1/17/2010

சூடுபிடிக்கும் த.ம.வி.பு கட்சியின் தேர்தல் பிரச்சாரம்


இன்று 16.01.2010 கல்குடா தேர்தல் தொகுதிக்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் சி.;சு.கட்;சியின் கல்குடா தேர்தல் தொகுதி அமைப்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார். 26ம் திகதி இடம்பெற இருக்கும் இலங்கைத்திரு நாட்டின் 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்கின்ற தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றிக்கு ஆதரவினை திரட்டும் மாபெரும் மக்கள் சந்திப்பு இன்று சந்திவெளி சித்தவிநாயகர் வித்தியாலயத்தில் கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உதய ஜீவதாஸ் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் கடந்த காலங்களை போன்று எமது கிழக்கு மாகாண மக்களை அதளபாதாளத்தில் தள்ளுவதற்காக சில விசமிகள் இன்று கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்திருந்தலும் எமது மக்கள் திடமான கொள்கையுடன் இருக்கின்றார்கள். எதிரவரும் தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிப்பதாக முடிவெடுத்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் இன்று முதல்வர் அவர்களால் அப்பிரதேசத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
img_3472

img_3498



0 commentaires :

Post a Comment