1/14/2010
| 0 commentaires |
ஜனாதிபதியின் வெற்றி உறுதியாகிவிட்டது - கிழக்கு முதல்வர் ஜனாதிபதியின் வெற்றி உறுதியாகிவிட்டது - கிழக்கு முதல்வர்
எதிர்வரும் 26ம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் கடந்த காலங்களை போல் அல்லாது மிகவும் அனைவராலும் எதிர்பார்க்கக்கூடிய இருமுனை போட்டி நிறைந்த ஓர் தேர்தலாக இது அமைந்திருக்கின்றது. நாட்டின் தலைவரை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் மக்கள் வாக்குகளே செல்வாக்கு செலுத்துகின்றது. கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற அனைத்து மக்களுமே மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே தமது ஆதரவினை வழங்குவார்கள். அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து வாக்காள பெருமக்களும் தமது முழு ஆதரவினையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே வழங்குவர் இதனூடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தை பொறுத்தளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டிய முழுப் பொறுப்பும் எம்மக்களையே சார்ந்து நிற்கின்றது. மீண்டும் அவரை ஜனாதிபதியாக்குவதனூடாக கிழக்கு மாகாணம் மீண்டும் சகல வழிகளிலும் கட்டி எழுப்பப்படும் கல்வி, சுகாதாரம், மருத்துவம், நெடுஞ்சாலைகள். போக்குவரத்து சமூக நலம் சார்ந்த அபிவிருத்திகள் கட்டிட நிர்மானம் போன்ற அனைத்துத் துறைகளும் மீண்டும் நாம் கட்டி எழுப்பக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். என அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மட்டக்களப்பில் நேற்று கலந்து கொண்ட மாபெரும்; பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போது த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்
0 commentaires :
Post a Comment