1/15/2010

அரசியல் தீர்வுக்கும் அபிவிருத்திக்கும் மஹிந்தவை ஆதரிக்க வேண்டும் புலம்பெயர் தமிழர் அமைப்பின் பிரதிநிதி ராஜேஸ்வரி

அரசியல் தீர்வையும் அபிவிருத்தியையும் அடைவதற்குத் தமிழ் மக்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்க வேண்டுமென்று புலம்பெயர் தமிழர் அமைப்பின் பிரதிநிதியான எழுத்தாளர் திருமதி ரஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளுக்காகப் போராடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஓர் அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதுடன் அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுப்பார் என திருமதி பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியே தமிழர்களை முதன் முதலில் அகதியாக்கியது. தமிழ் மக்களுக்குத் தீர்வுகள் கிடைத்த போது அதனைச் சீர்குலைத்தது. தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைப்பதை இனவாதத்துடன் நோக்கிவரும் ஜே. வி. பி. யும் இம்முறை கூட்டணி சேர்ந்துள்ளது. எனவே, தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்தவையே ஆதரிக்க வேண்டும். மானமுள்ள எந்தத் தமிழனும் இதனை மறந்து செயற்பட மாட்டான் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




0 commentaires :

Post a Comment