ஜனாதிபதி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற உயர் நீதிமன்ற அறிவித்தலின்படி ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலம் 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
அது தொடர்பில் பிரதம நீதியரசர் அசோக என் சில்வா தலைமையிலான ஏழு நீதியரசர்கள் நேற்று முன்தினம் விரிவாக ஆராய்ந்தனர். இந்தக் குழுவில் நீதியரசர்களான ஷிராணி பண்டாரநாயக்க, பாலபெத்த பெந்தி, ஸ்ரீபவன் ஏக்கநாயக்க, சந்திரா ஏக்கநாயக்க, இமாம் ஆகியோரே இடம்பெற்றிருந்தனர்.
எனினும், ஜனõதிபதியின் பதவிக்காலம் 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாவதாக சட்டதரணி சரத் கோங்ககே சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் யாப்பின் பிரகாரம் தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவான ஒருவர் அப்போதிலிருந்து ஆறுவருடங்களுக்கு பதவியிலிருப்பதற்கு சந்தர்ப்பம் இருப்பதாக ஏனைய சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதியாகப் பதவியேற்று நான்கு வருடங்களுக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் பிரகாரம் சந்தர்ப் பமொன்று இருக்கின்றது. எனினும், அந்தத் தேர்தலில் ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி வெற்றியீட்டினால் அவரது முதலாம் தவணைக்கான இரண்டு வருடங்கள் தொடர்பில் அரசியலமைப்பில் எதுவுமே குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதனால் ஜனாதிபதிக்கான ஆறு வருடங்களைக் குறைக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினர்.
வாதப் பிரதிவாதங்களை அவதானித்த பிரதம நீதியரசர், ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் இருவார காலப்பகுதிக்குள் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளல் வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அல்லாமல் 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது என்று உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
0 commentaires :
Post a Comment