இலங்கை போக்குவரத்து சபையின் களுவாஞ்சிக்குடிக்கான புதிய கட்டிடத்தொகுதி ஒன்று பேக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
அத்தோடு இலங்கை போக்குவரத்து சபையின் களுவாஞ்சிக்குடிக்கான டிப்போ நிருவாக கட்டிடம் அமைச்சர் அமீர்அலி மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினாலும் திறந்து வைக்கப்பட்டது. இவ்நிருவாகக்கட்டிடத்திற்கான நிதி அனர்த்த நிவாரண சேவைகள் அமைசினால் ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்;, களுவாஞ்சிக்குடி பிரதேச சபை தவிசாளர் சிவகுணம், மற்றும் போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் சிறிதரன் இலங்கை போக்குவரத்து சபை டிப்போ முகாமையாளர், சாரதிகள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment