1/10/2010

ஜனாதிபதிதேர்தலும் திண் ணைப்பேச்சு வீரர்களும்

எஸ்.எம்.எம்.பஷீர்
ஜனாதிபத்திதேர்தலும் இனப்பிரச்சினை தீர்வு எனும் மாயமான் வேட்டையும் என்ற கட்டுரையின் பின்னர் நிகழ்ந்த சில சம்பவங்கள் எனது கட்டுரையில் குறிப்பிட்ட அனுமானங்களை பின்னூட்ட கருத்துக்களை மெய்பித்திருக்கின்றன; என்பதால் அவை பற்றி எனது அண்மைய அவதானங்களை எழுதலாம் என நினைக்கிறேன் அண்மையில் ( சில தினங்களுக்கு முன்பு ) காத்தான்குடியில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் சரத் போன்செகாவுக்கான ஆதரவுக் கூட்டத்தில் பேசும்போது ஹக்கீம் புலிகளின் சென்ற ஜனாதிபதிதேர்தல் பகிஸ்கரிப்பு குறித்து " சென்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்க்ரமசிங்ஹா தோல்வி அடையச் செய்யப்பட்டார். அந்த அர்த்தமில்லாத பகிஸ்கரிப்பு இன்று மிகப்பெரிய அனர்த்தங்களை உருவாக்கியது “என்று குறிப்பிட்டார் ( அனர்த்தம் என்றால் சிலருக்கு சுனாமியும் அதற்காக அமைச்சராகவுள்ள அமீரலியும் ஞாபகம் வரலாம் ) ஒரு வேலை ஹக்கீமை பொருத்தவரைக்கும் மகிந்த ஆட்சிக்கு வந்தது அதன் பின்னரான நிகழ்வுகள் யாவுமே “அனர்த்தங்கள்” என்றால் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதும் அனர்த்தந்தான் . அவரைப்பொறுத்தவரை; ஆனால் முஸ்லிம்களை பொறுத்தவரை அதிலும் வடகிழக்கு முஸ்லிம்களை பொறுத்தவரை " புலிகளின் அழிப்பு ஒரு அனர்த்தமா என்ற கேள்வியை தங்களுக்குள் முஸ்லிம்கள் எழுப்பி அதற்கு பதிலளிக்கும் போதுதான் ஹகீம் தங்கள் சமூகத்தின் சார்பாக முட்டாள்தனமாக பேசுவதெல்லாம் தங்களின் கருத்தாக அமையாது என்பதை தெளிவு படுத்தமுடியும்; அல்லாதுவிடின் பெரும்பான்மையாக தெற்கில் வாழும் முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். ஏனெனில் அந்த அனர்த்தங்களில் மிகப்பெரிய அனர்த்தம் புலிகளின் அழிவுதான் ஏனெனில் ரணில் ஜனாதிபதியாக வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை எனது முந்திய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன் பொன்சேகாவின் சிறுபான்மை மக்களின் வரையறைகள் குறித்தும அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்றும நேஷனல் போஸ்ட் ( The National Post) எனும் கனேடிய பத்திரிகைக்கு எச்சரிக்கை செய்தி விடுத்த பொன்சேகா குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தனது அண்மைய பீ.பீ.சீ தமிழோசைக்கு அளித்த விளக்கத்தில் தான் அது குறித்து நாடாளுமன்றத்தில் பேசியிருப்பதாகவும் அது ஹன்சார்ட்டில் ( Hansard ) பதியப்படிருப்பதாகவும்; அவ்வாறு அவர் (பொன்சேகா) பேசியதை "ஏற்றுக்கொள்ளமுடியாது; ஏற்றுக்கொள்ளபோவதில்லை" என்று குறிப்பிட்டார் "அந்த விடயமாக அவரிடம் கேள்விகேட்கப்பட்டபோது அவர் அதற்கு பதிலளித்திருக்கிறார்" என்று என்ன பதில் என்று கூறாமல் பொன்சேகா பின்னர் அதிலும் மிக அண்மையில் பிறிதொரு பத்திரிக்கை ஒன்றில் குறிப்பிட்ட " ஏன் அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஜனாதிபதியானது போல் இங்கு- இலங்கையில் -ஒரு தமிழர் அல்லது முஸ்லிம் ஜனாதிபதியாக வரமுடியாது " என்று அவர் பொன்சேகாவை நியாயப்படுத்துவதையும் புரிந்து கொண்டு அடுத்த கேள்வியை அது தொடர்பில் பேட்டியாளர் கேட்க முற்பட்டபோதும் நிர்த்தாட்சண்யமாக அடுத்த கேள்விக்கு இடமளிக்காமல் ஒரே மூச்சில் அகங்காரத்துடன் பேசி முடித்து விட்டார். இன்னுமொரு விடயம் என்னவென்றால் ஹக்கீம் கூட தனது பங்குக்கு பொன்சேகா மீது கண்டனக்கனைகளை சொரிந்து அதனையும் ஹன்சார்ட் பதிவு பதிவு செய்து வைத்திருக்கிறது . இப்பொழுது காத்தான்குடியில் பொன்சேகா தான் அவ்வாறு பேசவில்லை என்று கூற யாரும் அதைக் கண்டுகொள்ளவிரும்பவில்லை, ஆனால் ஒரு கேள்வி தொக்கி நிக்கிறது ஏனெனில் பிரபல அரசியல் ஆய்வாளர் முன்னாள் சந்திரிகாவின் " உரையாக்குவோன்" எல்லாவற்றையும் விட நாகரீகமான அரசியல் என்னவென்றால் பொன்சேகா அவ்வாறு கூறவில்லை என்று அவருக்கேதிராக ஹன்சார்ட் பதிவில் தமது இன உணர்வை ஆங்காரமாக பதித்த சம்பந்தனும் ஹக்கீமும் நம்புவர்கள் அல்லது அவரது "விளக்கத்தில்" அல்லது மறுப்பில் திருப்தியடைவார்கள் என்றால் ஏன் தங்களது ஹன்சார்ட் அறிக்கையை சரி செய்யக்கூடாது (Set the record straight ). ஒரு பிழையான- தவறான கருத்து- ஒருவர் கூறவில்லை என்றால் அதற்கு எதிரான கருத்தை நிரந்தர பதிவில் இடலாமா? இதனை எதிர்கால சந்ததியினர் எவ்வாறு மதிப்பிடப்போகிறார்கள். (தொடரும்)


0 commentaires :

Post a Comment