மறைந்த தலைவர் அஷ்ரபின் புகை ப்படத்தை சரத்பொன்சேகாவின் பட த்துடன் இணைத்து போஸ்டர்கள் அச்சிடப்பட்டுள்ளன. மறைந்த அஷ் ரப் உயிருடன் இருக்கும் காலத்தில் பொன்சேகாவை கண்டிருப்பாரோ தெரியாது. முஸ்லிம் காங்கிரஸ் கால த்துக்கு காலம் தேர்தல் காலத்தில் மட்டும் அஷ்ரபின் போட்டோவை சுவர்களில் ஒட்டி முஸ்லிம்களிடம் வந்து வாக்கு கேட்கின்றனர். ஆனால் அவரது இலட்சியம் அவர் முஸ்லிம் சமூகத்தை வழிநடத்திய திட்டங்கள், அடிச்சுவடுகள் எதனையுமே முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுக்கவில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் தேர்தல் நடத்துவதற்கு பண கொடுக்கல் வாங் கல் மட்டும் பேரம் பேசி மொத்த வியாபாரி போன்று பணத்தைப் பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றார்கள். இதைத்தான் கடந்த காலங்களில் இவர்கள் செய்துவருகின்றனர் என அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார். இவ்வாறு மருதமுனையில் ஐ.பி. ரகுமான், உவைஸ் ஆசிரியர் தலை மைகளில் நடைபெற்ற கூட்டத்தி லேயே அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார். மறைந்த தலைவர் எம். எச். எம். அஷ்ரப் பயங்கரவாதிகளினாலேயே கொலைசெய்யப்பட்டார். அந்தப் பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. அதற்காகவாவது அனைத்து முஸ்லி ம்களாகிய நாம் இந்த ஜனாதிபதியை ஆதரிக்க வேண்டும். வடகிழக்கில் சகல சமூகமும் அமைதியாகவும் ஐக்கியமா கவும் வாழ்ந்து வருகிறோம். முஸ்லிம் காங்கிரஸ் தற்பொழுது உங்கள் முன் வந்து சரத் பொன்சேகாவுக்கு வாக்குப் போடச் சொல்லுகின்றனர். இந்த சரத் பொன்சேகா முஸ்லிம்களுக்கு என்ன செய்துள்ளார். அவர் இந்த நாட்டில் முஸ்லிம்கள், தமிழர் வாழக்கூடாது எனச் சொன்னவர். இதனைக் கேட்டதும் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் கொதித்து எழுந்தார். இப்போது அவர் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் சரத் பொன்சேகா எனச் சொல்லுகின்றார் என்றார்.
0 commentaires :
Post a Comment