2/28/2010

சிறுபான்மைத் தமிழர் மகாசபையினது சுயேட்சை வேட்பாளர்கள்

கெலிகப்டர்  சின்னத்தில் வரும் பாராளுமன்றத் தேர்தலில்  சிறுபான்மைத் தமிழர் மகாசபை சுயேட்சையாக போட்டியிடுகின்றது.  கீழ் காணும் பன்னிரெண்டு  வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை காலமும்  யாழ் மேலாதிக்கத்தின்  அரசியல் அதிகார நலன்களை  பாதுகாத்துக் கொள்ளும் ஒர் கருவியாகவே   தலித் சமூகமானது உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளது.   போருக்கு முன் குடிமைகளாகவும், அடிமைகளாகவும், ஸ. போருக்குப்பின் மாவீரர்களாகவும், தியாகிகளாகவும்  ஸ என உபயோகப்படுத்தப்பட்ட சமூகம்.
“யாழ்ப்பாண நிலையத்திலிருந்து பளை போய்ச்சேரும் வரை ஆங்காங்கே நின்று கற்களை வீசி ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக திட்டம். அதற்கு மேலும் பின்பு றெயில் ஓடுமாயின் அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து அமுல் நடத்துவதாகவும் முடிவாயிற்று.

இதன்படி கல்வீச்சு ஆர்ப்பாட்டம்  செய்ய ஆட்கள் வேண்டும். பல்லக்கர் இருநூறு பேர்கள் தருவதாக ஒப்புக்கொண்டார். வரணி இராசா நூறு, வேலுப்பிள்ளை நூறு  இப்படி தலைக்கு நூறாக தங்கள் கம்பனிக்கு ஊரில் இருக்கும் செல்வாக்குகளையும் கணக்கெடுத்துஸவழமையாக கோஜ் வண்டிக்கு ஆள் சேர்ப்பவர்களையும் கணக்கெடுத்து  ஒவ்வொரு ஊரில் உள்ள சாதிமான்களையும் கண்க்கெடுத்துப் பார்த்தால்  ஐந்தாயிரம் பேர்களையாவது  திரட்டிவிடலாம். என்ற கணக்கினை ஆசைப் பிள்ளையார் கூறினார்.

பூரண திருப்தி. எப்படியும் றயிலைத் தடுத்துவிடலாம். என்ற நம்பிக்கை ஆசைப்பிள்ளையாருக்கு. குறிக்கப்பட்ட அந்த நாள் வந்தது. வேலுப்பிள்ளையார் வீட்டில் ஆரவாரமாக இருந்தது. கயிலாயப்பிள்ளையார் அங்குமிங்குமாக ஓடித்திரிந்து, பல இடங்களில் இருந்து வந்தவர்களை தனது வீட்டிலும் வேலுப்பிள்ளையார் வீடடிலுமாக தங்கவைத்துக் கொண்டும் தனது அடியார்களைக் கவனித்துக் கொண்டும் இருந்தார்.

ஸ.தனது நால்சார் வீட்டுக்குஉள்ளே விடக்கூடியவர்களை உள்ளேயும், புதிதாகப் போடப்பட்டிருந்த சவக்கண்டிக்குள் இருக்கக்கூடியவர்களை அதற்குள்ளும்,  வெளித்தாவாரத்திலும் வளவுக் கிடுகுக் கொட்டிலுக்குள் விடக்கூடியவர்களைக் கொட்டகைக்குள்ளும் இனங்கண்டு தங்க வைப்பதில், அவியல் நடத்துவதில், குடிக்க வைப்பதில் அவருக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.

அவர்களுக்கு ஏற்ற விதங்களிலான ஏதனங்கள் : வாழைத்தடல், வாழை இலை, மண்சட்டி, வட்டில், சிரட்டை, உலைமூடி, குண்டுச் சட்டி, பித்தளைப் பேணி, சுரக்குடுவை இப்படி சாதிக் கேற்றபடி இனம் பிரித்து ஒவ்வொரு பிரிவினரும் மனம் கோணாதபடி பார்துக் கொள்ளவேண்டுமே. “

மேற்படி நிகழ்வை தோழர் கே. டானியல் அவர்கள் தனது   ‘அடிமைகள் நாவலில் ‘ அம்பலப்படத்தியுள்ளார். றெயில் போக்குவரத்து ஆரம்பமானபோது அதற்கெதிராக போராட்டம் நடத்தினார்கள் மேட்டுக்குடி உடமையாளர்கள். ஸ”யாழ்ப்பாணத்தில் றயில் வர இருப்பதாகவும் அந்த றெயில் வந்துவிட்டால்ஸசிறிசு பெரிசு என்ற வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் ஏற்றிப் பறக்கும் என்றும், பொதுவில் தேசவழமை அழிந்துவிடும்ஸ”

றெயிலின் வரவிற்கு எதிராக கல்லெறியும் போராட்டத்தை நடத்தியவர்கள் மேட்டுக்குடி உடமையாளர்கள். தலித் சமூகத்தவர்களைக் கொண்டே  தமது கல்லெறியும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.    கல்லெறியும் போராட்டத்திற்கு தலித்துக்களுக்கு மேட்டுக்குடியினர் எவ்வாறு  ‘பயிற்சி கொடுத்தார்கள்’ என்பதைத்தான்  தோழர். கே. டானியல் அவர்கள் தனது நாவலில் விபரித்துள்ளார்.  அது முன்னொரு காலம்.

பிற்பாடு  தமிழ் ஈழம், தமிழ்த் தேசியம் என்ற தமது நலன்களுக்காக பயிற்சி கொடுக்கப்பட்டு   கொல்லப்பட்டவர்களில் அதிகமானவர்கள்   தலித் சமூகத்தவர்களே.  இவ்வாறு காலம் காலமாக ஏமாற்றப்பட்டும் ,பல்வேறு சமூக உரிமைகள்  மறுக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்த அனுபவமே   இன்று  தமக்கான தலைமையையும், தமக்கான அரசியலையும் தேர்ந்தெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனவே தலித் சமூகத்தவர்களும், தலித் சமூகம் மீதான அக்கறை கொண்டவர்களும்  சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முன்வந்த எமது  வேட்பாளர்களை ஆதரிக்கும்படி கேட்டுக் கொள்வதோடு, அவர்களது வெற்றிக்கான அனைத்து உதவிகளையும்  நல்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
—இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி—-


வேட்பாளர் பட்டியல்

1.திரு.யோசப் அன்ரனி
2.திரு.செல்லப்பா சதாநந்தன்
3.திரு.நடராசா தமிழ்அழகன்
4.திருமதி. உருத்திராதேவி சண்முகநாதன்
5.திரு.கந்தன் இராஜரட்ணம்
6.திரு.காந்தி அதிகாரம்
7.திரு.மாணிக்கம் பொன்னுத்துரை
8.திரு.தம்பியார் கந்தையா
9.திரு.வைரவன் மோகநாதன்
10.திரு.பிலிப் ஜோன்சுபாஸ்
11.திரு.குணசிங்கம் கோபிநாத்
12.திரு.சுப்பிரமணியம் மகேந்திரராஜ



»»  (மேலும்)

யாழ். மாவட்டத்தில் ஈபிடிபி வெற்றிலைச் சின்னத்தில் போட்டி

ஈழ மக்க்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி.) யாழ். மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நேற்று யாழ். செயலகத்தில் டக்ளஸ் தலைமையிலான எட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஈ.பி.டி.பி. கட்சியின் சார்பில் எட்டு வேட்பாளர்களும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மூன்று பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார். வட மாகாணத்தில் மாத்திரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை நாடாளுமன்றத் தோ்தலில் தமது கட்சி வீணைச்சின்னத்திலேயே போட்டியிடும் எனத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வெற்றிலைச் சின்னத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது
»»  (மேலும்)

மனோ கணேசனுக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் மனோ கணேசனுக்கு எதிராக ஹெல உருமய நேற்று பகல் கண்டி மாநகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஹெல உருமயவின் கண்டி மாவட்ட பிரதான வேட்பாளரான சுவர்ண திலக்க தலைமையில் கண்டி தலதா வீதியில் நடைபெற்ற இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புலிகளின் ஆதவாளரான மனோ கணேசனை கண்டியிலிருந்து விரட்டுவோம் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
»»  (மேலும்)

முஸ்லிம் காங்கிரசுக்குள் பாரிய குழப்பம்: அதிருப்தியாளர்கள் அரசில் இணைய முடிவு

மு. காவுக்குள் தோன்றியுள்ள பாரிய உட்பூசல் அதனால் ஏற்பட்டுள்ள அதிருப்தி நிலை மீண்டுமொரு பாரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது.
மு. கா. சார்பான கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் பொதுத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியை ஆதரிக்க எடுத்துள்ள முடிவையடுத்தே இப்பிளவு ஏற்பட்டுள்ளது.
மேற்படி கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் கல்முனை மற்றும் பொத்துவில் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
மு. கா. தலைமையின் எதேச்சதிகார போக்கை கண்டிக்கும் வகையிலும், ஜனாதிபதி மற்றும் ஐ. ம. சு. மு. அரசின் அபிவிருத்தி பணிகளை மேலும் துரிதமாக முன்னெடுக்க கைகோர்க்கவுமே இவ்வாறான முடிவை மேற்படி மாகாண சபை உறுப்பினர்கள் எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
மு. கா. மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதையே இவர்கள் விரும்பியுள்ளனர். ஆனால் மு. கா. தலைமை, தான்தோன்றித்தனமாக ஐ. தே. க.வுக்கு கட்சியை அடிமையாக்கிவிட்டது. இதன் மூலம் மு. கா. முழு ஆதரவாளர்களையும் பகிரங்கமாகவே ஏமாற்றியுள்ளது.
மு. கா. வை விட்டு விலகி அரசாங்கத்துடன் இணைவது குறித்து பேச்சு நடத்தியுள்ளதாகவும் இரண்டு பிரதான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. அதன்படி இவர்களில் ஒருவருக்கு தேசியப் பட்டியல் மூலமான எம்.பி பதவி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதோடு கிழக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைச்சு வெற்றிடம் குறித்தும் கலந்துரையாடியுள்ளதாகவும் நம்பகரமாக தெரியவருகின்றது.
இதேவேளை தேசியப் பட்டியல் விடயத்திலும் மு. கா. தலைமை அநியாயம் இழைத்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் மு. கா. மற்றுமொரு பாரிய பிளவுக்கு முகம் கொடுத்துள்ளது.

கிழக்கு சுகாதார அமைச்சு சுபைருக்கு?

இதேவேளை, கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள சுகாதார அமைச்சு வெற்றிடத்துக்கு அ. இ. மு. கா. சார்பான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபைரை நியமிப்பது குறித்து அ. இ. மு. கா அரசுடன் பேச்சு நடத்தி வருவதாக கட்சிப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
கிழக்கு சுகாதார அமைச்சராகவிருந்த எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு சுகாதார அமைச்சுப் பதவியை நேற்று முன்தினம் இராஜினாமாச் செய்திருந்தார். எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வும் அ. இ. மு. கா. சார்பானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அ. இ. மு. கா. சார்பாக கிழக்கு மாகாண சபைக்கு தெரிவான ஏறாவூரைச் சேர்ந்த எம். எஸ். சுபைர் அரசியல் அனுபவமிக்கவர். அமைச்சு பதவி வகிக்க தகுதிபெற்றவர். அ. இ. மு. கா.வின் சொத்து இவ்வமைச்சு, அதனை விரைவில் சுபைருக்கு பெற்றுக்கொடுக்க கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அப்பிரமுகர் குறிப்பிட்டார்.

