1/03/2010

ஐ.தே.க. அமைப்பாளர் திலக் கருணாரட்ன ஜனாதிபதியை ஆதரிக்க முடிவு


ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொருளாளரும், பண்டாரகம தொகுதி அமைப்பாளருமான திலக் கருணாரட்ன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளார்.

தமது ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு என்பதை வெளிப்படுத்தும் வகையில் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடந்த களுத்துறை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் தமது ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே என்பதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.



0 commentaires :

Post a Comment