கலாநிதி கோணாமலை கோணேசபிள்ளை B, ED. (HONS); M.A.; M.Sc.; ED.D.; PH.D. மண்டூர், மட்டக்களப்பு
இலங்கைத் தமிழர் சமூகம் சில தசாப்தங்களுக்கு முன் மிகவும் மதிப்புள்ள சமூகமாக விளங்கியது. தமிழரான பொன்னம்பலம் இராமநாதன் இலங்கை மக்களின் ஏகப் பிரதிநிதியாக சட்ட சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். பொன்னம்பலம் அருணாசலம் தேசியக் காங்கிரஸின் தலைவராக இருந்தார். வைத்திலிங்கம் துரைசாமி பாராளுமன்றத்தின் சபா நாயகராக இருந்தார். பலர் பல் கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகவும் அரசாங்க சேவையில் முக்கிய பொறு ப்புகளை ஏற்றவர்களாகவும் விளங் கினார்கள். சுயநலமும் தற்பெருமையும் தலையெடுத்தன. காலம் மாறத் தொடங்கியது. தேசியத்தன்மை தேய்ந்து தமிழ்த் தன்மை தலைதூக்கியது. தலைவர்கள் ஐம்பதுக்கு ஐம்பது கேட்டார்கள். சட்ட வல்லுநர்கள் ஆதாரங்களைக் காட்டி விவாதித்தார்கள். பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பதங்கள் உச்சரிக்கப்பட்டன. சட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விவாதங்கள் கணித அடிப்படையில் கன தூரம் செல்லவில்லை. தமிழனென்று சொல்லடா என்று சொல்லி பாரா ளுமன்றத்தில் இடம்பிடித்துக்கொண்டனர் சிலர். தேசியம் பேசியவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். பின்னர் தமிழன் என்று சொல்லடா சற்றுத் தாழ்ந்து, அமைச்சர் பதவிகள் கவர்ந்தன. ஒரு சிலர் ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி என்றனர். அதைத் தமிழரசுக் கட்சி என்றனர் தமிழில். பாராளுமன்றத்துக்குச் சென்றனர் சிலர். கூற்றுக்கள் கூச்சலில் முடிந்தன. ஆனால் நடைமுறையில் தமிழர்களின் வாழ்க்கை சிக்கல் மேல் சிக்கலாகவே சென்று கொண்டிருந்தது. தமிழுக்கு சம அந்தஸ்து வேண்டும் என்றார்கள், தமிழர்கள் மாத்திரமல்ல சில இடதுசாரிகளும் கூட. ஆனால் ஆட்சியைக் கைப்பற்ற சிங்களம் மாத்திரமே சிறந்த ஆயுதமாக உதவியது ஒரு கட்சிக்கு. சத்தியாக்கிரகம், சமா தான உடன்படிக்கைகள், கருத்தரங்குகள் ஒன்றும் பயன் அளிக்கவில்லை. பெரிய எழுத்தில் சிங்களம் சிறிய எழுத்தில் தமிழ் என்று காட்சியளித்தன அறிவித்தல் பலகைகள். தமிழருக்கு கூரிய கண்பார்வை உண்டோ என்று வினவினர் சிலர். இல்லை இது விகிதாசாரம் என்றனர். தமிழ் கற்பிப் பதற்கும் சிங்களத்தில் சித்தி தேவை யாயிற்று. ஏனென்றால் அரசியல் மொழி சிங்களம் என்றார்கள். கலவரங்கள் வந்தன. உயிர்களும் உடைமைகளும் அழிந்தன. ஆயுதம் திசை திரும்பியது. சிங்களம் மாத்திரத்தின் தந்தையை நோக்கிப் பாய்ந்தது. கட்சி மாறவில்லை. ஆனால் ஆட்சி மாறியது. தரப்படுத்தல் என்ற போர் வையில் தமிழர்கள் தள்ளிவைக்கப் பட்டார்கள். தனி நாடல்லாது வேறு வழியில்லை என்றார்கள். கட்சிகள் பல தோன்றின. இதுதான் வழி என்று ஒவ்வொரு கட்சியும் பிரகடனம் செய்தது. துவக்கே துணை என்பது சுலோகமாகிவிட்டது. எதிரான கருத்துடையவர்கள் எமலோகத்துக்குச் சென்றார்கள். ஒருவர் தீர்மானமே ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று, ஆட்சிமாறியது. இந்தியாவின் துணையோடு யாப்பில் பதின்மூன்றாம் திருத்தம் ஏற்பட்டது. தமிழும் அரசகரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனாலும் நடைமுறைப்படுத்த போதிய தட்டச்சுகள் இல்லை என்றார்கள். அதற்கும் முட்டுக்கட்டை பேச்சுவார்த்தைகள் நடந்தன. பிரயோசனம் ஏற்படவில்லை. ஆட்சி மாறியது, யுத்தமே வழியென்று யோசனை கூறப்பட்டது. விடுதலை என்னும் போர்வையில் கொடுமை தலைவிரித்தாடியது. அறிஞர்களும் அரசியல்வாதிகளும் காணாமல் போனார்கள். இரக்கமின்றிக் கொல்லப் பட்டார்கள். சொத்துகள் சூறையாடப் பட்டன. குடும்பத்தில் ஒருவர் வேண்டும் என்றார்கள். பணம் வேண்டும் அல்லது மாற்று நடவடிக்கை என்றார்கள். தமிழ்க் கட்சிகள் சில பயங்கரவாதத்தையும் தனி நாட்டையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. வேதனைமேல் வேதனை. வீட்டில் நித்திரை கொள்ள முடியாது. கோயில்களில் தஞ்சம். வீதிகளில் நடமாடமுடியாது. வீடுதோறும் சோதனை. குண்டுவெடிப்புச் சத்தம், குண்டுக்குப் பலியாயினர் பலர். வேதனைமேல் வேதனை, பொறுக்க முடியாத வேதனை. பொறுத்திருங்கள் பொற்காலம் அதோ தெரிகிறது என்றார்கள். வாழ்ந்த வீட்டை விட்டு மக்கள் காட்டிலும் முகாமிலும். வேதனைக்கு விடிவு வரவில்லை. யுத்தம் மும்முரமாக நடந்தது. வெளிநாட்டில் உள்ளவர்கள் கூக்குரல் இட்டார்கள். சில இந்திய அரசியல் வாதிகள் ஆட்சிக்கு வந்தால் ஆமியை அனுப்புவோம் என்றார்கள். யுத்தம் மேலும் மேலும் மும்முரம் அடைந்தது. ஆயிரக் கணக்கில் தமிழர்கள் அநாதைகள் ஆனார்கள். படைகள் முழுமூச்சுடன் முன்னேறின. தனிநாடு கேட்ட வீரர்கள் பலர் தஞ்சம் கோரினார்கள். தமிழ், தமிழ் என்ற அரசியல்வாதிகள் சிலர் வெளிநாடு சென்று பதுங்கிக் கொண்டார்கள். இடையே கூச்சலும் போட்டுக் கொண்டார்கள். யுத்தம் எத்தனையோ உயிர்களை ஈவிரக்கமின்றி உறிஞ்சிக்கொண்டது. உடைமைகளும் பல உயிர்களும் பல புலிகளும் போனபின் யுத்தம் முடிவுக்கு வந்தது. நாட்டின் நிலைமை மாறியது. பய ங்கரவாதமும் மற்றைய கொடுமைகளும் ஓரளவில் முடிவுற்றன. சமாதானம் பற்றி போதனைமேல் போதனை. சோதனை குறைந்தது. பொலிஸ¤க்குப் போவதும் போதும் போதும் என்றார்கள். ஓரளவு நிம்மதி. வெளிநாடுகளில் தங்கியிருந்த அரசியல்வாதிகள் நாடு திரும்பினார்கள். சமாதானத்தைக் கண்டார்கள். இதோ விடமாட்டோம் மீண்டும் தமிழ் என் றனர் சிலர். எம்மக்களை விடமாட்டோம். எடுக்கிறோம் நல்ல தீர்ப்பு என்றார்கள் சிலர். எங்களைவிட்டு