மஹ்ரூப் அரசில் இணைவு

இது இவ்வாறிருக்க கிழக்கு மாகாண சபையின் ஐ. தே. க. உறுப்பினரான முஹம்மட் மஹ்ரூப் (கிண்ணியா) ஐ. தே. க.விலிருந்து விலகி அரசுடன் இணைந்து கொண்டுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.
கிண்ணியாவில் ஐ. தே. க., மு. கா. தலைவர்களின் கொடும்பாவிகளை இவரின் ஆதரவாளர்கள் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

2/27/2010

பொதுத்தேர்தல் 2010

25 கட்சிகள், 312 சுயேச்சைகள் போட்டி: 196 ஆசனங்களுக்கு 7625 பேர் களத்தில்

கட்சிகளின் 46 மனுக்களும் 35 சுயேச்சைகளும் நிராகரிப்பு


பாராளுமன்றத்திற்கு வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இருபத்து நான்கு அரசியல் கட்சிகளிலும் 312 சுயேச்சைக் குழுக்களிலும் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள். 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் அரசியல் கட்சிகளினூ டாக 3859 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் 3691 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் பணிகள் நேற்று நண்பகலுடன் நிறை வடைந்தன. ஆட்சேபம் தெரிவிப்பதற்காக பிற்பகல் 1.30 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முறையாகப் பூர்த்திசெய்யப்படாததால், கட்சிகள் தாக்கல் செய்த 46 வேட்பு மனுக்களும் 35 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வன்னி மாவட்டத்திற்குத் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. அந்தக் கட்சியில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு வேட்பாளரின் பெயர் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் பட்டியலிலும் இடம்பெற் றிருந்ததால் அந்த இரண்டு கட்சிகளின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
பொதுத் தேர்தலொன்றில் கூடுதலான வேட்பாளர்கள் களமிறங்குவது இதுவே முதற் தடவையாகும். இதில் கொழும்பு மாவட்டத்திலேயே அரசியல் கட்சிகள் மூலம் கூடுதலான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 19 உறுப்பினர்கள் தெரிவாகவுள்ள இந்த மாவட்டத்தில் 22 அரசியல் கட்சிகளில் 484 பேரும் 16 சுயேச்சைக் குழுக்களில் 352 பேருமாக 836 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான சுயேச்சைக் குழுக்கள் களமிறங்கியுள்ளன. 07 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ள இந்த மாவட்டத்தில் 49 சுயேச்சைக் குழுக்களில் 490 பேரும் 17 அரசியல் கட்சிகளில் 170 பேருமாக 660 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அடுத்ததாக திருகோணமலை, மட்டக்கள ப்பு, மொனறாகலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கூடுதலான அரசியல் கட்சிகள் களமிறங்குகின்றன. இந்த மாவட்டங்களில் தலா 17 கட்சிகள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் தடவையே கூடுதலான கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பதவி முத்திரை பதிக்கப்படாமலும் முறையாகப் பூர்த்தி செய்யப்படாமலும் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 46 வேட்புமனுக்களும் சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்த 35 நியமனப் பத்திரங்களும் நிராகரிக்கப்பட்டன.
கண்டி மாவட்டத்தில் 12 பேரைத் தெரிவுசெய்வதற்காக 14 அரசியல் கட்சிகளில் 210 பேரும் 17 சுயேச்சைக் குழுக்களில் 225 பேருமாக 435 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 07 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நுவரெலியா மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளில் 140 பேரும் 16 சுயேச்சைக் குழுக்களில் 160 பேருமாக 300 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 09 பேர் தெரிவு செய்யப்படவுள்ள யாழ். மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளில் 168 பேரும் 8 சுயேச்சைக் குழுக்களில் 96 பேருமாக 264 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
 
»»  (மேலும்)

கிழக்கு மாகாண அரசியல்வாதிகளான இராஜதுரை, தங்கத்துரை ஆகியோரை குறிவைத்து (1977ல்) எய்த எறிகணை இன்று வடமாகாண மேலாதிக்க அரசியல்வாதிகளின் தலையை துண்டித்துவிட்டது.

Sampanthan- RPrabhakaran 22நாங்களே ராசாக்கள், நாங்களே மந்திரிகள் இது தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகரான திரு எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்களின் மறைவிற்குப்பின்னர் தமிழ்மக்களின் அரசியலில் ஏற்படுத்தப்பட்ட எழுதப்படாத யாப்பாகும். இந்த நிலையிலேயே திரு செல்வநாயகம் அவர்களின் மறைவிற்குமுன்னர் அதாவது திரு செல்வநாயகம் அவர்கள் 1977 ஏப்ரல் மாதம் 26 ந் திகதி மரணமானார். அவர் முற்றாக செவிப்புலன் இழந்திருந்த நிலையில் 1976 ம் ஆண்டு மே மாதம் 14 ந் திகதி அன்று கீரியும், பாம்புமாக வடமாகாண அரசியலில் செயற்பட்ட தமிழரசுக் கட்சியினரும், தமிழ் காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்னும் பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றினை உருவாக்கினர்.

புதிய அரசியல் கட்சியின் உருவாக்கத்திற்கான அடிப்படைக் காரணிகள் என்ன?
1970ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடமாகாணத்தின் பிரதான அரசியல்வாதிகளென அறிமுகமான சிலர் தோல்வியடைந்தனர். அதாவது திரு ஜீ.ஜீ. பொன்னம்பலம் ( யாழ்ப்பாணம்) மு.சிவசிதம்பரம் (உடுப்பிட்டி) தா.சிவசிதம்பரம் (வவுனியா) திரு அ.அமிர்தலிங்கம் (வட்டுக்கோட்டை) ஈ.எம்.வி நாகநாதன் (நல்லூர்) முன்னைய மூவரும் தமிழ் காங்கிரஸ் கட்சியினதும், பின்னைய இருவரும் தமிழரசுக்கட்சியினதும் உறுப்பினர்களாவார். இந்நிலையில் இவர்களின் அரசியல் மறுவாழ்விற்கான ஒரு நாடகமே புதிய அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கமாகும்.
திரு செல்வநாயகம் அவர்களின் மறைவிற்குப் பின்னர் கட்சியின் தலைமைப் பதவியினை ஏற்பதற்கான அனைத்து தகைமைகளையும் தன்னகத்தே கொண்டிருந்த மட்டுநகர் பாராளுமன்ற உறுப்பினரான திரு செ இராசதுரை அவர்கள் புறந்தள்ளப்பட்டு கட்சியின் முக்கிய பதவிகள் இரண்டும் அதாவது தலைவர், செயலாளர் வடமாகாண அரசியல்வாதிகளின் பரம்பரைச் சொத்தாக ஆக்கப்பட்டு முறையே மு. சிவசிதம்பரம், அ.அமிர்தலிங்கம் ஆகிய இருவரினதும் அதிகாரத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது.
அதன்பின்னர் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமை தாங்கினார்.
குறிப்பு –திரு இராஜதுரை அவர்கள் கட்சியின் தலைமைப்பதவியினை வகிப்பதற்காக கொண்டிருந்த தகைமைகள் என்ன?
1952ம் ஆண்டு முதல் தமிழரசுக் கட்சியின் மட்டுநகருக்கான அமைப்பாளராகவும், 1956 ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மட்டுநகர் மக்களினதும் கிழக்கு மாகாணத்தினதும் முடிசூடா மன்னனாக, பாராளுமன்றப் பிரதிநிதியாக தெரிவானது மட்டுமன்றி மட்டுநகர் மாநகர சபையின் முதலாவது நகர பிதாவாகவும் தெரிவுசெய்யப்பட்டு பணியாற்றிய பெருமைக்குரியவராக மட்டுநகர் மக்களால் நேசிக்கப்பட்டவராகும். அதேவேளை திரு மு. சிவசிதம்பரம் அவர்கள் 1956,ல் பருத்தித்துறையிலும் மற்றும் 1970ம் ஆண்டுத் தேர்தலில் உடுப்பிட்டியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்ததுடன் திரு அ அமிர்தலிங்கம் அவர்கள் 1952, மற்றும் 1970 ம் ஆண்டுப் பொதுத் தேர்தல்களில் வட்டுக்கோட்டையிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களாகும்.
இந்நிலையிலும் திரு இராசதுரை அவர்கள் கிழக்கு மாகாணத்தவர் என்னும் காரணத்தினால் அவர் தலைமைப்பதவியில் அமர்வதற்கு யாழ் மேலாதிக்க சக்திகள் இடமளிக்கவில்லை. அத்துடன் மட்டும் அவர்கள் தமது மேலாதிக்க அதிகாரத்தினை நிறுத்திக்கொள்ள முயலவில்லை. 1977ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் திரு இராசதுரை அவர்களை அரசியலிலிருந்து அகற்றும் நடவடிக்கையாக மட்டுநகர் மக்களின் கருத்துக்களுக்கு எவ்வித மதிப்புமளிக்காமல் திரு இராசதுரை அவர்களுக்கு எதிராக மட்டுநகர் தொகுதியில் திரு காசி ஆனந்தன் என அழைக்கப்படும் காத்தமுத்து சிவானந்தன் என்பவர் நிறுத்தப்பட்டார். ஆனால் அவரால் வெற்றியீட்ட முடியவில்லை.
அதேபோல் திருகோணமலை தொகுதியிலும் திரு தங்கத்துரை அவர்களுக்கு எதிராக திரு சம்பந்தன் (1977) நிறுத்தப்பட்டார்.

குறிப்பு –சம்பந்தனைவிட தங்கத்துரைக்கு இருந்த தகைமைகள் என்ன?
1970ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் முதன்முதலாக மூதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் திரு தங்கத்துரை. அதே ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் திருமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் திரு பா நேமிநாதனாகும். அவரின் பதவிக்காலத்தின்போது மக்களுக்கு அவர் சரிவர பணியாற்றவில்லை என்னும் முறையீடுகள் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடத்திற்கு தொகுதி மக்களால் முறையீடு செய்யப்பட்டமையைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கமைய திருமலைத் தொகுதி மக்களினது தேவைகளையும் கவனிக்கும் பொறுப்பும் திரு தங்கத்துரை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவரே திருமலை மக்களினது தேவைகளையும் நிறைவேற்றினார்.
இந்நிலையிலேயே அமிர்தலிங்கத்தினதும், சிவசிதம்பரத்தினதும் அதிகாரம் தங்கத்துரையை திருமலைத் தொகுதிக்கான வேட்பாளர் (1977) பட்டியலிலிருந்து நீக்கியதுடன் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது. இருந்தும் பின்னர் இடம்பெற்ற (1989, 1994 ஆகிய இரு தேர்தல்களிலும் தோல்வியடைந்த சம்பந்தன் (10-10–2000ல்) இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட அஞ்சியநிலையில் அவரது மருமகன் முறையான சிவபாலன் என்பவரை களமிறக்கி அதிலும் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் தம்மை பாராளுமன்ற பலகணியில் அமாவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த திரு அமிர்தலிங்கம் அவர்களை கொன்றொழித்த பிரபாகரனின் பாதங்களில் சாஸ்ட்டாங்க நமஸ்காரம் பண்ணியதற்கமையவே (05-12-2001ல்) இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் பாராளுமன்ற பலகணியில் அமர்வதற்கான வாய்ப்பினை தமதாக்கினார். அதனைத் தொடர்ந்து பிரபாகரன் இடும் கட்டளைகளை சிரம்மேல் சுமந்து பாராளுமன்றத்தில் குமுறிய சம்பந்தனின் (18.05.2009)ற்குப் பிந்திய வரலாறு என்ன?
இலங்கையில் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இன்றுவரை மேற்கொள்ளாத புதிய அரசியல் நடைமுறை ஒன்றினை அரங்கேற்றிய சம்பந்தன் தனது ஏகப்பிரதிநிதியும் முன்னாள் எஜமானனுமான பிரபாகரனை கொன்றொழித்த இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவுடன் தமிழ் மக்களுக்கான விலையினை தெரிவித்து அவருடன் உடன்படிக்கை ஒன்றினை ஏற்படுத்தினார். அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழ் மக்களை சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாகவே மேடைகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் அதுவும் தோல்வியிலேயே முடிவுற்றது.
கிழக்கு மாகாண அரசியல்வாதிகளான இராஜதுரை, தங்கத்துரை ஆகியோரை குறிவைத்து (1977ல்) எய்த எறிகணை இன்று வடமாகாண மேலாதிக்க அரசியல்வாதிகளின் தலையை துண்டித்துவிட்டது.
அன்று கிழக்கு மக்களின் கதாநாயகர்கள் நாங்களே எனவும் கிழக்கிலங்கை மக்கள் வெறும் நடிகர்களே எனவும் முழக்கமிட்டவர்கள் அனைவரினதும் அதிகாரங்களை தனது கையில் இன்று எடுத்துக்கொண்ட (கிழக்கு மாகாணத்தவரான) சம்பந்தன் நானே ராஜா, நானே மந்திரி நீங்கள் அனைவருமே எனது அடியாட்களே என வடமாகாண மேலாதிக்க சிந்தனையாளர்களுக்கு தனது முதலாவது அதிகார பலத்தினை பிரயோகித்துள்ளார். பிரபாகரனிடம் இருந்த அதிகாரத்தினைவிட இன்று சம்பந்தனிடமுள்ள அதிகாரம் வட மாகாண அரசியல்வாதிகள் அனைவரையும் மண்டியிட வைத்துள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஸ்தாபகரான திரு ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் வாரிசான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கதி என்ன? புலியின் அதிகாரமிக்க உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், எம்.கே சிவாஜிலிங்கம், என் ஸ்ரீகாந்தா, சதாசிவம் கனகரெத்னம், மற்றும் சிவநாதன் கிஸ்ஸோர். ரசீம் முகமட் இமாம் இவர்களுக்கு ஏற்பட்ட கதியென்ன?
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அப்பாப்பிள்ளை வினாயகமூர்த்தி சம்பந்தனின் கால்களில் விழுந்து தம்மை யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இணைத்துக்கொண்டார். ஆனால் இடம்பெறப்போகும் தேர்தலில் (08.04.10) வினாயகமூர்த்தி வெற்றிபெறுவது பகல் கனவே!
இவர்கள் தவிர புலிகளினால் வேட்பாளர் நியமனங்கள் வழங்கப்பட்டவர்கள் என அடையாளங்காட்டப்பட்டு தங்கேஸ்வரி கதிராமன், சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி.
மற்றும் திருமலைத் தொகுதியின் உறுப்பினரான கதிர்காமத்தம்பி துரைரத்தினம் என்பவர் சம்பந்தனுக்கும் சரத் பொன்சேகா அணியினருக்குமிடையிலான இரகசிய உடன்படிக்கையினை வெளியிட்டமைக்காகவும், இரு சாராருக்குமிடையில் இடம்பெற்ற நிதிப்பரிமாற்றங்களை சிலரிடம் தெரிவித்த குற்றச்சாட்டிற்காகவும் வேட்பாளர் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேறும், ஓடமும் ஒரு நாள் வண்டியிலேறும், சக இனத்தவர்களையே அடிமைகளாக்க நினைப்பவர்களின் அதிகாரம் ஒருபோதும் நிலைத்திருப்பதில்லை என்பதனை நினைவு கூர்வதற்காகவே இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது. ஆசிரியர் மஹாவலி.கொம்


நன்றி- மகாவலி
»»  (மேலும்)

வேட்பு மனுக்களை ஏற்கும் பணி இன்று நண்பகலுடன் நிறைவு:

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக் களைத் தாக்கல் செய்யும் பணிகள் இன்று (26) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றன.
இன்றைய தினம் 200 இற்கும் அதிகமான சுயேச்சைக் குழுக்களும், அரசியல் கட்சிகளும் தமது வேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்து முடிக்கின்றன. இதனால் ஏற்படும் பரபரப்பை சமாளிக்கும் வகையில், மாவட்டச் செயலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமானதிலிருந்து நேற்று வரை அரசியல் கட்சிகள் ஒரு சில மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களையே தாக்கல் செய்துள்ளன. அதேநேரம் நேற்று நண்பகல் வரை சுமார் 250 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் சுமார் 50 சுயேச்சைக் குழுக்கள் மாத்திரமே வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளன.
இந்நிலையில் போட்டியிடவுள்ள அனைத்துக் கட்சிகளும், கட்டுப்பணம் செலுத்தியுள்ள சுயேச்சைக் குழுக்களும் இன்றைய தினத்திலேயே நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்கின்றன. இதன் பிரகாரம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடம் இருந்து பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் யாவும் இன்று முடிவடைந்துள்ளன.
சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு தொடர்பான ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான நண்பகல் 12.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை ஒன்றரை மணி நேர கால அவகாசம் வழங்கப்படவுள்ளது என தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. இதனைத் தொடர்ந்து வேட்பு மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களினால் வெளியிடப்படவுள்ளது-
»»  (மேலும்)

த.ம.வி.பு(TMVP)கட்சி இன்று மட்டக்களப்பில் வேட்பு மனு தாக்கல்

img_1760நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான TMVPயின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பு மனு இன்று காலை 10 மணியளவில் கட்சி தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா, மட்டக்களப்பு மாவட்ட த.ம.வி.பு(TMVP) கட்சியின் தலைமை வேட்பாளர்          அ.செல்வேந்திரன் ஆகியோரால் இன்று கையளித்தார்கள். காலை 8 மணியளவில் மட்டக்களப்பு மாமாங்க ஈஸ்வர ஆலயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான த.ம.வி.பு(TMVP) கடசியின் சாரபில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் என பலர் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மிகவும்  கோலாகலமான முறையில் நடைபவனியாக வேட்புமனுதாக்கல்  செய்வதற்காக மட்டக்களப்பு பிரதான வீதியின் ஊடாக கச்சேரியை சென்றடைந்தார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்த கட்சிகளில் மிகவும் பிரமாண்டமான முறையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழவும் வுஆஏP கட்சி மாத்திரமே தமது வேட்பு மனு தாக்கல் செய்தது. சுமார் காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வீதி த.ம.வி.பு(TMVP) கட்சியின் ஆதரவாளர்கள் முக்கியஸ்த்தர்கள் வேட்பாளர்கள், மற்றும் வாகன தொடரணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் TMVP சார்பாக போடடியிடுகின்ற வேட்பாளர்கள் விபரம்.
01. அருணாசலம் செல்வேந்திரன் (தலைமை வேட்பாளர்)
02. தம்பராசா பேரின்பராசா.
03. திருமதி தயாழினி திரவியம்.
04. இரத்தினசிங்கம் மகேந்திரன்.
05. அழகரெத்தினம் பாலகிருஸ்ணன்.
06. தம்பிராஜா ஈஸ்வரராஜா.
07. கணபதிப்பிள்ளை மோகன்.
08. அ. ராஜவரோதய மணிவண்ணன்.
img_1695
img_1744
img_1802
»»  (மேலும்)

2/25/2010

பாராளுமன்ற தேர்தலுக்கான த.ம.வி.பு கட்சியின் முதலாவது பிரச்சாரக்கூட்டம் பேத்தாழை முருகன் ஆலய முன்றலில். பாராளுமன்ற தேர்தலுக்கான த.ம.வி.பு கட்சியின் முதலாவது பிரச்சாரக்கூட்டம் பேத்தாழை முருகன் ஆலய முன்றலில்.

எதிர்வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான த.ம.வி.பு கட்சியின் முதலாவது பிரச்சாரக் கூட்டம் கடந்த 21.02.2010 அன்று பேத்தாழை முருகன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. கட்சியின் தலைவர் சிவநேதுரை சந்திரகாந்தன தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் கட்சியின் பிரதித்தலைவர் திரவியம் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டு தமது உரையினை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

வரலாறு திரும்புகிறது வடக்கில் கால் பதிக்கும் கிழக்கு தலைமைகள்

 சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக வடக்கிலிருந்தே கிழக்கு நோக்கி அரசியல் தலைமைகள் படையெடுப்பது வழமை ஆனால் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் வரவு அந்த வரலாற்றை புரட்டிபோட்டிருக்கிறது


img_1105
த.ம.வி.பு கட்சி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கிலும் தமது பிரதிநிதிகளை நிறுத்துவதற்காக வேட்புமனுத்தாகல் செய்ய கட்சி தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் யாழ் மாவட்ட  செயலகத்திற்கு சென்றபோது பிடிக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு யாழ்பாணம் நல்லூர் கந்த சுவாமி கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. 
img_1215
img_1231
»»  (மேலும்)

2/24/2010

பொன்சேக்காவின் நிவாரண கோரிக்கை உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிப்பு


இராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவை நிபந்தனையுடனோ அல்லது நிபந்தனையின்றியோ விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளை உச்ச நீதிமன்றம் நேற்று (23) நிராகரித்தது.
அடிப்படை மனித உரிமை மீறும் அறிக்கையொன்றை விடுக்குமாறு கேட்டு ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் இருவர் தாக்கல் செய்திருந்த மனுவில் நிவாரணம் வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அம்சங்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரரான சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ சட்டத்தின் கீழ் இடம்பெறும் விசாரணையின்போது சாட்சியம் வழங்கப்பட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில், விடுதலை செய்யும் நிவாரணத்தை பெற்றுத்தர முடியாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பதில் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க, உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஜகத் பாலபட்டபெந்தி மற்றும் கே. ஸ்ரீபவன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (23) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
சரத் பொன்சேகா கேட்டுள்ள மற்றைய நிவாரணம் ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
மனுதாரர் அவரது மனைவி உட்பட அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவும், தேவையான மருத்துவ வசதிகளை பெறவும், சத்திய கடதாசியில் கையொப்பமிடவும், வெளிநாட்டில் உள்ள மகளுடன் தொலைபேசியில் உரையாடவும், எதிர் வரும் பொதுத்தேர்தலுக்கான அவரது வேட்புமனு மற்றும் சட்ட ஆவணங்களில் கையெழுத்திடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இது தொடர்பாக சட்ட மா அதிபரிடம் விசாரித்து, அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர் தரப்புக்கு கூறப்பட்டது.
சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா, புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் சட்டத்தரணி சாமிலா பெரேரா ஆகியோர் மற்றைய இரு மனுக்களையும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக இராணுவ தளபதி லெப்டினன்ட் கர்னல் ஜகத் ஜயசூரிய, மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பிரிகேடியர் விஜேசிரி மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணையும் நேற்று இடம்பெற்றது.
அந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டபோது சாட்சிகள் சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை மற்றும் தேவையான ஆவணங்களை வழங்க முடியாதிருந்ததாக சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்தார். இது உச்ச நீதிமன்ற சட்டம் 45 (3)க்கு எதிராக இருப்பதாக சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியதையடுத்து, பதில் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க இந்த விடயத்தை அடிப்படை எதிர்ப்பு மனு விசாரணையின் போது எழுப்புமாறு கூறினார்.
அத்துடன் மனித உரிமை ஆணைக் குழுவுக்கு சரத் பொன்சேகா வழங்கிய வாக்கு மூலத்துடன் தொடர்பான அறிக் கையை உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலதிக விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 
»»  (மேலும்)

