1/31/2010

யார் யாரோவெல்லாம் எம்மில் சவாரி செய்ய ..



எஸ். எம்.எம். பஷீர்


சுமார் ஒன்றரை மதத்திற்கு முன்பாக நான் எழுதிய "ஹீரோ டு ஜீரோ" (From Hero to Zero) என்ற கட்டுரையில் குறிப்பிட்ட மேற்குலக சக்திகளின் பின்னணிகள் பற்றிய அனுமானங்கள் பல என்று ஆதாரங்களாகி வருகின்றன. அட்ந்தப் பின்னணியில் இன்னுமொரு புதிய செய்தி இலண்டனில் இருந்து வெளிவரும் டெய்லிகிராப் (The Daily Telegraph) எனும் பத்திரிக்கை செய்தியுமாகும்.

அதாவது முன்னாள் பிரித்தானிய மரபுவாதக் கட்சியின் அதன் இன்றைய தலைவரான டேவிட் கமரூன் (David Cameron) பாரிய லண்டன் நகர மேயராகவிருக்கும் போரிஸ் ஜோன்சனின் (Boris Johnson) ஆகியோருக்கு ஆலோசகராகவிருந்த ஜேம்ஸ் மக்ராத்(James McGrath) என்பவர் ஜெனரல் பொன்சேகாவுக்கு அவரது தோல்வியின் பின்னரான ஹோட்டல் பத்திரிகை பேட்டி, அதனை தொடர்ந்த மகிந்தவுக்கு எதிரான அறிக்கைகளுக்கு பின்னனியிலிருந்தார்.

அப்பத்திரிக்கை மேலும் குறிப்பிடுகையில் ஜெனரல் பொன்சேகா இத்தேர்தலில் வெற்றியடைந்திருந்தால் அதன் புகழ் இவருக்கே சாரும், ஏனெனில் இவர் ஒரு மாதமாக பொன்சேகாவின் பிரச்சார செயற்பாட்டின் உபாய வகுப்பாளராக இலங்கையில் செயற்பட்டிருந்தார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. அது மாத்திரமல் மேற்குலகின் இரட்டை வேட , நயவஞ்சகத்தனமான செயற்பாட்டினை இவர் பொன்சேகாவின் மீது போர் குற்றம் சாட்டப்பட்டு உள்ளபோதும் தான் அவரை ஆதரிப்பதில் தனது மனச்சாட்சி உறுத்தவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவர் தனது ஆலோசகர் பதவியிலிருந்து 2008 ம் ஆண்டு கரிபியன் மக்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களை கூறி அதனால் ஆலோசகர் பதவியிலிருந்து விலகநேரிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று அமெரிக்க அவுஸ்திரேலியா என்று அனுதாபங்களை பெற்றுக்கொண்டு உலகை இலங்கை மீது தலையிடக் கோரும் இந்த ஜெனரல் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டயினும் மேற்குலக நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு சபதமேடுத்துள்ளார்.

இந்த நிலையில் மேற்குலக எதிர்ப்புவாதிகளான ஜே. வீ. பீ என்ன செய்யப்போகிறது, இவர் எக்கட்சியில் போட்டியிடப்போகிறார், என்ற கேள்விகளுக்கு அப்பால் மீண்டும் தொடங்கும் மிடுக்கென இலங்கையை பின்னி எடுக்கப்போகிறோம் என்று மேற்குலக ஏகாதிபத்தியங்கள் இன்னமும் உரமாக மூலோபாயங்களை மாற்றி செயற்படப்போகிரார்கள். அந்த வலையில் ஜே வீ.பீஉம இணைந்து கொள்ளலாம். ஆனால் ஏகாதிபத்திய முகவர்களான ஹக்கீம் , மனோ கணேசன், சம்பந்தன் தமது "கூட்டுப்படை தளபதி" ரணிலுடன் என்ன செய்வார்கள் எனபது தெரிந்ததுதான்.

0 commentaires :

Post a Comment