1/16/2010

ஜனாதிபதிக்கு அகில இலங்கைத் தெலுங்கு காங்கிரஸ் ஆதரவு



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே அதன் தலைவர் அன்பழகன் இதனைத் தெரிவித்தார்.

"சிறுபான்மையினருக்கு இந்நாட்டில் இடமில்லை என்று கூறிய ஜெனரல் சரத்பொன்சேகா இன்று அதனையே மாற்றிக் கூறுகிறார். ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு அல்ல. அவர் தமிழ்ப் பேசும் சிறுபான்மை மக்களை ஆதரிக்கின்றவர்.

எனவே தான் நாம் இவ்வாறானதொரு தீர்க்கமான முடிவினை எடுத்துள்ளோம்" எனவும் அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸின் தலைவர் அன்பழகன் மேலும் தெரித்தார்.

0 commentaires :

Post a Comment