2010 ஜனவரி 02ம் திகதியன்று யாழ்ப்பாணம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ஈ.டபிள்யூ. குணசேகர ஆற்றிய உரை.
சர்வதேச அரங்கில் தற்போது இடம்பெற்று வரும் ஆழமான மாற்றங்கள் பற்றி உங்களிடம் கூறுவதற்கு நான் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியாக வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன்னர், 1989ம் ஆண்டு பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட வேளையில் அதாவது சோஷலிஸ நாடான கிழக்கு ஜெர்மனி வீழ்ச்சியடைந்த வேளையில் அதைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியம் வீழ்ந்த வேளையில் பூர்ஷ்வா தலை வர்கள் சோஷலிஸம் முடிந்துவிட்டதாக ஜோதிடம் கூறினார்கள். ஆனால், நாம் எதிர்பார்த்ததைவிட வேகமாக உலக அரங்கு மாற்றமடைந்து வருகிறது. சீனாவும் இந்தியாவும் உலகப் பொருளாதார வல்லரசுகளாகத் தோற்றம் பெற்றுள்ளன. மேற்கு நாட்டு வல்லரசுகளின் 500 ஆண்டுகால ஆதிக்கத்துக்குப் பின்னர் உலகப் பொருளாதாரத்தின் கேந்திரம் ஆசியக் கண்டத்துக்கு மாறி வருகின்றது. உலக முதலாளித்துவத்தின் தொட்டில் களான அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் உலகளாவிய நிதி நெருக்கடி மோசமடைந்ததன் காரண மாகச் சரிந்துவிட்டன. லத்தீன் அமெரிக்காவின் புத்தெழுச்சி பதின்மூன்று இடதுசாரி மற்றும் இடதுசாரிக்கு ஆதரவான கட்சிகளை ஆட்சிக் கட்டில்களில் ஏற்றியது. லத்தீன் அமெரிக்காவில் பிரேசில், ஆபிரிக்காக் கண்டத்தில் தென் ஆபிரி க்கா, சீனா, இந்தியா ஆகியவற்றுடன் ஐரோப்பிய - ஆசியாவில் ரஷ்யா ஆகிய புதிய பொருளாதார மையங்கள் உலகப் பொருளாதார வல்லரசுகளில் சமநிலையை முற்றாக மாற்றி அமைத்துள்ளன. டொலரின் மதிப்பு பலவீன மடைந்துவிட்டது. உலக வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்கத்தில் 75 சதவீதம் இன்று வளர்முக நாடுகளுக்கு உரி யவை. உலக வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்கத்தில் மூன்றில் ஒரு பங்கு இப்போது சீனாவுக்கு உரியதாகும். உலக நிகழ்வுகளில் புதிய எதார்த் தங்கள் இவை. எனவே தான், இல ங்கை சம்பந்தமான விவகாரங்கள் பற்றிய சம மத்தியக் கூட்டத் தொட ர்களில் மேலைய வல்லரசுகள் தமது சொந்த எண்ணங்களை நிறைவேற்றத் தவறியுள்ளன. உலக இடதுசாரி இயக்கம் புத்துயிர் பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட்டுகள், சோஷலிஸ்ட்டுகள், இடதுசாரிக் கட்சிகள் மத்தியில் ஒருமைப்பாட்டின் உலகமயமாக்கம் இப்போது நிலவுகிறது. மக்கள் விடுதலை முன்னணி குறு கிய சிங்கள தேசிய இனவெறி அலைகளில் தனது பயணத்தை மேற் காள்கின்றது. இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற அலைகள் தனது பயணததை மேற்கொள்கின்றது. இயல் நிகழ்வு தற்போது வீழ்ச்சி கண்டு வருகின்றது. மக்கள் விடுதலை முன்னணிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் பல்வேறு பிரிவுகளாக அது பிளவுபடுவதற்கு வழி வகுத் துள்ளன. இன்று வடக்கிலும், தெற்கிலும் உள்ள இரண்டு இடதுசாரி சக்திகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஜனாதிபதித் தேர்தலில் கூட்டாக ஆதரவு திரட்டுகின்றன. எதார்த்தத்தைக் கவனத்தில் கொண்டோ மானல் வேறு தெரிவு நமக்குக் கிடையாது. உலகச் சக்திகளின் சமபல மும் இலங்கையின் அரசியல், சமூக சக்திகளின் சம பலமும் மாற்றத்துக்கு உள்ளாகி இருப்பதே இதற்குக் காரணம். கடந்த நான்கு ஆண்டுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் செயல்பட்ட விதம், ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பிரவேசத்தோடு இராணுவ ஆட்சி ஏற்படக்கூடிய ஆபத்து, இலங்கையின் விவகாரங்களில் மேற்கு நாட்டு வல்லரசுகளின் நேரடியானதும், மறைமுகமானதுமான தலையீடு, தெற்கிலும் வடக்கிலும் ஐக்கியப்பட்ட இடதுசாரி இயக்கத் துக்கான வளர்ந்தோங்கி வரும் அவ சியம் ஆகியவை இந்த எதார்த்தங்கள். இந்த நாட்டில் தேசிய ஒற்றுமையை உருவாக்குவதற்கு தென் பகுதி மக்களுடன் கைகோர்த்துச் செயல் படுமாறு வட பகுதி மக்களுக்கு எனது நேசக்கரத்தை நீட்டுகின்றேன். வட பகுதியில் உள்ள எமது தோழர்களுக்கும், இடது சாரி இயக்கத்தைச் சேர்ந்த அனைத்து சக்திகளுக்கும் பிரிந்து நிற்கும் இடது சாரி இயக்கத்தைக் கட்டியெழுப்புமாறு நான் நேசக்கரம் நீட்டுகின்றேன். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரையில் உறுதியான அடித்தளங்கள் மீது ஒரு மறு சிந்தனை ஏற்பட்டிருக்கின்றது. ஒரு புதிய சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது. எமக்கு அளிக்கப்பட்ட இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தைச் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்வோம். |
1/09/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment