1/07/2010

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே T.M.V.P உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு நல்குவர் - கட்சியின் பிரதித்தலைவர் ஜெயம்.



கட்சியின் பிரதித்தலைவர் ஜெயம்.

copy-of-img_1999த.ம.வி.பு கட்சியின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம் தலைமையில் த.ம.வி.பு கட்சியின் உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்று பேத்தாழை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. த.ம.வி.பு கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா உட்பட கட்சியின் முக்கியஸ்த்தர்கள் உறுப்பினர்கள் அனைவருமே இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள் இதில் கருத்து தெரிவித்த கட்சியின் பிரதித் தலைவர் ஜெயம்.

நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு த.ம.வி.பு கட்சியானது தமது பூரண ஆதரவினை வழங்குவதென உத்தியோக பூர்வமாக தமது முடிவினை அறிவித்திருக்கின்றது. இந்நிலையில் எமது கட்சியின் அங்கத்துவம் வகிக்கின்ற அனைத்து உறுப்பினர்களுமே ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ அவர்களை வெற்றிபெறச் செய்வதற்கான பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதுவரை காலமும் கிழக்கு மாகாணமானது பல்வேறு இன்னல்களுக்கும் ஆபிவிருத்தி தடைகளுக்கும் முகம் கொடுத்து வந்ததை காணக்கூடியதாக இருக்கின்றது ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணத்திலே கணிசமான அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது அதனடிப்படையில் கடந்த 20 வருடங்களாக எமது மாகாணம் அனைத்து அபவிவிருத்தி துறைகளிலுமே பின்தங்கி இருந்திருக்கின்றது. ஆனால் இன்று ஜனநாயகத்துடன் கூடிய சமாதானச் சூழல் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டிய கட்டத்தில் இருக்கின்றோம் அதனடிப்படையில் எதிர்வரும் ஜனவரி 26ல் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எமது கட்சி முழுமையான ஆதரவினை வழங்கி அதனை மக்கள் மத்தியிலும் சென்றடையச் செய்து கிழக்கு மாகாணத்திலே அமோக வெற்றியினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய பொறுப்பு எமது கட்சி மற்றும் எமது மாகாண மக்களின் கையிலேயே தங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

img_1875

img_1869

0 commentaires :

Post a Comment