1/07/2010

சரியான முடிவுக்கு மக்கள் வாருங்கள்

‘சொல்பவர் சொன்னால் கேட்போருக்கு மதி என்ன’ என்ற கேள்வி எம்மவர் மத்தி யில் பிரசித்தமானது. ஜனாதிபதித் தேர் தல் பிரசாரத்தின் போது புதிய ஜனநாயக முன்னணி வேட் பாளர் பொன்சேகா அள்ளி வழங்கும் வாக்குறுதிகளைப் பார் க்கும் போது இந்தக் கேள்வியே நினைவுக்கு வருகின்றது அரசாங்க ஊழியர்ஙகளுக்குப் பத்தாயிரம் ரூபா சம்பள உய ர்வு வழங்கப்போவதாக இந்த வேட்பாளர் கூறுவதை நம் பும் அளவுக்கு எங்கள் நாட்டு அரசாங்க ஊழியர்கள் முட் டாள்களல்ல. நாட்டின் நிதி நிலைமையைப் பொறுத்தவரை யில் இது சாத்தியமாகாது என்பது அவர்களுக்குத் தெரியும். தொழிற்சங்கமொன்று சம்பள உயர்வுக் கோரிக்கையை முன் வைக்கும் போது கூடுதலான தொகையைக் கோருவதும் அத னிலும் குறைவான தொகைக்குச் சம்மதிப்பதும் சாதாரண நடைமுறை. ஜனாதிபதி வேட்பாளரின் வாக்குறுதி தொழிற் சங்கக் கோரிக்கையைப் போன்றதல்ல. வாக்குறுதி அளித் தால் அதை அப்படியே நிறைவேற்ற வேண்டும். நிறைவே ற்ற முடியாததெனத் தெரிந்து கொண்டு வாக்குறுதி அளிப் பது மக்களை ஏமாற்றும் முயற்சி. இந்த வேட்பாளரின் எல்லா வாக்குறுதிகளும் இப்படியானவைதான். நிறைவேற்ற முடியா தனவும் அவர் ஒருபோதும் நிறைவேற்ற விரும்பாதனவு மான வாக்குறுதிகளே அவை. தமிழ் மக்கள் தொடர்பாக ஏராளம் வாக்குறுதிகளை அளிக்கின்றார். இராணுவத் தள பதியாகப் பதவி வகித்த காலத்தில் அடிக்கடி பேரினவாதக் கருத்துகளை வெளியிட்டு வந்த இவர் அவசரகால சட்ட த்தை நீக்குவார் என்றும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண் பார் என்றும் நம்புவதைப் போன்ற முட்டாள்தனம் வேறொ ன்றும் இல்லை. இலங்கை சிங்களவர்களின் நாடு என்று கனேடியப் பத்திரிகையொன்றுக்கு கூறியது மாத்திரம் இவ ரது பேரினவாத சிந்தனைக்கு உதாரணமல்ல. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட் டுள்ள மக்களை “இப்போதைக்கு மீள்குடியேற்றக் கூடாது” எனக் கூறியதையும் உதாரணமாகக் காட்டலாம். நேற்றுவரை பேரினவாதக் கருத்துகளுக்குள் ஊறித் திளைத்துக் கொண்டிருந்த ஒருவருக்கு ஆதரவளிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருப்பது ஆச்சரியமளிக்கின்றது. யுத்தத்துக்குப் பிந்திய சாதகமான நிகழ்வுகளையும் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான சாத்தியத் தன்மையையும் இவர்கள் கவனத்தில் கொள்ளாமை கவலை க்குரியது. கிழக்கு மாகாணம் பெருமளவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள் ளது. வடக்கின் பொருளாதாரம் இப்போது தலைதூக்கத் தொட ங்கியிருக்கின்றது. விவசாயமும் கடற்தொழிலும் வடபகுதி மக்களின் பிரதான வாழ்வாதாரங்கள். ஏ9 பாதை மூடப்பட் டிருந்ததால் இவ்விரு தொழில்களும் முடங்கிப் போயிருந் தன. இத் தொழில்களை நம்பியிருந்த மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். இப்போது வடக்கி லிருந்து விவசாய விளைபொருட்களும் மீன்வகைகளும் ஏ9 பாதையூடாகத் தென்னிலங்கைச் சந்தைக்கு வரக்கூடிய சூழ்நிலை தோன்றியிருப்பதால், இத் தொழில்களில் ஈடுபடு வோரின் பொருளாதாரம் வளர்நிலை காண்கின்றது. பொது வாகவே வடக்கின் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டிரு ப்பதை அங்கு பல வங்கிகள் புதிய கிளைகளைத் திறப்பதி லிருந்து விளங்கிக்கொள்ளலாம். டுள்ளது. பாதுகாப்பு வலயங்களில் எழுபது வீதமானவை அகற்றப்பட்டு விட்டன. வடக்கு, கிழ க்கு மக்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு எவ்வித கட் டுப்பாடும் இல்லாமல் சென்றுவர முடியும். இவையெல்லாம் யுத்தத்துக்குப் பின் இடம்பெற்ற சாதக நிகழ்வுகள். தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் நிகழ்வுகள். இன்னும் பல நன்மையான நிகழ்வுகள் இடம்பெறுவதற்கும் இனப் பிரச்சி னைக்கான தீர்வு முயற்சியை ஆக்கபூர்வமாக முன்னெடுப் பதற்கும் இன்றைய ஆட்சி தொடர வேண்டியது அவசிய மாகின்றது. இச்சாதக அம்சங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலை வர்கள் கவனத்தில் கொள்ளாதபோதிலும், மக்கள் இவற் றைக் கவனத்தில் எடுத்துச் சரியான முடிவுக்கு வருவார்கள் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு.

0 commentaires :

Post a Comment