வன்னி, யாழ். மாவட்டங்களில் ரீ.எம்.வி.பி. நேற்று வேட்புமனுத் தாக்கல்


பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தமிழ் மக்கள் விடு தலைப் புலிகள் கட்சி வன்னி மற் றும் யாழ். மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை நேற்று தாக்கல் செய்தது.
கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், கட்சியின் செயலாளர் கைலேஷ்வரராஜா, ஆஸாத் மெளலானா குழுவினர் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக அங்கு சென்றிருந்தனர்.
வன்னி மாவட்டத்திற்கான வேட்புமனுவில் கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஷ்வரராஜாவை முதன்மை வேட்பாளராகக் கொண்ட வேட்பு மனு வவுனியா தெரிவத்தாட்சி அலுவலர் பீ. எம். எஸ். சார்ள்ஸிடம் நேற்றுக்காலை 9.10 மணியளவில் கையளிக்கப்பட்டது.
வவுனியாவிலிருந்து ஏ 9 பாதை யூடாக யாழ். நகர் சென்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி செயலாளர் யாழ். மாவட்டத்திற் கான வேட்பு மனுவையும் நேற்று பகல் 1.20 மணியளவில் தாக்கல் செய்தனர்.
கட்சியின் செயலாளர் கைலேஷ்வ ரராஜா வன்னி, யாழ். மாவட்டங்க ளுக்கான வேட்பு மனுக்களை தாக் கல் செய்தார்.
வடக்கில் தமிழ் மக்கள் விடு தலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுள் ஐந்து பெண்கள் அடங்குகின்றனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட வுள்ள வேட்பாளர்கள், கட்சியின் அதிஉயர் பீட உறுப்பினர்களும், இதன்போது சமுகமளித்திருந்தனர்.
 
»»  (மேலும்)

2/23/2010

த. தே. கூ. முன்னாள் எம்.பிக்கள் ஐ. ம. சு. முன்னணியில் போட்டி


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன் னாள் எம்.பி. செல்வி தங்கேஸ்வ ரியும் வன்னி மாவட்டத்தில் முன் னாள் எம்.பிகளான சிவநாதன் கிஷோர், கனகரத்னம் ஆகியோரும் போட்டியிட உள்ளனர்.
தங்கேஷ்வரி வேட்பு மனுப்பத்திர த்தில் கையொப்பமி ட்டுள்ளதோடு ஏனையவர்கள் நேற்று (22) கையொ ப்பமிட ஏற்பாடாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்
»»  (மேலும்)

வடக்குக்கு கடந்த வாரம் 5,50,000 சுற்றுலா பயணிகள்


வட பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 5 இலட்சத்து 50 ஆயிரம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் கடந்த வாரம் ஏ9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நாக விகாரையில் கடந்தவாரம் 2 இலட்சத்து 50 ஆயிரம் யாத்திரிகர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும், இவர்களில் பெரும்பகுதியினர் தென் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் என்றும் யாழ்ப்பாணத்துக்கும் அதனைச் சுற்றியுள்ள ஏனைய முக்கிய இடங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சல ஜாகொட தெரிவித்தார்.
மூன்று தசாப்தங்களாக வடக்கில் இடம்பெற்று வந்த மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தையடுத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையை உலகத்தில் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக கருதி இங்கு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
வட பகுதிக்கான நீர் விநியோகத்தை சீர்செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய வசதிகளை சீர்செய்யும் நடவடிக்கைகள் படிப்படியே எடுக்கப்படுமென்றும் அமை ச்சர் மேலும் கூறினார்.
 
»»  (மேலும்)

வவுனியாவில் வேட்பு மனுத் தாக்கல்


இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சியொன்று இன்று வவுனியா செயலகத்தில் முதலாவது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கின்றது.
ஓக்கம வசியோ, ஒக்கம ரஜவரு என்ற புதிய கட்சியே இவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றது. இந்தக் கட்சியில் சிவபெருமாள் கேதீஸ்வரன் என்பவருடைய தலைமையில் 9 வேட்பாளர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டிருக்கின்றன.
வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றார்கள். இலங்கையின் விகிதாசார தேர்தல் நடைமுறையின்படி 9 வேட்பாளர்களின் பெயர்கள் பட்டியலில் இருக்க வேண்டும் என்பது நியதியாகும்.
இதுவரையில் 3 முஸ்லிம் குழுக்கள் உட்பட 5 சுயேச்சை குழுக்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக வவுனியா தேர்தல் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.இராஜகுகனேஸ்வரன் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச வர்த்தக, கைத்தொழில், வேளாண் அமைப்பின் அமைப்பாளர் ஜி.வி.சகாதேவன் ஆகியோர் தலைமையிலான இரண்டு சுயேச்சை குழுக்களும் இவற்றில் அடங்கும்.
வரும் வெள்ளிக்கிழமை வரையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே அடுத்தடுத்த தினங்களில் நாட்டின் முக்கிய தேசிய கட்சிகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வன்னி மாவட்டத்தில் 2 லட்சத்து, 66 ஆயிரத்து 975 வாக்காளர்கள் இந்தப் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

2/22/2010

ஐ.ம.சு.மு வேட்பாளர் பட்டியல்கள் இன்று முதல் கையளிக்க ஏற்பாடு

* முதல் பட்டியல் கம்பஹாவில் இன்று தாக்கல்

* மு.கா.இன்று முடிவு 

* ரி.எம்.வி.பி வடக்கு, கிழக்கில் தனித்துப் போட்டி

 
பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியல்கள் இன்று (22) முதல் கட்சி முதன்மை வேட்பாளர்களி னால் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஐ. ம. சு. முன்னணி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்ட வேட்பாளர் பட்டியல் ஐ.ம.சு முன்னணி கம்பஹா மாவட்டக் குழுத் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று கம்பஹா மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட உள்ளது. ஏனைய மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் தினங்களில் குழுத் தலைவர்களினால் கையளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
கம்பஹா மாவட்ட வேட்பு மனுத்தாக்கலைத் தொடர்ந்து ஐ.ம.சு. முன்னணியின் முதலாவது கூட்டம் அமைச்சர் மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கம்பஹா நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஐ. ம.சு. முன்னணி ஏற்கெனவே 17 மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை பூர்த்தி செய்துள்ளதோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான பட்டியல்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைச்சர் அமீர் அலி தலைமையிலான குழு போட்டியிடவுள்ளதோடு ஐ.ம.சு. முன்னணி மட்டு. மாவட்ட வேட்பாளர்கள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டனர்.
இப்பெயர்ப் பட்டியலில் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி த. தங்கேஸ்வரி, முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி, கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. அலி ஸாஹிர் மெளலானா, ரமேஷ் கலைச்செல்வன், பலனித்தம்பி குனசேகரம், கே. சத்தியவரதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் அமீர்அலி தெரிவித்தார்.
இதேவேளை வன்னி மாவட்டத்திற்கு தனது தலைமையிலான குழு போட்டியிடவுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
வன்னி மாவட்ட ஐ.ம.சு. முன்னணி பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் அமைச்சர் நஜீப் ஏ. மஜீத், முன்னாள் எம்.பி. திடீர் தெளபீக் ஆகியோரும், மட்டு. மாவட்டத்தில் அமைச்சர் அமீர்அலி மற்றும் மாகாண அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரும் போட்டியிடவுள்ளதாக அவர் கூறினார்.
இதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிவநாதன் கிஷோரும் வன்னி மாவட்ட ஐ.ம.சு. முன்னணியில் போட்டியிட உள்ளதாக அறிய வருகிறது.
அ.இ.மு.கா 6 மாவட்டங்களில் போட்டியிட உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர்களான பேரியல் அஷ்ரப், பி.தயாரத்ன முன்னாள் எம்.பி. ஏ. எம். எம். நெளசாத் முன்னாள் சிவில் பாதுகாப்புப் பணிப்பாளர் சரத் வீரசேகர ஆகியோர் போட்டியிடவுள்ளதோடு அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பாக எத்தனை பேர் போட்டியிடுவது என்பது குறித்து ஆராயப்படுவதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
திருகோணமலை மற்றும் யாழ். மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல்களும் துரிதமாக தயாரிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது. இதேவேளை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு இன்னும் நான்கு தினங்களேயுள்ள நிலையில், ஐ.தே.க, ஜே. வி.பி. தமிழ் தேசிய கூட்டமைப்பு அடங்கலான கட்சிகள் இன்னமும் தமது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் இழுபறியில் உள்ளன. எதிர்க்கட்சிகளே இந்தக் குழப்பகரமான நிலையை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரியவருகிறது. இருப்பினும் சில கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தமது வேட்பாளர்கள் தொடர்பான இறுதித் தீர்மானத்தை நேற்று வெளியிட்டிருந்தன.
ரி.எம்.வி.பி. தனித்துப் போட்டி
வடக்கிலும் தனித்து போட்டியிட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் நேற்று தீர்மானம் எடுத்திருப்பதாக கட்சியின் பேச்சாளர் ஆஸாத் மெளலான தினகரனுக்குத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே தனித்துப் போட்டியிடுவதென கட்சி தீர்மானம் எடுத்திருந்தது. அம்பாறை உட்பட கிழக்கில் மூன்று மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. இதற்கான வேட்பு மனு நாளை சமர்ப்பிக்கப்படவி ருப்பதாகவும் கட்சிப் பேச்சாளர் ஆஸாத் மெளலானா கூறினார்.
மு.கா. இன்று முடிவு
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அனைத்து தீர்மானத்தையும் எடுக்கும் பொறுப்பை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைத்திருப்பதாக கட்சியின் முக்கிய பிரமுகரொருவர் நேற்றுக் கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா மற்றும் எந்தெந்த மாவட்டங்களில் போட்டியிடுவது என்பது குறித்து இன்றைக்குள் இறுதித் தீர்மானத்தை வெளியிடுவாரென்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் நாடுபூராவும் மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடுமாக விருந்தால் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தின் ஒரு மாவட்டத்திலும் போட்டியிடுவாரெனவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாகவிருந்தால் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவ தற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டியிருப்பின் அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனது முஸ்லிம் உறுப்பினர்களையும் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டால் ஐ.தே. க. வின் தற்போதுள்ள அமைப்பாளர்களை மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுமெனவும் கட்சியின் முக்கிய பிரமுகரொருவர் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் வேட்பு மனுக்களை செல்லுபடியற்தாக அறிவிக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு நெருக்கடி

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் வேட்பு மனுக்களை   செல்லுபடியற்தாக அறிவிக்குமாறு  மட்டகளப்பு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு  நெருக்கடி கொடுக்கப்பட்டுவருவதாக கச்சேரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன   சிறிலங்கா சுதந்திரகட்சி     முக்கியஸ்தரும் அமைச்சருமான கருணாம்மான் தரப்பினராலேயே  மேற்படி பயமுறுத்தல் விடுக்கப்பட்டு ள்ளது   தமிழ்  மக்கள் விடுதலை  புலிகளின் தனித்து களமிறங்கும் முடிவை  அடுத்து கிழக்கு மாகாண மக்களிடையே அவர்களுக்கு அதிகரித்து வரும் செல்வாக்கே  இதற்க்கு  காரணமாகும்   மட்டகளப்புமாவட்ட உயர் கல்வி மாணவர் ஒன்றியம்  , மீன்பிடி   விவசாய தொழில் சங்கங்கள் ,  அறிவாளிகள் என்று பலதரப்பினரும்  தமிழ் மக்கள் விடுதலை  புலிகளை ஆதரித்து தத்தமது கருத்துக்களை வெளிஇட்டு வருகின்றனர் 
இதன் காரணமாக கருணாம்மான் தனது  வெற்றி வாய்ப்புக்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதும்   குறிப்பிடத்தக்கது.  

