முதல்வர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக மோட்டார் வாகனங்களுக்கான அரச அனுமதிப்பத்திரம் பெறுவது கணணி மயப்படுத்தப்பட்டு இலகுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு 01.01.2010 அன்று உத்தியோகபுர்வமாக மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்கு வருகை தந்திருந்த வாகன உரிமையாளர்களுக்கு கணணி மயப்படுத்தப்பட்ட வாகன அனுமதி பத்திரங்களை வழங்கி வைத்தார்.
இதனை வழங்கி வைத்து உரையாற்றி முதலமைச்சர், கிழக்கு மாகாணத்தில் இவ்வருடம் முதல் வாகன உரிமையாளர்கள் எதிர்கொண்டிருந்த சிரமங்கள் மற்றும் காலதாமதங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றது. அத்தோடு கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற அனைத்து வாகனங்களும் வாகன உறுதிப்பத்திரங்களை சீராகப் பெறுவதின் ஊடாக, அவ்வாகனங்களை எந்த ஒரு சட்டப்பிரச்சினைகளும் இல்லாமல் பாதையில் செலுத்த முடியும். மேலும் எமது மாகாணம் ஈட்டுகின்ற வருமானத்தினையும் உயர்த்துகின்ற ஓர் விடயமாகவே இது அமையும், இவ்வாறான வருவாய் மாத்திரமன்றி விற்பனைப்புரள்வு வரி மூலமும் கிழக்கு மாகாண சபையானது தனது வருமானத்தினை ஈட்டிக் கொண்டிருக்கின்றது. அதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தளபாடங்கள் மற்றும் மூலதனப் பொருட்கள், அலுவலக உபகரணங்கள் என்பவற்றை கொள்வனவு செய்கின்றபோது எமது மாகாணத்திற்குள் கொள்வனவினை மேற்கொள்வோமாக இருந்தால் அவ்வருமானமானது எமது மாகாணத்திற்கே உரித்துடையதாகும். மாறாக பிற மாவட்டங்களிலோ அல்லது வெளி இடங்களிலோ கொள்வனவு செய்வதனால் வருமானம் வெளிச்செல்ல வாய்ப்பு ஏற்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பூ.பிரசாந்தன் பிரதேச செயலாளர் திருமதி முரளிதரன், மற்றும் உதவி அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment