1/24/2010

கிழக்கு மாகாண கல்விச் சமூகத்தின் வளச்சிக்காக வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் சீர்குலைக்க எதிர்கட்சிகளுடன் சில தமிழ் கட்சிகளும் இணைந்து சதி


img_4995மட்டக்களப்பு மட். செங்கலடி மத்திய கல்லூரியில் கடந்த ஜனவரி 19ம் திகதி இடம்பெற்ற ஆசிரியர்கள் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த 30 வருடங்களாக நமது சமூகத்திற்கு எந்த தமிழ் அரசியல்வாதிகளும் செய்யமுடியாதவற்றை கடந்த 20 மாதங்களில் கிழக்கு மாகாண சபை மூலம் செய்யமுடிந்த வரலாற்றுப் பெருமை எனக்கு இருப்பதை இட்டு பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். அத்தோடு எதிர்கால கிழக்கு மாகாண கல்விச் சமூகத்தின் வளச்சிக்காக வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் சிர்குலைக்க எதிர்கட்சிகளுடன் இணைந்து கொள்கையற்ற சில தமிழ் கட்சிகளும் சதி செய்வது மனவேதனைக்குரிய விடயமாகும், எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை வெற்றியடையச் செய்து மாகாண சபையில் உள்ள நிருவாகப் பிரச்சினைகள் அனைத்தையும் சீர் செய்து ஒரு பலமான மாகாண சபையை உருவாக்கி எமது கல்வி சமூகத்தை ஓர் சிறந்த முதன்மையான சமூகமாக மாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.



0 commentaires :

Post a Comment