 


»»  (மேலும்)

ஐ.தே.க - ஜே.வி.பி நேரடி மோதல்



ஐ.தே.கவுக்கும், ஜே.வி.பிக்கும் இடை யிலான கருத்து முரண்பாடுகள் உக்கிர மடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. இரு சாராரும் இப்போது நேரடி மோத லில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தால் ஜே.வி.பிக்குத் தேசியப் பட்டியலில் மூன்று இடங்களை ஒதுக்கித்தர முடியும் என ஐ.தே.க தெரிவித்துள்ளதால் அந் தக் கட்சி மீது ஜே.வி.பி. கொதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“பொதுத் தேர்தலில் யானைச்சின்னத்திலேயே ஐ.தே.க போட்டியிடும். ஜே.வி.பி. விரும்பினால் யானைச்சின்னத்தில் இணைந்து போட்டியிடலாம். இல்லையேல் எமக்கு ஆதரவளித்தால் அவர்களுக்கு தேசியப்பட்டியலில் மூன்று ஆசனங்களை வழங்க முடியுமென்று ஐ.தே.க.வின் காலி மாவட்ட அமைப்பாளர் வஜிர அபேவர்தன கூறியிருக்கின்றார். இதனையடுத்து ஜே.வி.பி. அதன் அனைத்துக் கூட்டங்களிலும் ஐ.தே.க.யை கடுமையாகச் சாடி வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன.
“வேறு கட்சிகளின் ஆதரவுடன் பாராளுமன்ற த்துக்குச் செல்லும் அவசியம் கிடையாது. ஒவ்வொரு கட்சியினதும் தேசிய பட்டியலில் செல்ல வேண்டிய தேவையும் எமக்கு இல்லை” என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பகிரங்கமாகவே ஐ.தே.க.வை விமர்சித்து வருகிறார்.
»»  (மேலும்)

சிறுபான்மைத் தமிழர் மகாசபை வரும் தேர்தலை சுயேட்சையாக எதிர்கொள்கின்றது.

வரும் பாராளுமன்றத் தேர்தலை  எப்படி எதிர்கொள்வதென்பதை கலந்தாலோசிக்கும் பட்சத்தில் நேற்று காலை சிறுபான்மைத் தமிழர் மகாசபை கூடியது. அச்சந்திப்பில் பழைய சிறுபான்மைத் தமிழர் மகாசபை  போராளிகளுடன் மிக அதிகமான புதிய தலைமுறையினரும்  கலந்து கொண்டனர். மிக நீண்டநேரமாக பல்வேறு தரப்பு நியாயங்களும் விவாதத்திற்குள்ளாக்கப்பட்டு இறுதியில் தாம் சுயேட்சையாகவே இத்தேர்தலை சந்திப்பதென பெரும்பான்மையினரின் விருப்பத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பதின்மூன்று சிறுபான்மைத் தமிழர் மகாசபை அங்கத்தவர்கள் சுயேட்சையாக வரும் தேர்தலில் போட்டியிட உள்ளார்கள். வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதாகவும் முடிவெடுக்கப்பட்டது.
»»  (மேலும்)

2/21/2010

வறிய பிரதேசத்தை சார்ந்த மக்களின் குறைகளை நேரில் சென்று அறியும் முதல்வர்


மட்டக்களப்பு வந்தாறுமூலை அண்டிய களுவன்கேணி பிரதேச மக்களை நேரில் சந்தித்து அம்மக்களின் குறைகளை முதல்வர் கேட்டறிவதையும், மீன்பிடியை தமது பிரதான தொழிலாக கொண்ட கடற்கரையை அண்டிய பிரதேசமான அங்கு வாழும் மக்கள் தமது தொழிலில் உள்ள குறைகளை முதல்வரிடம் முன்வைப்பதையும் படங்களில் காணலாம்
»»  (மேலும்)

கல்குடா நாமகள் வித்தியாலயத்தின் புதிய விளையாட்டு மைதானம் முதல்வரால் திறந்து வைப்பு

கல்குடா நாமகள் வித்தியாலயத்தின் புதிய விளையாட்டு மைதானம் முதல்வரால் நேற்று திறந்து வைப்பு,
இதுவரை காலமும் இவ்வித்தியாலயத்திற்கு மாணவர்கள் விளையாடுவதற்கென் ஒரு மைதானம் இன்றி சிரமப்பட்டு வந்தனர் இக்குறையினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது அமைச்சு நிதியின் ஒதுக்கீட்டின் மூலம் புனரமைத்து நேற்று அதனை திறந்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

சுவாமி விபுலானந்தர் வரலாற்று நூல் வெளியீட்டு விழா.

கடந்த 16ம் திகதி மட்டக்களப்பு மஹாஜன கல்லூரியில் இடம்பெற்ற சுவாமி விபுலானந்தர் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு சுவாமி விபுலானந்தர் வரலாற்று நூலினை வெளியிடுவதை படங்களில் காணலாம்.
»»  (மேலும்)

பிரபல நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா காலமானார்

இலங்கையின் பிரபல நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா சுகயீனம் காரணமாக இன்று காலை 8.00 மணியளவில் கொழும்பில் காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 47.

இவரது பூதவுடல் தற்போது அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை 2.00 மணியளவில் மாதம்பிட்டிய மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1963 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி பிறந்தவர் ஸ்ரீதர் பிச்சையப்பா. சிறு வயது முதலே கலைத்துறையில் ஆர்வம் கொண்டவர்.

பிரபல நாடகக் கலைஞர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர், 'மிமிக்ரி', மற்றும் ஓவியம் என ஒட்டு மொத்தக் கலைத்துறையில் ஈடுபட்டு, தன்னை முழுமையாகக் கலைத் தாய்க்கு அர்ப்பணித்தவர் ஸ்ரீதர் பிச்சையப்பா. _
»»  (மேலும்)

தேர்தல் களத்தில் முத்தையா முரளிதரன்...?

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய மாத்தறை மாவட்டத்திலும் நட்சத்திர ஓட்ட வீராங்கணை சுசந்திகா ஜயசிங்க கேகாலை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது
»»  (மேலும்)

தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் தமிழ்க் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ்

 

வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்ப டுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களைத் தெரிவதிலும், முன்னாள் உறுப்பினர்களுக்கு வாய்ப்ப ளிப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவதிலேயே நாட்களைக் கடத்தி வருவதாக அந்தக் கட்சிகளின் சிரேஷ்ட தலைவர்கள் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம், இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டு செயற்படுவதா லும், வேட்பாளர்களைத் தெரிவதிலுள்ள வெளிப்படைத் தன்மையற்ற போக்கினாலும், அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதிருப்தியடைந் துள்ளனர்.
வேட்புமனுக்களைத் தயாரிப்பதில் குறித்த தொகையிலும் பார்க்க கூடுதலானோரின் பெயர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதால், யாரை உள்வாங்குவது யாரை நீக்குவது என்பதைப் பற்றிய இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் திண்டாட்ட நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
தாம் வேட்பாளர் பட்டியலில் உள்ளட க்கப்பட்டுள்ளோமா? நீக்கப்பட்டுள்ளோமா? என்பது தெரியாமல் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பலர் குழம்பிப் போயுள்ளதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.
வேட்புமனுக்களின் விபரங்களை இறுதி நேரத்திலேயே வெளியிடவுள்ளதா கவும் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் விடுபடுவதாகவும் கூட்டமைப்பு தெரிவித்து வருகிறது. இதனால், நீக்கப்படுவோர் யார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு ஒவ்வோர் முன்னாள் உறுப்பினரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகி ன்றனர். இறுதி நேரத்தில் தமது பெயர் நீக்கப்பட்டமை தெரியவந்தால், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மாற்று நடவடிக்கையை மேற்கொள்வதில் ஏற்படும் சிக்கலையும் நெருக்கடியையும் தவிர்ப்பதற்காகவே இந்த முயற்சி என அவர்கள் தெரிவித்தனர். சிலர் தாம் நிச்சயமாக நீக்கப்படலாம் எனத் தீர்மானித்து வேறு கட்சிகளை நாடிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தீர்மானித்தே தாம் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்ததாக பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரான தங்கேஸ்வரி கதிர்காமநாதன் எமக்குத் தெரிவித்தார்.
இதேநேரம், தமிழ்த் தேசிய கூட்ட மைப்பில் அங்கம் வகிக்கும் அகில இல ங்கை தமிழ் காங்கிரஸ் முரண்பட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் கஜன் பொன்னம்பலம் முன்வைத்த யோசனைகளை கூட்டமைப்பு ஏற்க மறுத்ததை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான முறுகல், முரண்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் கூட்டமைப்பு இறுதி நேரம் வரை பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கத் தீர்மானித்துள்ளதுடன், மேற்கொள்ளும் முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவதைத் தவிர்க்கவும் தந்திரோபாய செயற்பாட்டை முன்னெடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
»»  (மேலும்)

வன்னி மற்றும் யாழ். மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

கிழக்கில் தனித்து போட்டியிடவுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இன்னும் இரண்டு தினங்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிடவுள்ளது. பெண்களின் பங்களிப்பு இளைஞர்களின் பங்களிப்பும் தமது வேட்பாளர் பட்டியலில் உள் வாங்கப்பட்டுள்ளதாக கட்சியின் பேச்சாளர் தெரிவித்தார்.
அம்பாறை, திருகோணமலை, மட்டக்க ளப்பு மாவட்டங்களில் மட்டுமல்ல வன்னி மற்றும் யாழ். மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் வேட்பாளர்களைக் களமிறக்குவதற்கும் தமது கட்சி ஆலோசித்து வருகிறது என்றும் பேச்சாளர் அஸாத் மெளலானா தெரிவித்தார்.
»»  (மேலும்)

ஆப்கான் பிரச்சனையால் நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் தங்கியிருப்பது தொடர்பான சர்ச்சையில் நெதர்லாந்து அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் நேட்டோ அதிகாரிகள் ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் செயற்பாடு குறித்து உத்தரவாதம் கொடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் டச் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறவுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானியர்கள் நேட்டோவின் ஆதரவை தொடர்ந்து பெறுவார்கள் என நேட்டோவின் சார்பில் பேசவல்லவரான ஜேம்ஸ் அப்பாதுரை கூறியுள்ளார்.
தலிபான்களுக்கு எதிரான மிகப்பெரிய படை நடவடிக்கையில் நேட்டோவினர் ஈடுபட்டு வரும் இந்நிலையில் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையே, டச் படைகள் நிலைகொண்டுள்ள உருஸ்கான் மாகாணத்தின் ஆளுநர், டச் படைகள் வெளியேறினால் மீள்கட்டமைப்பு பணிகள் பின்னடைவை சந்திக்கும் என  தெரிவித்துள்ளார்.
சாலைகளை அமைப்பது, கட்டிடங்களை கட்டுவது, ஆப்கான் காவல்துறையினருக்கு பயிற்சி கொடுப்பது, பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போன்ற விஷயங்களில் டச் படையினர் முக்கிய பணியாற்றுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

»»  (மேலும்)

2/19/2010

வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்


பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று (19) ஆரம்பமாகிறது. 22 மாவட்ட செயலகங்களில் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் முன்னிலையில் இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
கட்சிச் செயலாளர்களும், கட்சிகளால் பிரேரிக்கப்பட்டவர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்பவர்களும் தவிர வேறு எவரும் மாவட்ட செயலகங்களுக்குள் அனுமதிக்கப் படமாட்டார்களென தேர்தல் செயலகம் தெரிவித்தது. கட்சி ஆதரவாளர்கள் கச்சேரிகளுக்கு அருகில் கூடுவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்படுகிறது.
வேட்பு மனுக்கள் இன்று முதல் (19) - 26 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படவுள்ளன. பிரதான கட்சிகள் இறுதி நேரத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்த 26 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் -மனோ கணேசன்

கொழும்பு மாவட்ட தமிழ் வேட்பாளர்களின் நியமனம் தொடர்பில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில்   முறுகல்  



 
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் துன்புறும்பொழுது அவர்களுக்கு ஒருபோதும் உதவி செய்யாத சில தமிழ் அரசியல் வியாபாரிகளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நேரடி தமிழ் வேட்பாளர்கள் என்ற போர்வையில் எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது, கொழும்பு மாவட்டத்திலே நிறுத்துவதற்கு முயற்சி செய்யவேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட தமிழ் வேட்பாளர்களின் நியமனம் தொடர்பில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்பு கொண்டு மனோ கணேசன் தெரிவித்த கருத்துகள் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"தலைநகர தமிழ் மக்களுக்கு கவசமாக எமது கட்சி பணியாற்றிக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்காக உயிரையும் துச்சமாக மதித்து வீதியில் இறங்கி போராடியவர்கள் நாங்கள்.

எங்கள் குரல் ஓங்கி ஒலித்து சர்வதேச சமூகத்தை தட்டியெழுப்பியிருக்காவிட்டால், தலைநகரத்திலே நடந்திருந்த கடத்தல், காணாமல் போதல், வர்த்தக சமூகத்திடம் கப்பம் பெறல் மற்றும் படுகொலைகள் ஆகிய அநீதிகள் கட்டுப்பாட்டுக்கும், முடிவுக்கும் வந்திருக்காது. இதனாலேயே எமக்கு இன்றைய அரசாங்கத்துடன் பாரிய முரண்பாடு ஏற்பட்டது.

இன்று தனது பாதுகாப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வேளையில், தனது தனிப்பட்ட பாதுகாப்பு பறிக்கப்பட்ட நிலையில் எமது தலைவர் மனோ கணேசன் செயலாற்றுகின்றார்.

எமது போராட்டங்களின் மூலமாக பெருவாரியான அரசியல் இலாபங்களை எதிர்க்கட்சி கூட்டணியும், ஐக்கிய தேசிய கட்சியும் பெற்றுக்கொண்டுள்ளன. இது இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெளிப்பட்டது.

இந்நிலையில் எமது மக்கள் துன்பமடையும் பொழுது எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் தமது சொந்த வியாபாரங்களைக் கவனித்துக் கொண்டிருந்த நபர்களை தமது நேரடி தமிழ் வேட்பாளர்களென பெயர் சூட்டி கொழும்பு மாவட்ட தேர்தலில் நிறுத்த நினைப்பது எமது கட்சிக்கும், தலைநகர தமிழ் மக்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சி செய்கின்ற துரோகமாகும்.

இத்தகைய துரோக முயற்சிகளை ஐதேக தேர்தல் காலத்திலே செய்யுமானால் நாங்கள் மாற்று வழியை நாடவேண்டிவரும். ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள அனைத்து தமிழ் மக்களின் விரோதிகளையும் அம்பலப்படுத்தி நடுவீதிக்குக் கொண்டுவர வேண்டிவரும்.

அதுமட்டுமல்லாமல், நாடு முழுக்க வாழும் அனைத்து தமிழ் வாக்காளர்களையும் அழைத்துகொண்டே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியிலிருந்து வெளியேறுவோம். இத்தகைய நிலைமை ஏற்படாமல் இருப்பதைத் தவிர்ப்பது என்பது, நாளை (19-02-2010) எமக்குகிடையே நடைபெறறும் இறுதிப் பேச்சுவார்த்தையில் தங்கியுள்ளது."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

மணியை மாற்றுகிறது ஜே.வி.பி!


இதுவரை காலமும் மணி சின்னத்தில் போட்டியிட்டுவந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) எதிர்வரும் பொதுத் தேர்தலில் கிண்ணம் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனரல் சரத் பொன்சேகாவை முதன்மைப்படுத்தியதாக புதிய கட்சியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள்  தெரிவித்தன.
»»  (மேலும்)

ஆடை தொழிற்சாலை ஊழியர்களை அரசு கவனிக்கும் ஜி. எஸ். பி. சலுகை; எந்த சவாலையும் ஏற்கத்தயார்’


ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ. எஸ். பீ. பிளஸ் வரிச்சலுகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், நாட்டின் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்களும் ஊழியர்களும் பாதிக்கப்படாத வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
தொழிற்சாலை உரிமையாளர்களினதும் ஊழியர்களினதும் நலன்களை அரசாங்கம் கவனிக்குமென்றும் அமைச்சர் அழகப்பெரும குறிப்பிட்டார். எரிபொருள் விலையேற்றத் தின்போது எவ்வாறு மக்களின் நலன்கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டதோ ஜீ. எஸ். பி. பிளஸ் விடயத்தில் அரசாங்கம் பொறுப்பேற்று எந்தச் சவாலையும் எதிர்கொள்ளுமென்று அமைச்சர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் தகவல் அளித்த அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், வரிச்சலுகையை மீளப்பெற அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்து மென்றும் ஆனால், எவ்விதத்திலும் இறைமை விட்டுக்கொடுக்கப்பட மாட்டா தென்றும் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

2/18/2010

பாராளுமன்றத் தேர்தலை எமது தலைமைகள் எப்படி எதிர்கொள்ளவேண்டும்?

உயர் கல்வி மாணவர் ஒன்றியம்  விடுத்துள்ள வேண்டுகோள்.

மிக விரைவில் இடம்பெறப்போகின்ற பாராளுமன்றத் தேர்தலானது எமது மக்களின் வாழ்வில் மிக முக்கியமானதொன்றாகும். 1977 ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் வன்முறைகளற்ற ஒரு சூழலில் இடம்பெறப்போகின்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தல் இதுவாகும். எமது மக்கள் சுதந்திரமாகச் சிந்திப்பதற்கும், செயற்படுவதற்கும் உகந்த ஒரு அரசியல் சூழல் மிக நீண்டகாலத்திற்குப் பின்னர் வாய்த்துள்ளது.
    கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்களோ, கல்விமான்களோ, சமூகப் பெரியவர்களோ யாருமே தமது அரசியல் விருப்பு வெறுப்புகளை பகிரங்கமாகத் தெரிவிக்கும் வாய்ப்புகள் இருக்கவில்லை. ஆனால் தற்பொழுது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. எனவே எமது மாகாணமக்களின் நலனில் அக்கறைகொண்டவர்கள் எனும் வகையில் எமது அரசியல் தலைவர்களுக்கு எமது விருப்புகளைத் தெரிவிக்கும் உரிமை உண்டெனக் கருதுகின்றோம். எமக்கான அரசியல் வழிகாட்டிகள் எப்படி செயற்படவேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டிய தருணம் இதுவெனக் எண்ணுகின்றோம். எமது மக்களின் நிம்மதியான வாழ்வும் அரசியல் பலமும் ஒருமித்து கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதே உயர்கல்வி மாணவர் ஒன்றியத்தினராகிய எமது விருப்பமாகும். அதற்கொப்ப எதிர்வரும் தேர்தலை எமது எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை பற்றி எமது கருத்துக்களைத் தெரிவிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
    கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எமது தலைமைகள் விட்ட தவறை நாம் மீண்டும் விடக்கூடாது என்பதே எமது விரும்பமாகும்.  ஒரு பலமான சக்தியாக தனித்து நின்று எமது மாகாணசபையை ஆளும் வாய்ப்பை நாம் தவறவிட்டுள்ளோம். தேசியக் கட்சிகளில் இணைந்திருந்து போட்டியிட்ட காரணத்தால் கிழக்கு மாகாணசபையை அதிகாரம் மிக்கதொன்றாகக் கட்டியெழுப்பும் வாய்ப்பின்றி எமது தலைமைகள் நிற்பதை நாம் காணுகின்றோம். எனவே இன்று எதிர்கொள்ளுகின்ற பாராளுமன்றத் தேர்தலை நாம் கவனமாகக் கையாளவேண்டியுள்ளது. பாராளுமன்றத்திலாவது தனித்த பலத்துடன் எமது மக்களுக்கான பேரம் பேசும் சக்தியாக எமது தலைமைகள் தலைநிமிரவேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
    கிழக்கு மாகாணத்தின் குரலை பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அரசியல் முகவரியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தயாராக வேண்டும். எனவே எந்தவித நெருக்கடிகள் வந்தாலும் அனைத்துக்கும் முகம்கொடுத்து தனித்துப் போட்டியிடுமாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை வேண்டிக்கொள்கிறோம்.
    தனித்துநின்று போட்டியிடும் பட்சத்தில் எமது ப+ரண ஆதரவினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு வழங்க உயர்கல்வி மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றோம்.
  
உயர்கல்வி மாணவர் ஒன்றியம்
மட்டக்களப்பு
»»  (மேலும்)

பராக் ஒபாமாவைச் சந்திக்கிறார் தலாய்லாமா

தீபத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்திப்பதற்காக அமெ ரிக்கா பயணமானார்.
இந்தியத் தலைநகர் புதுடில்லியி லிருந்து தலாய்லாமா தனது பயணத்தை ஆரம்பித்தார்.
சீனாவின் எதிர்ப்பையும் பொருட் படுத்தாமல் அமெரிக்கா தலாய்லா மாவை வரவேற்கவுள்ளது.
வெள்ளை மாளிகையில் உள்ள விசேட அறையில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. வழமையாக வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்தி க்கும் அறையில் அல்லாமல் வேறு அலுவலகத்தில் இச்சந்திப்பு நடை பெறும்.
 
