1/05/2010

ஐ.தே.கவையும் முஸ்லிம் காங்கிரஸையும் நம்பி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் விட்டதவறை இம்முறை விடக் கூடாது அமைச்சர் அதாஉல்லா

ஐ. தே. கட்சியினரையும் முஸ்லிம் காங்கிரஸையும் நம்பி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை இம்முறையும் திருகோணமலை மாவட்ட மக்கள் விடக்கூடாது என தேசிய காங்கிரஸ் தலைவரும் தேசிய நீர் வழங்கல் வடிகாமைப்பு அமைச்சருமான ஏ. எல். எம். அதாஉல்லா தெரிவித்தார்.

கிண்ணியா நகர சபை மைதானத்தில் கடந்த 3ம் திகதி நடைபெற்ற தேசிய காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்வைபவம் தேசிய காங்கிரஸ் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபை தவிசாளருமான எச். எம். எம். பாயிஸ் தலைமையில் நடைபெற்றது.




0 commentaires :

Post a Comment