விடுங்கள். நாங்கள் எந்தக் கட்சிக்கும் உடந்தை இல்லை, எந்த வேட்பாளருக்கும் சார்பில்லை என்றார்கள் சிலர். இதில் இருந்து இலங்கைத் தமிழர் கற்கும் பாடம் என்ன? ஐம்பதுக்கு ஐம்பது ஆதரவு பெறவில்லை. சமஷ்டி ஆட்சி கேட்டவர்கள் ஆட்சியில் அங்கம் வகித்தார்கள். பலன் ஏதும் பெறவில்லை. தனி நாடு சாத்தியப்பட வில்லை. ஏதோ ஒரு வகையில் சமாதானம் நிலவுகிறது. நாடெங்கும் தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் உட்பட அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. எல்லாம் நன்றாக நடைபெறுகின்றன என்று கூறமுடியாவிட்டாலும் முன்னேற்றம் உண்டு. மன்னாரோ மலைநாடோ மட்டக்களப்போ மூதூரோ முல்லைத்தீவோ திருகோணம லையோ திருக்கோவிலோ வவுனி யாவோ அக்கரைப்பற்றோ அம் பாறையோ யாழ்ப்பாணமோ எங்கு பார்த்தாலும் ஏதோ நன் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதை நாம் நன்றிக் கண்ணோடு பார்க்க வேண்டும். பிரச்சினைகள் இல் லாத நாடில்லை. ஆனால் அவற்றைத் தீர்க்க முயற்சி எடுக்கப்படுகின்றதா என்பதுதான் முக்கியம். பிரச்சினைகளை எடுத்துக் கூறவேண்டும். அவைகளை கேட்டறிந்து நிவிர்த்தி செய்யக்கூடிய ஆட்சி நடைபெறுகிறது என்பதை நாம் உணர வேண்டும். அரசாங்கத்துக்கும் சில எல்லைகள் உண்டு. ஆகவே நாம் கேட்பது எல்லாவற்றையும் உடனே நிறைவேற்ற முடியாது என்பதையும் நாம் மனதிற் கொள்ள வேண்டும். இலங்கையர் என்னும் உணர்வை விருத்திசெய்ய வேண்டும். தமிழர், தமிழர் என்று கூச்சலிட்டு வேண்டாத வெறுப்பை விருத்தி செய்வதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமான அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பண்புகளை நாம் திறந்த தியிr’ !னி நோக்க வேண்டும். மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டியுள்ள பேராளர். தலைசிறந்த தலைமைத்துவம் பொதிந்த நாட்டின் தலைவர். உயர்ந்த பண்பும் சிறந்த சிந்தனையும் பொதிந்துள்ளவர். தமிழில் பேச முயல்கிறார். நண்பன் என்று கூறுகிறார். என்னை நம்புங்கள் என்று உருக்கமாகக் கூறுகிறார். நான் உங்கள் சொந்தக்காரன் என்று உறவு கொண்டாடுகின்றார். இப்படியான அன்புள்ளம் படைத்த தன்னலமற்ற தலைவர்களுடன் இணைந்து தமிழர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு உழைக்க முன்வர வேண்டும். அறிஞர்களும் சீரிய சிந்தனையாளர் களும் நாட்டின் நலன் விரும்பிகளும் தமது கருத்துக்களை வெளியிட வேண் டும். வதந்திகளை ஒதுக்கி உண்மையைப் பரப்ப வேண்டும். நமது நாட்டுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதில் நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டும். நாட்டின் செல்வத்தை அனைவரும் அனுபவிப்பத ற்கு ஏற்ற வழிவகையைக் காண வேண்டும்
0 commentaires :
Post a Comment