இவ்வாண்டிற்கான முதலாவது கங்கண சூரிய கிரகணத்தை இன்று பார்க்கக் கூடியதாக இருக்கும்.
வடபகுதி மக்கள் இதனை தெளிவாக பார்க்கக் கூடியதாக இருக்குமென ஆதர் சி கிளார்க் நிலையம் அறிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 1.20 மணி தொடக்கம் 1.30 மணிவரை 10 நிமிடங்களும் 09 செக்கன்கள் தோன்றவுள்ள இக்கிரகணத்தை பொது மக்கள் வெற்றுக்கண்களால் பார்க்கக்கூடாது என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம், தலை மன்னார், அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் சூரிய கிரகணம் தெளிவாத தோன்றவுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் கிரகணத்தை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை ஆதர் சி. கிளாக் ஆய்வு நிலையம் செய்துள்ளது.
கிரகணத்தை பார்க்கக் கூடியவர்கள் வெற்றுக்கண்களால் பார்ப்பதை தவிர்க்குமா றும் பாதுகாப்பான உரிய முறையை பயன்படுத்துமாறும் விஞ்ஞானிகள் அறிவுறித்தியுள்ளனர். இந்த ஆண்டின் சூரிய கிரகணம் மத்திய ஆபிரிக்கப் பகுதியில் ஆரம்பித்து உகண்டா, கென்யா, சோமாலியா வழியாக இந்து சமுத்திரப் பகுதியின் ஊடாக பயணிக்கவுள்ளது.
மாலைதீவு, தென் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், சீனா ஆகிய நாடுகளிலும் தென்படும் என்று கூறப்பட்டுள்ளது. இலங்கையில் பூரண சூரிய கிரகணம் 20-06.1955 அதாவது 55 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படவுள்ளது. இதேவேளை மேல்மாகாணம் போன்ற பிரதேசங்களில் தென்பட வாய்ப்பே இல்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரியகிரகணம் இடம்பெறும் சந்தர்ப் பங்களில் நபிகள் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வணக்க வழிமுறைகள் பிரகாரம் முஸ் லிம்கள் விசேட தொழுகை, துஆப் பிரார் த்தனை போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டு பாதுகாப்பும், நற்பாக்கியமும் பெற்றுக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் கேட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment