1/16/2010

சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசியல் யாப்பு; தேர்தல் முறையில் மாற்றம்

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவர்களை பாராளுமன்றத்துக்கு உள்Zர்க்கும் வகையில் அரசியல் யாப்பிலும் தேர்தல் முறையிலும் மாற்றங்களை கொண்டுவர ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் இத்தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற எதிர்க்கட்சியி னருக்கு அழைப்பு விடுப்பதாக தகவல் தொடர்பாடல் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா நேற்று தெரிவித்தார். தகவல் தொடர்பாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததும் நடைமுறையில் இருந்து வரும் அரசியல் யாப்பில் நாட்டுக்கு பொருந்தக்கூடிய வகையில் மேலும் பல திருத்தங்கள் முன்னெடுக்கப்படும். இதனடிப்படையில் பாராளுமன்ற முறையிலும் தேர்தல் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படும். சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்கள் விகிதாசார முறையடிப் படையில் பாராளுமன்றத்தில் உள்Zர்க்கப் படுவார்கள். இதேவேளை மக்கள் சபை, கிராம சபை ஆகியன ஸ்தா பிக்கப்படுவதன் மூலம் கிராமங்கள் தோறும் அபிவிருத்தி செய்யப்ப டும். மேலும் தேர்த லில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத தொழிற்சங்கப் பிரதி நிதிகள் மற்றும் கல்வி மான்களை உள்ளடக்கிய செனற் சபை யொன்றை ஸ்தாபிப்பது குறித்தும் ஜனாதி பதி தனது விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இத்தகைய அரசியல் முறையினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஊழல், வன்முறைகளற்ற நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென்பது ஜனாதிபதியின் நம்பிக்கை. அரசியல் யாப்பில் மேற்குறிப்பிட்ட மாற்றங்களை கொண்டு வருவது தொடர் பில் எதிர்க்கட்சியினருடன் கலந்தாலோசித்து சில தீர்மானங்களை பெற்றுக் கொள்ள எமது கட்சி தயாராகவுள்ளது. எனவே எதிரணியினர் இதில் பங்குபற்றுமாறு நாம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். எதிரணியினர் இதற்கு இணங்காவிடின், அரசியல் யாப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை அமுலுக்குக் கொண்டு வருவோமெனவும் அமைச்சர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- நிறை வேற்று ஜனாதிபதி முறையினை இல்லாமல் செய்யப்போவதாக கூறிக் கொண்டே சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக தேர்தல் களத்தில் இறங்கி னார். அன்று ஒரு மேடையில், தான் பதவிக்கு வந்தால் நாட்டின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல அதிகாரங்களை தான் பெற்றுக்கொள்ளவிரு ப்பதாக கூறியுள்ளார். தானே தனது கருத்துக்களுடன் முரண்படுகின்றார். அவர் சொல்வதை வைத்துப் பார்த்தால் அமைச்சர்களே தேவைப்படாது போல் தெரிகிறது. ஜனாதிபதி பதவிக்கு பொன் சேகா தெரிவாகிவிடுவாரோ என்று சிறிதும் அச்சப்படத் தேவையில்லை. அவரால் ஒருபோதும் ஜனாதிபதியாகிவிட முடியாதென்பது நிச்சயம். நாட்டில் சிறுபான்மையினர் எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாகாத வகையில் விகிதாசார முறையடிப்படையில் அவர்கள் பாராளுமன்றத் துக்கு தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதே ஜனாதிபதியின் பிரதான குறிக்கோளாகுமே தவிர சுய ஆட்சி முறையில் ஸதாபிப்பது அல்ல. பயங்கரவாதிகளை அழிப்பதற்காக 26 ஆயிரம் படையினர் உயிரிழந்ததுடன் 37 ஆயிரம் பேர் வரையில் தமது கை, கால்களை இழந்துள்ளனர். தேர்தல் என்றதும் இவர்களை மறந்துவிட்டு யாருக்கும் சுயாட்சி பெற்றுக் கொடுப்பது ஜனாதிபதியின் நோக்கமல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த தேர்தலை சாதகமாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினருடன் சுய ஆட்சியை பெற்றுக்கொள்வதற்கான இரகசிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருப்பதனை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வேளை கூடவிருந்த கூட்டமைப்பிக் எம். பி. ஒருவரே வானொலி ஊடகவியலாளருடன் உரையாடுகையில் ஊர்ஜிதம் செய்துள்ளார். அது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. தேர்தலைத் தொடர்ந்து, உரிய ஒலிப்பதிவு ஆவணங்களைக் கொண்டு நாம் எதிர்க்கட்சியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம். ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினருக்கான அனைத்து உரிமைகளும் சுதந்திரங்களும் பெற்றுக்கொடுக்கப்படுவது உறுதி. இருப்பினும் அவரது ஆட்சியின் கீழ் சுயஆட்சி முறைக்கு மாத்திரம் ஒருபோதும் இடமளிக்கப்படாது. நாட்டு மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவி ருந்த பயங்கரவாதம் ஜனாதிபதியின் ஆட் சியின் கீழ் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு விட்டது. இனி நாட்டுக்கும் மக்களுக்கும் தேவைப்படுவது அபிவிருத்தியே. மஹிந்த சிந்தனையின் இரண்டாம் பாகத்தினூடாக ஐந்து பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மூன்றாம் உலக நாடாகிய இலங்கையை முதலாம் உலக நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இனி வரும் காலங்களில் புதியதொரு அபிவிருத்தி யுகத்தை இலங்கையில் காண முடியுமெனவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா மேலும் குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment