த.ம.வி.பு கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெயகிஷன் தலைமையில்
இன்று வாழைச்சேனை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற அரசியல் விழிப்புணர்வுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு த.ம.வி.பு கட்சியின் தலைவரும், கிழக்கு மகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன். குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தனது உரையில் நமது சமுகங்களுக்கிடையில் இருக்கின்ற சிறிய பிரச்சனைகளுக்கெல்லாம் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் முடிவுகளை எடுக்காமல் சமரசமாகவும் சுமுகமாகவும் பேசி தீர்க்கக்கூடியவர்களாக மாற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும் அவர் தனது உரையில் நாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிப்பதற்கு பல காரணங்ள் இருப்பினும் அவர் எமக்கு கிழக்கு மாகாணத்தில் புதிய மாகாண அரசை ஏற்படுத்தி தருவேன் எனக் கூறியபடி அப்பணியை நிறைவேற்றிக்காட்டியவர். இவ்வாறு அவர் எமக்கு செய்த இப்பணிக்காக நாம் நன்றிக்கடன்பட்டவர்களாகவும் நாம் அனைவரும் அவருக்கு விருப்பு வெறுப்புக்களை தாண்டி அளிக்கின்ற வாக்குகளின் மூலம் நன்றி தெரிவிக்க வேண்டும்
எனவும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் அப்பிரதேசத்தை சேர்ந்த கழகங்களுக்கான விளையாட்ட உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment