ஜனாதிபதியின் சிரேஸ்ற்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷ அவர்கள். ஏதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றிக்காக பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு நேற்று மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தை வந்தடைந்த பசில் ராஜபக்ஷ அவர்கள் சித்தாண்டி முருகன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன். மட்டக்களப்பு நகரில் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் இணைந்து பல்வேறு சந்திப்புக்களையும் மேற்கொண்டார்;, அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு ஆரையம்பதி விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிரந்த பிரச்சாரக் கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றிய பின்னர் காத்தான்குடி பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். இவரின் வருகையை ஒட்டி மட்டக்களப்பு மாவட்டமே விழாக்கோலம் பூண்டது.
0 commentaires :
Post a Comment