதிநிதி. தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் முக்கியமான உறுப்பினராக இருந்தவர்.
தேசிய இனப் பிரச்சினை தமிழ் அரசியல் அரங்கில் பிரதான பேசுபொரு ளாகத் தோற்றம் பெற்ற 1956ம் ஆண்டின் பாராளு மன்றத் தேர்தலிலிருந்து எல்லாப் பாராளுமன்றத் தேர்தல்களிலும் சம்பந்தன் அங்கத்துவம் வகித்ததும் வகிப்பதுமான அரசியல் கட்சிகள் கூடுதலான வெற் றியை ஈட்டி வந்துள்ளன.
ஒவ்வொரு தேர்தலுக்கும் பின்னர் இக் கட்சிகளின் சார்பில் கருத்துத் தெரி வித்த தலைவர்கள் தங்களுக்குப் பாரிய வெற்றி என்று பெருமைப்பட்டிருக்கின்றார்கள். அந்தப் பாரம் பரியத்திலேயே இன்று சம்பந்தனும் பெருமைப்படு கின்றார். இந்த வெற்றிகளால் தமிழ் மக்களுக்கு ஏதா வது நன்மை கிடைத்திருக்கின்றதா என்பது பிரதான கேள்வி.
ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்த் தலைவர்கள் வெற்றி யீட்டிய போதிலும் தமிழ் மக்களுக்கு அந்த வெற்றி களினால் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இனப் பிரச்சினை நாளுக்கு நாள் புதிய பரிமாணத்துடன் வளர்ச்சியடைந்ததேயொழியத் தீர்வை நோக்கி நகரவில்லை.
இனப் பிரச்சினையின் இந்த வளர்ச்சி க்கு இத் தலைவர்களே பிரதான பொறுப்பாளிகள் என் பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். மேலும் இத் தலைவர்கள் தமிழ்ப் பிரதேசங்களின் அபிவி ருத்தியிலும் சிறிதளவேனும் கவனம் செலுத்தவில்லை.
தலைவர்கள் அடுத்தடுத்து வெற்றியைப்பெற, தமிழ் மக்கள் அடுத்தடுத்துத் தோல்வியடைந்து வந்திருக்கி ன்றார்கள் என்பதே உண்மை. இந்த நிலையில் ‘எங்களுக்குப் பாரிய வெற்றி’ என்று சம்பந்தன் பெருமை பேசுவதில் அர்த்தமில்லை.
ஒரு இனத்துக்குத் தலைமை தாங்குவதாக உரிமை கோரு பவர்கள் தங்கள் செயற்பாடுகளின் மூலம் அந்த இன த்துக்கு வெற்றிகளைத் தேடிக்கொடுக்க வேண்டும். தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவதாக இதுவரை உரிமை கோரிய எல்லோரும் அம் மக்களுக்குத் தோல்விகளையும் துன்பங்களையுமே தேடிக் கொடு த்திருக்கின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்மைப்பு இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ் மக்களின் அரசியலில் இது மிகப்பெரிய சாபக்கேடு. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இத் தலைவர்கள் பேசிப்பேசியே காலங் கழிக்கப் போகின்றார்கள்?
இதுவரை காலமும் தமிழ் மக்களைத் தவறாக வழிநட த்திய தலைமை மீண்டும் பழைய பாதையில் பயணி க்கத் தயாராகின்றது. தலைவர்கள் வெற்றியீட்டுவதும் மக்கள் தோல்வி அடைவதுமான வரலாறு தொடர்வ தற்கு அனுமதிக்கக் கூடாது. மக்கள் செயலீடுபாடு ள்ள புதிய தலைமையை நாட வேண்டும்.
உடனடி யாக நடைமுறைச் சாத்தியமான தீர்வை ஏற்பதும் படிப்படியாக முழுமையான தீர்வை நோக்கிச் செல் வதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகை யில் செயற்படக் கூடியதுமான தலைமையின் வழி காட்டலிலேயே தமிழினத்துக்கு விமோசனம் உண்டு.
0 commentaires :
Post a Comment