»»  (மேலும்)

வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பம்; முடிவுகள் எட்டாத நிலையில் சிறுகட்சிகள் கூட்டுச் சேர்வதிலும் சின்னத்தை தெரிவதிலும் பெருந்திண்டாட்டம்

வேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தயாரிக்கும் பரபரப்புக்கு மத்தியிலும், தேர்தலில் போட்டியிடும் சின்னத்தைத் தெரிவு செய்வதில் சிறு அரசியல் கட்சிகள் இன்னமும் முடிவெடுக்க முடியாத நிலையில் இறுதி நேர பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன.
பெரிய அரசியல் கட்சிகள் வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தயாரிக்கும் இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் சிறிய கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பதில் முனைப்புக் காட்டியுள்ளன.
இந்த நிலையில் பெரிய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் சில அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது இணைந்தே போட்டியிடுவதா என்பதில் இன்னமும் தெளிவான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளன.
யாழ்ப்பாணத்தில் தனித்துப் போட்டியிடுவதெனவும் அதேநேரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் நட்புறவுடன் செயற்படுவதெனவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தீர்மானித்திருக்கிறது. எனினும், அரச தரப்புடன் நேற்றைய தினமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கட்சியின் பேச்சாளரொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
அரசாங்க ஆதரவு கட்சியாகத் தேர்தலில் களமிறங்குவதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடுவதனை விடவும், தனித்து வீணைச் சின்னத்தில் போட்டியிடுவது சாதகமானது என ஈ.பி.டி.பி. நம்புகிறது.
இதேபோன்று ஆளுந்தரப்பில் உள்ள மலையக மக்கள் முன்னணி நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் தனித்து கட்சியின் மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. அமரர் பெ. சந்திரசேகரனின் பாரியார் சாந்தினி சந்திரசேகரனின் தலைமையில் நுவரெலியா மாவட்டத்திலும், மாகாண சபை உறுப்பினர் எஸ். அரவிந்த்குமார் தலைமையில் பதுளை மாவட்டத்திலும் மலையக மக்கள் முன்னணி களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதிக் கட்டத்திலும் அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்றும் கூடி ஆராய்ந்துள்ளது. இம்முறை கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக எம்.கே. சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கக் கூடாதெனக் கூட்டமைப்பின் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான புதிய இடதுசாரி விடுதலை முன்னணி கட்சியில் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
»»  (மேலும்)

தவறான பாதையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பாராளுமன்றத் தேர்தலுக்காகக் கூட்டணி அமை ப்பதில் எதிரணிக் கட்சிகள் தீவிரமாக ஈடுபட் டிருக்கின்றன. இக்கட்சிகளுக்கிடையே கொள்கை உடன்பாடு எதுவும் இல்லை. கலாசார, பொருளாதார, சர் வதேச விடயங்களிலும் சமூக நோக்கிலும் ஒன்றுக்கொ ன்று முரண்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடு தலை முன்னணியும் இந்த உத்தேச கூட்டணியில் பிர தான கட்சிகளாக உள்ளன.
பொதுவான வேலைத் திட் டம் பற்றிய அக்கறை இவர்களுக்கு இல்லை. பொதுவான சின்னம் பற்றியே பேச்சுவார்த்தை நடத்துகின்றார்கள். பாரா ளுமன்ற ஆசனங்களைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லாத கூட்டணி என்று இதைக் கூறலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கூட்டணியுடன் தன்னை இனங்காட்டுவது இக் கூட்டமைப்பின் உண்மையான நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்புகின்றது.
தமிழ் மக்களின் ஆறு தசாப்த காலத் தலைமையின் தொட ர்ச்சியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகி யது. எனவே பிரதான நோக்கத்தைப் பொறுத்த வரை யில் ஆரம்ப காலத் தமிழ்த் தலைமைக்கும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்குமிடையே எவ்வித வேறுபாடும் இல்லை.
தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை காண்பதே அந்த நோக்கம். ஆனால் முன்னைய தலை மைகளைப் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அந்த நோக்கத்துக்கு முன்னுரிமை அளித்துச் செயற்பட வில்லை. ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கூட்டமைப்பு மேற்கொண்ட சகல தீர்மானங்களும் இதை உறுதிப்படுத் துகின்றன.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழான மாகாண சபையை ஏற்க முடியாது என்று தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புத் தலைவர்கள் கூறுகின்றார்கள். மாகாண சபை பாதகமானதென்றால், தமிழ் மக்கள் அனைவரும் மாகாண சபைத் தேர்தலில் பங்குபற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது எதற்காக என்பது பற்றிய விளக்கம் எதையும் இதுவரை இவர்கள் அளிக்கவில்லை.
அதை விடுவோம். பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வையே கூட்ட மைப்பினர் எதிர்பார்க்கின்றார்களென்றால் அதற்குச் சாத கமான முறையிலேயே அவர்களின் அணுகுமுறை அமைய வேண்டும்.
பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வு அரசியலமைப்பு மாற்றத்துடன் சம்பந்தப்பட்டது. அரசிய லமைப்பில் மாற்றம் செய்வதன் மூலமே பதின்மூன்றா வது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வை நடை முறைப்படுத்த முடியும். அதற்குப் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை.
பாராளுமன்றத் தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறக்கூடிய நிலை யிலுள்ள அரசியல் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்து வதன் மூலமே பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்க கூடுதலான அரசியல் தீர்வு சாத்தியமாகும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான இந்த அணுகுமுறையைப் பின்பற்றவில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றிலிரண்டு பெரும் பான்மையைப் பெறக் கூடிய நிலையில் இருக்கின்றது. எதிரணிக் கூட்டணிக்குச் சாதாரண பெரும்பான்மையே சாத்தியமில்லை. ஆனால் எதிரணிக் கூட்டணியுடனேயே தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை இனங்காட்டுகின்றது.
இனப்பிரச்சினையின் தீர்வுக்கான கோரிக்கையை முன்வை க்கும் போது அதை வென்றெடுப்பதற்குச் சாத்தியமான வழி முறையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். கோரிக்கையை முன்வைப்பதும் அதை வென்றெடுப்பதற்குச் சாத்தியம ற்ற நிலைப்பாட்டை மேற்கொள்வதும் இதுவரையிலான தமிழ்த் தலைமையின் பாரம்பரியமாக உள்ளது. இது மேலும் தொடர்வதை அனுமதிக்கக் கூடாது. ஒன்றில் தலைமை தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது மக்கள் தலைமையை மாற்ற வேண்டும்.
 
»»  (மேலும்)

2/16/2010

பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானம்:டக்ளஸ் தேவானந்தா

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆளும் கட்சியுடனும் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகத் தெரிவித்த அவர் இவ்வார இறுதிக்குள் தமது முடிவுகளை உத்தியோக பூர்வமாக அறிவிப்பதாகவும்   தெரிவித்தார்.
»»  (மேலும்)

ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி மியன்மார் சென்றார்

ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி குயின்டானா ஐந்து நாள் பயணமாக நேற்று திங்கட்கிழமை மியன்மார் சென்றார். இவ்வருடம் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக ஐ.நா. அதிகாரிகளுடன் பேசவும் மியன்மார் நிலைமைகளை ஆராயும் பொருட்டும் குயிண்டானா இங்கு வந்துள்ளார்.
மியன்மார் எதிர்க் கட்சித் தலைவி ஆங்சாங்சூயி சுமார் இருபது ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இக்கட்சியின் துணைத் தலைவரான டின்ஊ அண்மையில் இராணுவ ஜூண்டாக்களால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிரு ந்தார். டின் ஊவையும் ஐ.நா. மனித உரிமைகள் அதிகாரி சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க் கட்சித் தலைவியின் சட்டத்தரணிகளையும் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. என்ன நோக்கத்துக்காக சட்டத்தரணிகள் ஐ.நா. பிரதிநிதியை சந்திக்கின்றார்கள் என்பது தெரியவில்லையென கட்சியின் பேச்சாளர் கூறினார்.
»»  (மேலும்)

வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த17 மாவட்டங்களின் ஐ.ம.சு.மு வேட்பாளர்கள் வேட்பு மனு கைச்சாத்து

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 17 மாவட்டங்களின் வேட்பு மனுக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் நேற்று மாவட்டக் குழுத் தலைவர்களினால் கையொப்பமிடப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்ட வேட்பு மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு நேற்றுக் காலை 10.30 மணி சுப வேளையில் கையொப்பமிடப்பட்டுள்ளதுடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் தமது வேட்பு மனுக்களில் நேற்று கையொப்பமிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் 21ம் திகதிக்குள் 22 தேர்தல் மாவட்டங்களையும் உள்ளடக்கிய வேட்பு மனுக்கள் கையொப்பமிடப்பட்டு பூர்த்தி செய்யப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் மாவட்டத் தலைவர்கள் வேட்பு மனுப்பட்டியலில் கைச்சாத்திட்டதுடன் 26ம் திகதிக்குள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏனைய வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது தொடர்பில் விளக்க மளித்த அமைச்சர்;
எதிர்வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் அவர்கள் வேட்பு மனுக்களில் கைச்சாத்திடுவர் என்றும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் அமைச்சர் ஜோன் செனவிரத்ன ஆகியோரும் கலந்துகொண்ட இம்மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்ததாவது;
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுடனும் தேர்தல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளதுடன் தேர்தல் செயற்பாட்டுத் திட்டமொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் தெரிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில் இதற்குமுன் பாராளுமன்ற த்திலிருந்தவர்களுடன் புதியவர்களுக்கும் இம்முறை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளது. கடந்த கால யுத்த சூழ்நிலைக்குப் பின்னர் முதல் தடவையாக சகல மாவட்டங்களிலும் முன்னணி போட்டியிடும் தேர்தல் இதுவாகும்.
இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்கனவே இருந்தவர்களைத் தவிர ஆயிரம் விண்ணப்பங்கள் புதிதாக கிடைத்திருந்தன.
அதற்கிணங்க நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு சகல மாவட்டங்களிலுமுள்ள அனுபவமுள்ள அனைத்துத் துறைகளையும் சார்ந்தவர்கள் புதிய வேட்பாளர்களாகத் தேர்ந்தெடு க்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 26ம் திகதி வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெறுவதால் 26ம் திகதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்வதுடன் 27ம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறும் விசேட மத வைபவங்களைத் தொடர்ந்து 27ம் திகதி வேட்பாளர்கள், அனைவரும் கட்சியின் கொள்கைப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். இந்நிகழ்வு எதிர்வரும் 27ம் திகதி பிற்பகல் 4 மணிக்கு அநுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
பிரதான பெளத்த மத வழிபாடு அநுராதபுரம் ஸ்ரீ மஹா போதி விஹாரையில் இடம்பெறுவதுடன் பெளத்த மத வேட்பாளர்கள் அவ்வழிபாடுகளில் கலந்துகொள்வர்.
அதேவேளை ஏனைய மதங்களைச் சார்ந்தோர் அநுராதபுரத்தின் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மத வழிபாடுகளில் கலந்துகொள்வர்.
இதனையடுத்து 27ம் திகதி அரசாங்கத்தின் கொள்கை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொள்கை மற்றும் மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டம் தொடர்பான அரசின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாக வேட்பாளர்கள் ஜனாதிபதி முன்னிலையில் உறுதிமொழி எடுப்பார்கள்.
அமைதியானதும் நீதியானதுமான தேர்தல் இடம்பெறுவதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவதுடன் கட்சிக் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கவும் வேட்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகி ன்றனர்.
கட்சிக் கொள்கைகளைமீறி தேர்தல் ஆணையாளரினதும் பொலிஸாரினதும் வழிகாட்டல்களை மீறி நடப்போர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கு எவ்வித பதவியும் வழங்கப்படமாட்டாது.
மஹிந்த சிந்தனையை முன்கொண்டதாகவே பொதுத் தேர்தல் விஞ்ஞாபனமும் அமையும். உலகில் முன்னணி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்குடன் சவால்கள், அழுத்தங்களை எதிர்கொள்ளப் பலமுள்ள 3ல் இரண்டு பலம் மிக்க அரசாங்கத்தை அமைப்போம்.
அதன் மூலம் முழுநாடும் எதிர்பார்க்கும் அரசியலமைப்பு மாற்றம் மேற்கொள்ளப்படும்.
கடந்த தேர்தலில் நாம் அமோக வெற்றிபெற்றுள்ளதைப் போன்றே இம்முறையும் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற ரீதியில் வெற்றிபெறுவோம்.
இன்றுள்ள அரசியலமைப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவது சாத்தியமில்லை என்பதைப் பொய்யாக்கும் வகையில் அரசாங்கம் மாகாண சபைகளில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை பெற்றுள்ளதை அமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற நிகழ்வில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, அநுராதபுரம், பொலனறுவை, குருநாகல், புத்தளம், பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் குழுத் தலைவர்களே தத்தமது மாவட்ட வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டுள்ளனர். அத்துடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சகல வேட்பாளர்களும் தமது வேட்பு மனுவில் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

யாழ் நகரில் குண்டு வெடிப்பு- சிறார்கள் இருவர் பலி


கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இந்த இரண்டு பாடசாலை மாணவர்களும் வீதியில் கிடந்த மர்மப்பொருள் ஒன்றை எடுத்து குத்திப் பார்த்தபோது அது வெடித்ததால் இரண்டு சிறார்களும் ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொழும்புத்துறை புளியடிச்சந்தியில் திங்கட்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் ஒரு மாணவன் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் ஏனையவர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லையெனவும் இலங்கை பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
»»  (மேலும்)

மே. வங்காளம் மிட்னாபூரில் பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டு தாக்குதல்: 9 வீரர்கள் பலி


ÚU¼h YjLÖ[ UÖŒX†‡¥ A‡WzTÛP ˜LÖÛU r¼½ YÛ[†‰, UÖÚYÖ ˆ«WYÖ‡L· TVjLW RÖehR¥ SP†‡]ÖŸL·. AYŸL· ‰TÖefVÖ¥ NWUÖ¡VÖL ryPÚRÖ|, ˜LÖÛU ˆ ÛY†‰ A³†R]Ÿ. C‹R RÖehR¦¥ 20 WÖ„Y ®WŸL· T¦ B]ÖŸL·.

 
ÚU¼h YjL UÖŒX• ÚU¼h –y]Ö”Ÿ UÖYyP•, UÖÚYÖ›Í| ˆ«WYÖ‡L¸Á SPUÖyP• ŒÛ\‹R Th‡VÖh•.

HWÖ[UÖ] fWÖUjLÛ[ RjL[‰ ‘zeh· ÛY†‰·[ UÖÚYÖ›Í| ˆ«WYÖ‡L·, ÚR|R¥ ÚYyÛP›¥ D|T|• A‡Wz TÛP›]Ÿ —‰ AªYÚTÖ‰ RÖehR¥ SP†‡• Y£f\ÖŸL·.

WÖ„Y ˜LÖ•

Cjh·[ ÙT¥TÖ¡ ÚTÖ§Í ŒÛXV†‰eh EyTyP Th‡›¥ UÖÚYÖ›Í|L¸Á ÙLÖyP†ÛR J|eL p¥RÖ GÁÄ–P†‡¥, WÖ„Y ˜LÖ• JÁ¿ AÛUeLTy|·[‰.

Cjf£‹RYÖ¿ ‡]˜• WÖ„Y†‡]Ÿ ÚWÖ‹‰ T‚›¥ D|T|Y‰ YZeL•. C‹R ˜LÖ–¥ ÚS¼¿ 51 WÖ„Y ®WŸL· C£‹R]Ÿ.

NWUÖ¡ ‰TÖef s|

ÚS¼¿ UÖÛX 5.30 U‚ A[«¥ C‹R WÖ„Y ˜LÖ• Th‡eh ‡{ÙWÁ¿ 25 ÚUÖyPÖŸ ÛNef·L¸¥ HWÖ[UÖ] S®] BRjLºPÁ UÖÚYÖ›Í| ˆ«WYÖ‡L· Y‹R]Ÿ. ˜R¦¥, ˜LÖ• Th‡ÛVo r¼½ ŒXeL‚ ÙYzLÛ[ “ÛR†‰ ÛY†R AYŸL· WÖ„Y ˜LÖÛU ÚSÖef L™z†R]UÖL ryP]Ÿ.

AÚTÖ‰ ÙTÖµÛR E¼NÖLUÖL°•, NÛUV¥ ÙNš‰• L³†‰e ÙLցz£‹R WÖ„Y ®WŸL· ‰TÖefVÖ¥ r|• N†R• ÚLy| A‡ŸopVÛP‹R]Ÿ. ˜LÖ–¥ C£‹‰ ÚYLUÖL ÙY¸ÚV Y‹R]Ÿ. C‹R N‹RŸT†ÛR TVÁT|†‡e ÙLցP UÖÚYÖ›Í|L· WÖ„Y†‡]ÛW r¼½ YÛ[†‰ TVjLW RÖehRÛX SP†‡]Ÿ. C‹R ÚSW†‡¥ ŒXe L‚ ÙYzLº• ÙYz†‰o pR½].

20 WÖ„Y ®WŸL· T¦

ˆ«WYÖ‡L· ‰TÖefVÖ¥ ryPRÖ¨•, ŒXeL‚ ÙYzL· ÙYz†RRÖ¨• WÖ„Y ˜LÖ• ˆ‘z†‰e ÙLցP‰. C£‹RÚTÖ‡¨•, Ajf£‹‰ ÚYLUÖL ÙY¸ÚV½VYÖÚ\ WÖ„Y ®WŸLº• UÖÚYÖ ˆ«WYÖ‡L· —‰ NWUÖ¡ ‰TÖefVÖ¥ ry| T‡Xz ÙLÖ|†R]Ÿ. C£ RW‘]£eh• CÛPÚV 45 Œ–P ÚSW• L|ÛUVÖ] ‰TÖef NÛP SP‹R‰.

UÖÚYÖ›Í| ˆ«WYÖ‡L¸Á C£˜Û] RÖehR¦¥ N•TY CP†‡ÚXÚV 20 WÖ„Y ®WŸL· ÙLÖ¥XTyP]Ÿ. CYŸL¸¥ 9 ÚTŸ ˆ›¥ pef EP¥ L£f T¡RÖTUÖL T¦VÖ]ÖŸL·. WÖ„Y ®WŸL¸Á RÖehR¦¥ 2 UÖÚYÖ›Í|Lº• ÙLÖ¥XTyP]Ÿ.

RÖehR¥ SP‹R CP†‡¥ C£‹‰ JÚWÙVÖ£ WÖ„Y ®WŸ Uy|• R‘ Kz Y‹‰ «yPÖŸ. U¼\YŸL¸Á L‡ GÁ]YÖ›¼¿ GÁT‰ ÙR¡V«¥ÛX. RÖehRÛX SP†‡ «y| R‘ÚVÖzV UÖÚYÖ ˆ«WYÖ‡L· A‹R Th‡›¥ ÚU¨• HWÖ[UÖ] ŒXeL‚ ÙYzLÛ[• “ÛR†‰ ÛY†‰ ÙNÁ\]Ÿ.

i|R¥ TÛP «ÛW‹R‰

C‹R TVjLW N•TY• T¼½ ÚL·«TyP‰•, WÖ„Y ˜LÖ• C£‹R Th‡eh ‘Á”Ÿ U¼¿• ÙT¥TÖ¡ WÖ„Y ˜LÖ•L¸¥ C£‹‰ i|R¥ TÛPL· AĐ‘ ÛYeLTyP].

`NÛP SP‹R Th‡›¥ ŒXeL‚ ÙYzL· “ÛR†‰ ÛYeLTyz£TRÖ¨•, CW° ÚSWUÖf «yPRÖ¨• N•TY CP†ÛR ÚSÖef i|R¥ TÛP›]Ÿ –L°• GoN¡eÛLPÁ ÙN¥¨UÖ¿ ÚLy|e ÙLÖ·[Ty|·[‰. CW«¨• ÚR|R¥ ÚYyÛP SP†‰• TÛP›]Ÿ ŒXeL‚ ÙYzLÛ[ ÙNV¥ CZeh• YÖL]†‰PÁ N•TY CP†‰eh «ÛW‹‰·[]Ÿ' GÁ¿ ÚTÖ§Í z.È.‘. ”‘‹RŸ pj i½]ÖŸ.

UÖYyP LÙXePŸ ŒLÖ• i¿•ÚTÖ‰, `˜R¦¥ ˆ«WYÖ‡L· ˜LÖ–¥ C£‹R WÖ„Y ®WŸL· —‰ ‰TÖef s|RÖÁ SP†‡·[]Ÿ. WÖ„Y†‡]£• T‡Xz ÙLÖ|†R]Ÿ. B]Ö¥, WÖ„Y ®WŸL· A‡L A[«¥ C£TÛR TÖŸ†R‰•, UÖÚYÖ›Í|L· ˜LÖÛU ˆ ÛY†‰ ÙLÖº†‡ «yP]Ÿ' GÁ\ÖŸ.

ÙTÖ¿“ H¼fÚ\Ö•

CRÂÛPÚV UÖÚYÖ›Í| ˆ«WYÖ‡L· RÛXYŸ fcÁÈ, WLpV CP†‡¥ C£‹RYÖ¿ ÚS¼½W° Œ£TŸLºeh ÚTyzV¸†RÖŸ. AÚTÖ‰, AYŸ C‹R RÖehR¨eh RjL· CVeL• ÙTÖ¿ÚT¼TRÖL ÙR¡«†RÖŸ.

ÚU¨• AYŸ i¿ÛL›¥, `GjLºeh G‡WÖL U†‡V E·‰Û\ U‹‡¡ ToÛN ÚYyÛP GÁ\ Sreh• SPYzeÛLÛV G|†‰ Y£f\ÖŸ. AY£eh T‡Xz RWÚY C‹R RÖehRÛX SP†‡Ú]Ö•. U†‡V AWr GjL· CVeL†‡]£eh G‡WÖL UÂRÖ‘UÖ]U¼\ WÖ„Y SPYzeÛLÛV Œ¿†RÖRYÛW C‰ UÖ‡¡†RÖÁ T‡¥ ÙNÖ¥ÚYÖ•' GÁ\ÖŸ.

AÛ]YÛW• ÙLÖÁ¿ «yÚPÖ•

C‹R RÖehR¦¥ 35 WÖ„Y ®WŸL· ÙLÖ¥XTyPRÖL°•, ˜LÖ–¥ AYŸL· ÛY†‡£‹R AÛ]†‰ S®] BRjLÛ[• UÖÚYÖ›Í|L· ÛLT¼½VRÖL°• AYŸ i½]ÖŸ.

UÖÚYÖ›Í|L· WÖ„Y ˜LÖÛU ˆ ÛY†‰ G¡†‰ «yPRÖL°• ÙR¡«†R AYŸ C‹R RÖehR¦¥ G†RÛ] ÚTŸ D|TyP]Ÿ GÁTÛR fcÁÈ ÙR¡«eL U¿†‰«yPÖŸ.

»»  (மேலும்)