ஜுடி தேவதாசன்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாண முதலமச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான திருமதி ஜுடி தேவதாசன் தனது புத்தாண் வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், கடந்த வருடத்தில் எமது சமுகம் அனுபவித்த சொல்லொன்னாத் துயர் நீங்கி மனக்கசப்புக்கள் வேதனைகள் அனைத்திற்கும் இறைவன் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் ஆண்டாக 2010 இருக்கும் என நம்புகின்றேன். த.ம.வி.பு கட்சியின் திருமலை மாவட்ட அமைப்பாளராக எனது சமுகத்தை கட்டியெழுப்பும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன் என உறுதிபூணுவதோடு, கிழக்கு மாகாண சபை முதலமைச்சருடன் சேர்ந்து எமது சமுகத்தை மற்றைய சமுகங்களுடன் ஈடாக்குவதற்கான திட்டங்களையும் வகுப்பேன். எமது சமுகம் தலைநிமிர்ந்து கௌரவத்துடன் வாழ புரட்சிகரமான அரசியல் தேவைப்பாடுள்ளது. இதனை த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கௌரவ முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் புத்தாண்டில் புதிய அரசியல் திருப்பத்தை எமது சமுகத்தின்பால் ஏற்படுத்த உறுதிகொண்டுள்ளளோம்.
0 commentaires :
Post a Comment